.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 30 November 2013

சிவகார்த்திகேயன் வாங்கிய முதல் சம்பளம்!

 

''இதுக்கு முன்னாடி டி.வி-யில் லைவ் நிகழ்ச்சிகளில் வந்துட்டு இருந்தீங்க. இப்போ நீங்க நடிக்கிற சினிமா ஆறு மாசம் கழிச்சு டி.வி-யில் ஒளிபரப்பாகுது. இதுக்கு பேசாம நீங்க டி.வி-யிலயே இருந்திருக்கலாமே?''

- இப்படி சில எகிடுதகடு கேள்விகளுடன் சிவகார்த்திகேயனைச் சந்தித்தேன். ஆனால், பார்ட்டி செம பக்கா!

''நீங்க சொல்றதும் உண்மைதான். 'வாழ்க்கை ஒரு வட்டம்’கிற கான்செப்ட்தான். சினிமாவில் கிடைக்குற பணம், புகழ் வேற ரேஞ்ச். அதுக்காகவாச்சும் சினிமாவிலேயே இருந்துட்டுப் போறேனே!''

''சிம்பு நடிச்சதில் பிடிச்ச படம்?''


''விண்ணைத் தாண்டி வருவாயா.''

''உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?''


''இவ்வளவு நாளா இல்ல. இப்பதாங்க கொஞ்சம் இருக்கு. அதுவே பெரிய விஷயம்!''

''நீங்கள் ரசிக்கும் எதிரி யார்?''


''எதிரினு ஒருத்தரை ஃபிக்ஸ் பண்ணிக்க முடியாது. அவரைத் தோற்கடிச்சுட்டா, 'சாதிச்சுட்டோம்’னு அப்படியே ஃப்ரீஸ் ஆகிருவோம். ஒவ்வொரு திறமைசாலியையும் தாண்டிப் போறதுதான் என் பிளான். அப்படிப் பார்த்தா, இப்போ போஸ் பாண்டிதான் என் மதிப்புக்குரிய எதிரி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ கேரக்டரை என் அடுத்த படத்தில் நான் தாண்டணும்!''

 
''நீங்க ஆட்டோகிராஃப் வாங்க நினைக்கும் பிரபலங்கள்?''


''மொத்தம் நாலு பேர். அதுல ரஜினி சார், ரஹ்மான் சார், சச்சின் மூணு பேரையும் சந்திச்சுப் பேசிட்டேன். ஆனா, அந்த நாலாவது பிரபலத்தை மட்டும் சந்திக்கவே முடியாது. அவர் மைக்கேல் ஜாக்சன்!''

''வாய்ப்பு கிடைச்சா ரியல் லைஃப்ல எந்த ஹீரோயின்கிட்ட புரப்போஸ் பண்ணுவீங்க?''

''அந்தத் தப்பு மட்டும் பண்ணவே மாட்டேன்ல. இந்தக் காதல் கசமுசாலாம் மீடியா மக்களுக்குத் தெரியாம பண்ணவே முடியாது. அதனால அப்படி எந்த யோசனையும் எனக்கு இல்லை!''

''கைவிட முடியாத கெட்ட பழக்கங்கள்!?''

''ரெண்டு இருந்துச்சு. வீட்டுக்கு எப்பவும் லேட்டாப் போறது ஒண்ணு. ஆனா, இப்ப சினிமாவில் பக்கா பிளானிங்ல எல்லா வேலையும் நடக்கிறதால, அந்தப் பழக்கம் போயிருச்சு. ரெண்டாவது பழக்கம், டென்ஷனாகிட்டா நகம் கடிக்கிறது. அதைத்தான் எப்படி விடுறதுனு தெரியலை!''

'' 'அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோமே!’னு நினைக்கிறீங்களா?''


''கல்யாணம் பண்ணின பின்னாடிதான் எனக்கு பொறுப்பு வந்திருக்கு. 'அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டோமோ’னு நியாயமா என் வொய்ஃப் ஆர்த்திதான் கவலைப்படணும்!''

''மறக்க முடியாத அடி?''

