.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 18 January 2014

அழுத்தமில்லாத மனசு…



உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.
பசியை விற்று உணவு வாங்கினேன்.



என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.


இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி அவை நம் வீடு வரை பயணித்து விடுகின்றன.


மன அழுத்தத்தை அகற்றி மகிழ்ச்சி காண இதோ சில சக்ஸஸ் டிப்ஸ்:



1. எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தன் கருத்துக்களை பரிமாற இன்று பெரிதும் பயன்படுத்தும் கருவி தொலைபேசி. தொலைபேசியை எடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரின் எண்ணை அழுத்துகையிலேயே உங்கள் அழுத்தங்களை தளர்த்திக் கொள்ளும் விதமாக, நீளமாக மூச்சை உள்ளிழுத்து மூன்று முறை வெளியேற்றலாம். இது உங்கள் நுரையீரல் அழுத்தத்தைக் குறைக்கும்.


2. இன்று நாகரீகம் வளர்ந்த சூழ்நிலையில் நின்று செய்ய வேண்டிய வேலையை உட்கார்ந்தும் உட்கார்ந்து செய்ய வேண்டிய வேலையை நின்று கொண்டும், நடந்து கொண்டும் செய்கிறார்கள். பெரும்பாலும் உணவு உட்கொள்கிற போது உட்கார்ந்து உணவை அருந்தலாம். மகிழ்ச்சியான சூழ்நிலையில் நிதானமாக உணவருந்துதலும் மனதிற்கு மாற்றத்தையும் ஓய்வையும் அளிக்கும்.


3. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு அல்லது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு செல்லும் போதும் பலர் ஓடுகிற வாகனத்துக்குள்ளேயே மனத்தளவில் பதட்டமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். வண்டி இன்னும் வேகமாகப் போகுமென்று முன்சீட்டைத் தள்ளுபவர்களும் உண்டு. ஏனிந்த பதட்டம்? பயணங்களின் போது, நல்ல இசையைக் கேட்கலாம். அல்லது உங்களை உற்சாகப் படுத்தக்கூடிய உரைகளைக் கேட்டு ரசிக்கலாம். மனதிற்கு நிறைவான புத்தகங்களை வாசிக்கலாம்.


4. உங்கள் பரபரப்பான வேலை நாட்களிலும் ஒரு சில நிமிடங்களை கடவுளுக்கு நன்றி செலுத்த செலவிடுங்கள். நீங்கள் கடவுள் நம்பிக்கையில்லாதவராக இருந்தால் நீங்கள் நம்பும் எதுவாக இருந்தாலும் அவற்றிற்காக சில நிமிடங்கள் நன்றி செலுத்துங்கள்.


5. மன அழுத்தத்திற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மோதல். அந்த நாளில் உங்களை யாரேனும் காயப்படுத்தியிருந்தால் ஒரு நிமிடம் உங்கள் மனதை தளர்த்திக் கொண்டு, ஆழமாக மூச்சையிழுத்து பின் உங்கள் மனம் முழுவதும் அவர்களுக்கான மன்னிப்பை நிரப்பி விடுங்கள். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியும் மகிழ்ச்சியும் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணுங்கள்.


6. இன்று உங்கள் வாழ்நாளில் மிக முக்கிய நாள் என்ற நினைப்பில் ஒவ்வொரு நாளையும் உச்சபட்ச மகிழ்ச்சியுடன் வாழுங்கள். இந்த நாள் இணையற்ற நாளாக இருக்க வேண்டும் என்ற முனைப்பை அதிகப்படுத்துங்கள்.


7. நீங்கள் தோற்றுப்போனதாக நினைக்கிற தருணங்களில் நீங்கள் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திடுங்கள்.


8. உங்களை நீங்களே விரும்பப்படுகிற போதுதான் மற்றவர்களால் நீங்கள் விரும்பப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.


9. கடந்து விட்ட கடந்த காலத்தை கணக்கில் கொள்ளாமல், நிகழும் காலத்தில் நீங்கள் உருவாக்குகிற மகிழ்ச்சிதான் உங்கள் எதிர்காலம் என்பதை அறிந்து செயல்படுங்கள்.


10. உங்களிடமுள்ள ஏதேனும் ஒன்றை யாருக்கேனும் தினசரி கொடுக்கலாம். அது உங்கள் நேரமாகவோ, உங்கள் உழைப்பாகவோ உங்கள் அன்பாகவோ, உங்கள் நம்பிக்கையாகவோ கூட இருக்கலாம்.


