.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label பெண்கள்!. Show all posts
Showing posts with label பெண்கள்!. Show all posts

Thursday, 9 October 2014

அழகை தரும் இயற்கை பொடி...!

அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன பொருட்களை. எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம் கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்உலர்ந்த மகிழம் பூ-200கிராம்கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்கோரைக்கிழங்கு பொடி-100கிராம்உலர்த்திய...

Wednesday, 8 October 2014

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்!

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம். கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். * கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்...

குழந்தைகள் இதய நலம் தாய்மார்கள் கையில்!

உலகம் எவ்வளவு வேகமாக மாறிவருகிறதோ அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையும் மாறிவருகிறது. உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த காலத்திலும் நோய்கள் இருந்தன. ஆனால் அவை பெரும்பாலும் இயற்கை வைத்தியத்துக்கு கட்டுப்பட்டன. தற்போது பலர் செய்யும் வேலையை ஒரு எந்திரமே செய்து விடுகிறது. சிந்திக்கும் விஷயங்களுக்கு கம்ப்யூட்டர் இல்லாமல் காரியம் நடக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. வீடியோ கேம் முன்பு உட்கார்ந்து வீணாகும் நேரம்பற்றி கவலைப்படாமலும் உடல் நலம் பாதிக்கப்படுவது தெரியாமலும் குழந்தைகள் உட்கார்ந்து இருக்கிறார்கள். குழந்தை நன்றாக சாப்பிடுவதும், கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பதும் தான் பெற்றோரின் கடமை என்று நினைக்கிறார்கள். குழந்தையை...

Monday, 20 January 2014

கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர். இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது...

Sunday, 19 January 2014

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்...?

சாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்சனைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெய் வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.இந்த பிரச்சனை போக்க இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்து நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.• கை, கால்களில் தோல் வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளை வெள்ளைக்...

பெண்களின் அழகு சாதனப்பொருட்களில் நச்சு! எச்சரிக்கை!

  இன்றைய  மார்க்கெட்டில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. எனவே அதை பெண்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.இம்மையம் நடத்திய ஆய்வில் உலக அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான முக அழகு க்ரீமில் அதிக அளவு பாதரசமும், சில வகை லிப்ஸ்டிக்கில் எஃகும் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அதிகளவு பாதரசம் சிறுநீரகத்தை பாதிக்கவும், தோலின் நிறம் மாறும் வகையிலும், அதில் வடுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அழகு...

Saturday, 18 January 2014

அழுத்தமில்லாத மனசு…

உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.பசியை விற்று உணவு வாங்கினேன்.என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி...

புருவங்களின் அழகுக்கு…

கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும்.முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்ட முகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக்கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும். உதாரணமாக, சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லேசாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால், அது...

கூந்தலுக்கு வைத்தியம்

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும்....

இளநரையை போக்க வழிகள்...?

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற...

Wednesday, 8 January 2014

‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்!

சாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணிநேர தொலைபேசி ‘104 மருத்துவ சேவை‘ திட்டத்தை கடந்த 30ம் தேதி ஜெயலலிதா துவங்கி வைத்தார். இந்நிலை யில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையை தனி வாகனம் மூலம் வீட்டிற்கே கொண்டு சென்று விடும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 30ம் தேதி துவக்கி வைத்தார்.அத்திட்டத்தின்படி, சென்னை, திருவல்லிக்கேணியில்...

Tuesday, 7 January 2014

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' - பெண்கள் ...

காதல் அரும்பிய புதிதில், காதலர்கள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?' என்று காதலி கேட்டால், காதலனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை காதலன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள்...

பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்!

ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.அத்துடன் பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம்.மேலும் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் தற்போது இரவு நேரத்தில் 96 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்போது பெரும்பாலும் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்களை கேலி செய்வது,...

Monday, 6 January 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?

மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது. சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை...