''என் அக்கா கௌரி பேரைச் சொன்னா, எனக்கு பில்டிங், பேஸ்மென்ட் எல்லாமே நடுங்க ஆரம்பிச்சிடும். ப்ளஸ் டூ-ல பிசிக்ஸ் பரீட்சைக்கு முதல் நாள் எங்க டீச்சர், அக்காவுக்கு போன் பண்ணி, 'சிவா, பிசிக்ஸ்ல ரொம்ப வீக். வீட்ல ஒழுங்கா சொல்லித்தரலைனா நிச்சயம் ஃபெயில் ஆகிடுவான்’னு சொல்லிட்டாங்க. நாலு மணி நேரம் நான்-ஸ்டாப்பா அக்கா என்னை அடி பின்னிடுச்சு. அப்புறம் ஒவ்வொரு ஃபார்முலாவா சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம் பிசிக்ஸ் ரிசல்ட்ல நான் 200-க்கு 185 மார்க். அந்த அடி இப்பவும் வலிக்குதுண்ணே!''


''சினிமால கிளாமர் ஹீரோயினா இருந்த பலர், இப்போ டி.வி. சீரியல்களில் செட்டில் ஆகிட்டாங்க. அதுல உங்களுக்குப் பிடிச்ச ஆன்ட்டி-ஹீரோயின் யாரு?''


''அடப்பாவிகளா... அவங்களை ஆன்ட்டி ஆக்கிட்டீங்களா? அவங்களையும் ஒருகாலத்துல ரசிச்சு, மகிழ்ந்து உருண்டு புரண்டவங்கதானே பாஸ் நாம! சினிமா டு சீரியல் அழகிகள்ல, வயசானாலும் அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கிற ரம்யா கிருஷ்ணனைப் பிடிக்கும்!''

''சமீபத்தில் வாங்கிய பொருள்?''


''அது கொஞ்சம் பெருசாச்சே... 'ஆடி க்யூ 5’ கார் ஒண்ணு வாங்கிருக்கேன். மகன் அவ்வளவு பெரிய கார் வாங்கினதுல, என் அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்!''

''உங்க பாப்பாவுக்கு பேர் வெச்சாச்சா?''


''நல்ல பேரை வலைவீசித் தேடிட்டு இருக்கேன். எளிமையான தமிழ் அல்லது சம்ஸ்கிருதத்தில் பேர் வெக்க ஆசை!''

''முதல் சம்பளம் எவ்வளவு?''

''விஜய் டி.வி. போட்டியில் கலந்து ஒரு அடையாளம் கிடைச்சதும், ஒரு ஊர் திருவிழாவில் பெர்ஃபார்ம் பண்ணக் கூப்பிட்டாங்க. ரெண்டு மணி நேரம் மிமிக்ரி பண்ணதுக்கு ஆஆஆஆயிரம் ரூபா கொடுத்தாங்க!''

''சென்டிமென்ட்?''


''சென்டிமென்ட்னு இல்லை. விநோதமான ஒரு பழக்கம் உண்டு. எந்தப் படத்தின் முதல் ஷோவையும் சென்னை சத்யம் தியேட்டர்லதான் பார்ப்பேன். சென்னைக்கு வந்ததுல இருந்து அங்கேயே படம் பார்க்கிறதால, அந்தத் தியேட்டர் நம்ம வாழ்க்கையில ஒரு கேரக்டராவே மாறிடுச்சு!''

''இப்போ காம்பியரிங் பண்றவங்கள்ல அடுத்த சிவகார்த்திகேயன் யார்?''

''நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்லைங்க. அப்பவும் இப்பவும் என்னைவிட பெட்டர் தொகுப்பாளர்கள் இருந்துட்டுதான் இருக்காங்க. அதெல்லாம் யார் யார்னு ரசிக மகா ஜனங்களுக்கே தெரியும்!''

யார் கடவுள் ?

கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.

கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்.

பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?

தெரியாது!


எந்த குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொல்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில் தன் பெற்றோரிடமிருந்து கற்றுகொள்வது தான் அதிகம்.


குழந்தைகளுக்கு ஒரு குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால் நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள் கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.


இது அனைவருக்கும் தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள், என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி கொள்ளமுடிவதில்லை.


கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விபட்டிருபீர்கள் !
மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ !
கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான்.


மனிதர்கள் மிகவும் புத்திசாளிகல்லவா.


திக்கற்றவனுக்கு தெய்வம் துணை!


நம்பிக்கை தான் கடவுள்!


தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை) தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை….


ஏமாறாதீர்கள்:


நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.


கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்!


ஓ! புரிந்து விட்டது. நீங்கள் கடுவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்கள் வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்.


மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, மனிதன் கடவுளை புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை.


காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் கடவுளை உணரும் ஞான கண்களை மறைக்கிறது.

ஹாக்கர் (Hacker) ஒரு முன்னுரை...?