அழுத்தம், பயம், சந்தேகம் என இன்னும் பல தடைகளை தகர்த்தெறியும் சில உத்திகள்தான் இவை. உங்கள் வெற்றிக்கதவுகளை திறக்கும் மந்திர சாவி உங்கள் மனமன்றி வேறில்லை!!

புருவங்களின் அழகுக்கு…


கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.


வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும்.


முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்ட முகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக்கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும். உதாரணமாக, சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லேசாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால், அது அழகாக இருக்காது. புருவம் பெரிதாக அழுத்தமாக இருந்தால் அழகு அதிகரிக்கும்.


புருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், புருவங்களுக்கு இடையில், அதிக இடைவெளி இருப்பதே அழகாக இருக்கும். நெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக்கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறைத்து விடும்.


மூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இருந்தால், புருவங்களுக்கு இடையேயான தூரம், குறைக்கப்பட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமில்லாத பெரிய நெற்றியை கொண்டவர்கள், புருவத்தின் அளவை பெரிதாக்கினால், நெற்றி அளவு சிறியதாகத் தெரியும். சிறிய நெற்றியை கொண்டவர்கள், நெற்றியை பெரிதாக்க, புருவத்தின் அளவை குறைக்க வேண்டும்.


புருவம் மிக சிறியதாக இருப்பவர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.

கூந்தலுக்கு வைத்தியம்


* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.


* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.


* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.


* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.


* தலைக்கு சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே போதும்.

“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்...?


இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.


ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.


அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்.


டயாஸ்போரா (Diaspora)


நான்கு மென்பொருள் வல்லுனர்கள் சேர்ந்து, முகநூலை விட ஒரு பாதுகாப்பான, மற்றும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்களுக்கே முழுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கித் தருகிறோம். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகும் என அறிவித்தனர். ஆனால் அவர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் $200,600 தொகையை 6450 பேர் சேர்ந்து இரண்டு வாரங்களிலேயே கொடுத்தனர். இப்போது Diaspora மென்பொருள் இலவசமாக கிடைகிறது., உங்கள் கல்வி, வணிக, அல்லது மக்கள் குழுவிற்காக முக நூலைப் போல ஒரு சமூக வலைதலம் வேண்டும் என்றால் இதை நிறுவி இலவசமாகப் பயன்படுத்தலாம்.



ஸ்நாப் சாட் (Snap Chat)

இதன் செயல்பாடு மிக மிக எளிமையானது. நீங்கள் உங்கள் கைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்து உங்களின் விருப்பமானவருக்கு அனுப்பினால், அவர் அந்தப் படத்தை பார்த்து முடித்த சில வினாடிகளில் அழிந்து விடும். இந்த Snap Chat மென்பொருள் இளையோர் மத்தியில் முகநூலை விட மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. TechTamil கார்த்திக் இப்படிதான் ஏதாவது சொல்லுவான் என நீங்கள் நினைத்தால், இதை படித்துப் பாருங்கள். முகநூல் முதலாளி மார்க் Snap Chat நிறுவனத்தை $3 பில்லியன் டாலருக்கு (18,600கோடி ரூபாய் ) விலை பேசினார். ஆனால் Snap Chat நிறுவனம் உங்கள் பணம் தேவையில்லை என அந்த பேரத்தை நிராகரித்தனர்.



கன்பைடு (Confide)

நீங்கள் அனுப்பும் குறுந்தகவல்களை படித்து முடித்தவுடன் அவரிடம் கேட்காமலேயே அழித்துவிடும் மென்பொருள் இது. புதிகாக வந்துள்ள இந்த மென் பொருள் snap chat அளவிற்கு வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

இளநரையை போக்க வழிகள்...?


இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.


முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.


ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.


அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர்.


ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். நரைமுடியை கருமையாக்க உதவும் சில பொருட்களை பயன்படுத்தினால் போதும். நிச்சயம் நரை முடி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.


• நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.


• வாரத்துக்கு ஒரு முறை செம்பருத்தியின் இலை மற்றும் பூவை அரைத்து, அதனை தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளித்தாலும், நரைமுடி மறைய ஆரம்பிக்கும். சுத்தமான தேங்காய் எண்ணையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை தலைக்கு தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.


• விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அதில் ஹென்னா பொடியை தூவி கட்டியில்லாதவாறு நன்கு கலந்து, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். அதிலும் இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வருவது நல்லது.


• தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்...?


வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.


பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.