அழகு குறிப்புகள்: குதிகால் செருப்பு வாங்க போறீங்களா..?

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி...

கால் நகங்களை சுத்தம் செய்யும் வழிகள்..

ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும். இந்த வகையில் பாதங்களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.பல்வேறு விதமான காலணியுறைகளை இறுக்கமாகவும் மற்றும் பாதங்களுக்கிடையில் காற்று போய் வர போதிய இடைவெளி இல்லாதவாறும் அணிந்தால், அழுக்கான நகங்கள் கால்களை அலங்கரிக்கும் அவலமான நிலை ஏற்படும். இருக்கிறோம். ஆனால் இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது.* கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும். நீளமான கால் நகங்களை வைத்திருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்ததில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள் சுத்தமானதாக...

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி..!தேவையான பொருள்கள்:பாஸ்மதி அரிசி - 1 கிலோமட்டன் - 1/2 கிலோநெய் 250 கிராம்தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)பூண்டு - 100 கிராம்இஞ்சி - 75 கிராம்பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்பெரிய வெங்காயம் - 1/2 கிலோதக்காளி - 1/4 கிலோபச்சை மிளகாய் - 50 கிராம்எலுமிச்சை - 1பொதினா, கொத்தமல்லிதழை - கையளவுகேசரிப்பவுடர் - சிறிதளவுமுந்திரிப்பருப்பு - 50 கிராம்உப்பு - தேவையான அளவு சமையல் குறிப்பு விபரம்:செய்வது: எளிதுநபர்கள்: 4கலோரி அளவு: NAதயாராகும் நேரம்: 15 (நிமிடம்)சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)முன்னேற்பாடுகள்:1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம்...

பிரசவத்தின் பின்னும் இளமையாக இருக்கனுமா..?

சத்தான உணவுகள் உட்கொள்வதன் மூலமும், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தினாலும் உடல் குண்டாவது இயல்பு. முகம் மட்டுமல்லாது, வயிறு, இடுப்பு, உள்ளிட்ட பல இடங்களில் உடல் அமைப்பே மாறிவிடும். பிரசவத்திற்குப் பின்னர் ஒரு சிலருக்குத்தான் உடம்பு இயல்பு நிலைக்கு திரும்பும். பெரும்பாலோனோர் குண்டம்மாக்களாகவே காட்சித்தருவார்கள். இதனால் பல சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. எனவே புது அம்மாக்கள் தங்களின் பழைய உடம்பைப் பெற செய்யவேண்டிய ஏழு வழிமுறைகளை கூறியுள்ளனர் மகப்பேறு நிபுணர்கள் படியுங்களேன்.தாய்பால் கண்டிப்பாக கொடுக்கணும்பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியம். சிலர் கட்டுடல் குலைந்து விடும் என்று தாய்ப்பாலை சில மாதங்களில் நிறுத்திவிடுவார்கள்....

Sunday, 5 January 2014

பெண்கள் சேமிக்க உதவும் முதலீடுகள்..?

தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக நன்கு படித்து நல்ல வேலைக்கு செல்கின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் சம்பாதிக்கும் தொகையில் கொஞ்சமாவது எதிலாவது முதலீடு செய்தால் பிற்காலத்தில் உபயோகப்படுத்த வசதியாக இருக்கும். இதற்கான சில எளிய முதலீட்டு வழிகளை இங்கு பார்ப்போம்.1. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். தங்க நகையாகவோ அல்லது தங்க காசாகவோ வாங்கலாம். இப்பொழுதெல்லாம் இ-கோல்ட் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இது தங்கம் வாங்குவதற்கு இணையான நன்மையை தரும். இதனால் லாக்கரில் தங்கத்தை வைத்து பயப்படத் தேவையில்லை.2. பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். பங்கு பற்றிய விஷங்களை நன்கு அறிந்திருந்தால் பங்கு சந்தையில் முதலீடு செய்வதன்...

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..! இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.  * குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top