இணையத்தில் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக தெரிந்த கொள்ளவேண்டிய முக்கியமான் விசயம், Hacking, Hackers, நாம் எவ்வாறு ஹாக் செய்ய படுகிறோம், நம்மை எவ்வாறு தற்காத்து கொல்வது, எந்த விட தடயமும் இல்லாமல் எப்படி மற்றவர்கள் சிஸ்டம்ஸ் ஹாக் செய்யவது என்பது பற்றி இந்த தொடரில் பார்க்கலாம்....



Hacking என்று சொன்ன உடன் மனதில் hacker, Swordfish, Die hard -4 என்ற படத்தில் வருவது போல ஹக்கர் அக வேண்டும் என்ற எண்ணத்தில் கூகிள் அணுகினால் உங்களுக்கு உற்படியாக ஒன்றும் கிடைக்காது. முதலில் இந்த கான்செப்ட் நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். “ Dont Learn To Hack, But Hack To Learn:

நான் நிறைய பேரை இணையத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் அனைவரும் Over nite il Obama அக வேண்டும் என்று தான் நினைகிறர்களே தவிர, கற்று கொள்ள நினைப்பது இல்லை.



Dont Search in Google by, “ How do hack gmail / facebook / twitter”

எவனோ ஓருவன் ஒரு Opensource Software செய்து அதை உங்களுக்கு இணையம் முலம இலவசமாக வழங்கி, அதில் யாருடைய password உங்களுக்கு வேண்டுமோ அதில் User ID எண்டர் செய்தால் தரும் அளவுக்கு எந்த Automated Software உம் கிடையாது,

மேலும் இது போன்ற ஒரு automated Software முலம தனது Server il Vulnerability இருக்கும் அளவுக்கு எந்த நிறுவனமும் Server Maintences பண்ண மாட்டார்கள்.

என்னவே கூகிள் இல் இது போன்று தேடுவதை நிறுத்துங்கள். ஆனால் உண்மையுள் Google is the best application to steal infromation from websites. but you have to use your KEYWORDS properly. இதை பற்றி பின் வரும் பதிவுகளில் பார்க்கலாம். ஏன் என்றால் இதை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு போடலாம். அந்த அளவுக்கு Google Hacking பற்றி இருக்கிறது.

இணையத்தில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு என்று Anti-Virus Software மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தால் உங்களை போன்று ஒரு முட்டாள் கிடையாது. Anti-virus Software என்பது உங்களது கணினியில் இருக்கும் அல்லது பாதிப்பு உண்டாக்கும் மென்பொருள் பதிவிறக்கும் பொது அலெர்ட செய்யும், மற்றும் அதை தடுக்க உங்களுக்கு ஒரு அலெர்ட் குடுக்கும், அவள்ளுவே....

அனால் Hacker’s என்பவர்கள் இது தெரியாதே மூடர்கள் அல்ல. ஹாக்கிங் என்பது ஒரு Default Systemஇல் அதன் போக்கில் சென்று அதில் உள்ள Loop-Holes என்பதை அறிந்து, அதன் முலம அந்த System மை தகர்பவர்கள்.

உங்களுக்கு புரிவது போல சில எ.கா: •
  • Ctrl+C குடுத்து நீங்கள் copy பண்ணி வைத்து இருக்கும் தகவல்களை பெறுவதற்கு சில Script Lang போதும். எதைவாது நீங்கள் காப்பி செய்து விட்டு இந்த சுட்டியை கிளிக் செய்யவும்.

இப்பொழுது நீங்கள் காப்பி செய்து வைத்து இருக்கும் தகவல் அந்த இணையத்தில் O/P அக கிடைக்கும், இதை எல்லாம் எந்த Anti-virus Software உம் தடுக்காது. இதுபோன்று சில Cookie-Stealing Programmes இருக்கின்றேன...நீங்கள் உங்களுது browser இல் Auto-Login குடுத்து வைத்து இருந்திர்கள் என்றால், I’m Sorry Bro, உங்கள் Browser, உங்களுது User-Id, & Password ai Save செய்து வைத்து இருக்கும். இது ஹாக்கர் களுக்கு மிகவும் எளிதாக உங்கள் User-Id, & Password ஐ எடுத்து கொள்ளுவார்கள்.

இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது FB & Twitter இல் Unknown Persons குடுக்கும் Link ஐ நீங்கள் Click செய்தாலே போதுமானது, அவர்களுக்கு உங்கள் தகவல் அணைத்து சென்று விடும்.