மேக் -எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு பட்டன் இருக்கிறது. மாய பட்டன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த பட்டன் மீது எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் (மேக் -எவ்ரிதிங் ஓகே ) என எழுதப்பட்டிருக்கும்.


கம்ப்யூட்டர் விசைபலகையின் ஒரு விசை போல இருக்கும் அந்த பட்டனை அழுத்தினால் , எல்லாம் சரி செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற வாசகம வரும்.அதன் பிறகு எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிடப்படும். அப்படியும் எதுவும் சரியாகவில்லை என்றால், உங்கள் புரிதல் மற்றும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவும் எனும் ஆலோசனை வழங்கபடுகிறது.


எல்லாவ்ற்றையும் சரி செய்து கொள்வது நம்மிடம் தானே இருக்கிறது. எளிமையான இணையதளம். சுவாரஸ்யமானது. சிந்திக்கவும் வைக்ககூடியது.

கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்...?



புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.


புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும்.


வழக்கமான DRAM மெமரி சிப்கள், தன் ஒவ்வொரு மெமரி செல்லிலும் எலக்ட்ரிகல் சார்ஜ் பயன்படுத்தி பிட்களை (ones and zeros) ஸ்டோர் செய்திடும். ஆனால், Magnetoresistive RAM (MRAM) காந்த சக்தியைப் பயன்படுத்துகிறது. magnetic charge மூலம், பிட்கள் ஸ்டோர் செய்யப்படும். Resistive RAM (RRAM) இரண்டு லேயர் அடுக்குகளில் தயாரானதாக இருக்கும். இரண்டு அடுக்குகளும், ஒன்றுக்கொன்று வித்தியாசமான செயல்பாட்டினைக் கொண்டிருக்கும்.


இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்குப் பல சிப் தயாரிப்பாளர்கள் மாறிக் கொண்டுள்ளனர். பல நிறுவனங்களும், ஆய்வு மையங்களும் இவற்றை எளிதாகக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற் கான உரிமையைப் பெற இருப்பதாக Crossbar நிறுவனம் அறிவித்துள்ளது.


ஆனால், தற்போதைய DRAM சிப்களின் இடத்தில் இவற்றைப் பயன்படுத்த, இன்னும் பல நிலைப் பணி இந்த இரண்டு ராம் மெமரி சிப்கள் வடிவமைப்பில் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவை வெற்றிகரமாக முடியும் தருவாயில், கம்ப்யூட்டர் கட்டமைப்பில், அதன் ஸ்டோரேஜ் மற்றும் மெமரியில் பெரிய மாற்றங்கள் வரும்.


இப்போதைய பெர்சனல் கம்ப்யூட்டர்கள் DRAM சிப்களைப் பயன்படுத்தி புரோகிராம்களை இயக்குகின்றன. புரோகிராம் இயங்கத்தேவையான டேட்டாவினை ஸ்டோரேஜ் செய்திடவும் பயன்படுத்துகின்றன. இந்த சிப்களுக்கான எலக்ட்ரிகல் பவர் நிறுத்தப்படுகையில், இவற்றில் உள்ள டேட்டா நமக்குக் கிடைக்காது. ஆனால், புதிய வகை மெமரி சிப்கள் செயல்பாட்டுக்கு வருகையில், நமக்கு டேட்டா திரும்ப கிடைக்கும்.


தற்போது டேப்ளட் பி.சி.க்களில் பயன்படுத்தப்படும் Flash memory தொடர்ந்த மெமரியை வழங்குகின்றது. மின்சக்தி நீக்கிய பின்னரும், ஸ்டோரேஜ் தக்க வைக்கிறது. புதியதாக வர இருக்கும் மெமரி சிப்கள், இந்த வகையில் இவற்றையும் மிஞ்சிவிடும் எனத் தெரிகிறது.
RRAM சிப்கள், தற்போது பயன்படுத்தப்படும் மின் சக்தியில் 20 மடங்கு குறைவாகவே பயன்படுத்தும். டேட்டா எழுதும் வேகம் 20 மடங்கு அதிகமாக இருக்கும்.


NAND flash memory ஐக் காட்டிலும் ஸ்டோரேஜ் திறன் கூடுதலாக இருக்கும். உறுதியாகத் தொடர்ந்து இயங்கும் மெமரி இனி கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும். கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால், இப்போது போல பதட்டப் படாமல், மெமரியிலிருந்து மீளலாம்.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!



இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

 சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

 தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக........

 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன்


 

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித்துடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி மனம் திறந்துள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008.................


 தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top