மேலும் நீங்கள் இலவச மென்பொருள் பயன்பட்துவோரக இருபிர்கள் என்றால், அது browser il automatic அஹ சில tool-box இன்ஸ்டால் பண்ணி இருந்தால் அவற்றையும் முதலில் நிக்கி விடுங்கள்.....


  • சில மாதங்களுக்கு முன்பு FB il கிட்டதிட்ட அணைத்து User ID களும் Tag செய்ய பட்டு ஒரு காணொளி வெளியானது, An Women With An Axe, நியாபகம் இருக்கிறதா... அது இது போன்ற ஒரு Cookie-Stealing Programme தான், 
  • மேலும் Twitter இல் நீங்கள் எந்த DM மும் அனுபாமல் அனால் உங்கள் followers அனைவர்க்கும் உங்களுது பெயரில் ஒரு DM சென்று இருக்கும். அதில் ஒரு விளம்பரமும், ஒரு link உம் இருந்து இருக்கும், அதை கிளிக் செய்த அனைவருது Data வும் திருட்டு போய் விடேன்.

An Unconfirmed News that, HAckers had Stealed more then 500 million FB, Twitter Accounts with that link’s.

எனவே நீங்கள் உங்களது பாஸ்வார்டு ஐ மாற்றி 6 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆயின் முதலில் மாற்றி விடுங்கள்.

FB & Twitter இல் கண்டகண்ட appஐ use பன்னுபவராக இருந்தால் முதலில் உங்கள் செட்டிங்க சென்று எண்ணென APP பயன்பாட்டில் இருக்கின்றேனே, எவை எவை தேவை இல்லை என்று கண்டோறிந்து அவற்றை முதலில் Delete செய்யுங்கள்.

முதலில் நீங்கள் எவ்வாறு எல்லாம் தாக்க படலாம் என்று அறிந்து கொண்டால், நம்மை தற்காத்துக்கொள்ளவும் முடியும், அதே முறையில் மற்றவர்களை தாக்கவும் முடியும்.

அன்புள்ள 'தல', 'தளபதி'களுக்கு...

 

ரஜினிக்கும் கமலுக்கும் ஒருசேர ரசிகராக இருக்கும் பலரைப் போல, உங்கள் இருவரின் படங்களையும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்க விழையும் ஃபேன் நான்.

தமிழ் திரையுலகில் வாரம்தோறும் படங்கள் வெளியாகின்றன. இந்தப் படம் வெற்றி, அந்தப் படம் தோல்வி என்று கணிப்பது யார் கையிலும் இல்லை.

உங்களது ரசிகர்களிடமும்கூட உங்களது படத்தின் வெற்றி, தோல்வி கிடையாது. உங்களது படம் வெளியாகும்போது, முதல் நாள் படத்தைப் பார்த்துவிட்டு, "தலைவா பின்னிட்டீங்க" என்று கூறிவிட்டால், நீங்கள் நடிக்கும் படம் ஒன்றும் வெற்றி படம் கிடையாது. அது உங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

படத்தில் நடிக்க சம்பளம் வாங்கிவிட்டு, நடிக்கும் படம் முடிவடையும் தருவாயில் இருக்கும்போது அடுத்தப் படத்தினை தேர்வுசெய்து, அதில் நடிக்கச் சென்றுவிடுகிறீர்கள். ஆனால், உங்களது படத்தினை வைத்துக்கொண்டு, உங்களது ரசிகர்கள் இணையத்தில் அடிக்கும் கூத்துகளைச் சொல்லவே இந்தத் திறந்த மடல்.

காசு கொடுத்து படம் பார்க்கும் ஒருவர், படம் பிடிக்கவில்லை என்றால், தனது கருத்தை அவரது சொந்த ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட உரிமையுண்டு. அவ்வாறு வெளியிடக் கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை. ஆனால், அது போல் கருத்துக்களை வெளியிடும் நபர்களை உங்களது ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.

வேலாயுதம், மங்காத்தா இரண்டு படப்பிடிப்பும் அருகருகே நடித்தபோது, விஜய் 'மங்காத்தா' படப்பிடிப்பிற்கு சென்று, அஜித்திற்கு கடிகாரம் அணிவித்து, "நாங்கள் எதிரிகள் அல்ல, நண்பர்கள்" என்று கூறி, நட்பு பாராட்டப்பட்டது. இப்படி நீங்கள் இருவரும் நண்பர்களாக இருக்கும் போது, உங்களது ரசிகர்களால் இணையத்தில், உங்களுக்குத் தெரியாமல் உங்கள் பெயர்களைக் களங்கப்படுத்தி வருகிறார்கள்.

சாதாரண பழிவாங்கல் கதைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று பலர் 'ஆரம்பம்' படத்தைப் பற்றி கருத்து கூறினார்கள். அதே போல், 'தலைவா' படத்திற்கும் எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகின. இவ்வாறு கருத்து கூறியவர்கள் அனைவரையுமே உங்களது ரசிகர்கள் ஒன்றிணைந்து கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தீர்த்து விட்டார்கள். அர்ச்சனை என்றால் நீங்களே அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள். படத்தை நன்றாக இல்லை என்று சொல்பவர்களை மட்டுமல்ல, அவர்களது மொத்த சந்ததியினரையும் திட்டித் தீர்த்து விட்டார்கள்.

ட்விட்டரில் உங்களையும், உங்கள் படங்களையும் போற்றுவதற்காகவும், தூற்றுவதற்காகவும் அவ்வப்போது ஹேஷ்டேக்-குகளை உருவாக்கி, அதை இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முக்கியத்துவம் பெற வைத்துவிடுகின்றனர். அவற்றில் பெரும்பாலானவையும் சும்மா வெட்டித்தனமாகவே உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் என்பது தெளிவு. அதில், உங்களது பெயருடன் இணைத்து வருகின்ற சில வாசகங்கள் இங்கே பதிய முடியாத அளவுக்கு முகம் சுளிக்க வைப்பவை. அவை அனைத்தும் இந்திய அளவில் இணையத்தில் கவனத்தை ஈர்ப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரிலாவது பரவாயில்லை... 140 எழுத்துக்கள்தான். கெட்ட வார்த்தை அர்ச்ச்னையும் குறைவாகவே இருக்கும். ஃபேஸ்புக் பக்கம் போனால், அய்யய்யய்யோ... உங்கள் ரசிகக் கண்மணிகள், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், மெய் வருத்தம் பாராமல், அந்த கர்மத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் ஏராளம். அவற்றைச் சுட்டியுடன் சுட்டிக்காட்டுவது, போர்னோவுக்கு எதிரான கட்டுரையில் போர்னோ தளங்களின் முகவரியைக் கொடுப்பது போன்றது.

தமிழ்த் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நீங்கள் நண்பர்களாக இருந்து வருகிறீர்கள் என்பது மிகவும் ஆரோக்கியமான, சந்தோஷமான விஷயம். அப்படியே, உங்களது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இத்தகைய 'அவதூறு' பக்கங்களை நீக்கச் சொல்லலாமே. அவர்கள் உங்களது தீவிர ரசிகர்கள் என்பதால், உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட வாய்ப்புண்டு.

உங்களுக்கு என்று ரசிகர்களால் நடத்தப்படும் பக்கங்கள் இருக்கின்றன. அதில் உங்கள் படங்கள், செய்திகள், சுவாரஸ்ய தகவல்கள் ஆகியவை மட்டும் வெளியிடுவதில்லை. உங்களை யாராவது விமர்சித்துவிட்டால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தினை வெளியிட்டு, "இவன் நம்ம தலைவரை கிண்டல் செய்துவிட்டான். திட்டித் தீருங்கள்" என்று போர்முரசு கொட்டுகிறார்கள்.

இப்படி உங்களது ரசிகர்கள் அடிக்கும் காமெடி கூத்துக்களுக்கு அளவில்லாமல் இருந்து வருகிறது. நீங்கள் உடனே இந்த விஷயத்தில் தலையிடாவிட்டால், வரும் காலத்தில் வேறு விபரீதங்கள் நேரவும் வாய்ப்புண்டு.

உங்களை கேட்டுக்கொள்வது எல்லாம், ஒரு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்பது மட்டுமே. இல்லையேல் வரும் காலத்தில் உங்களது ரசிகர்களின் உச்சகட்ட இணைய மோதல்களால் அவப்பெயரைச் சம்பாதிக்க போவது நீங்கள்தான்.

மரத்தினை கரையான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவது போல், உங்களது ரசிகர்கள், உங்களுக்கு இருக்கும் நற்பெயரைத் தங்களையும் அறியாமல் சமூக வலைதளங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள்.

விரைந்து முடிவெடுங்கள்.

இப்படிக்கு,

தல, தளபதி ஃபேன்

கடவுள் எங்கே இருக்கிறார்?

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன்  மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top