.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 10 October 2013

வியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு!


பால்வெளியில் வியாழனை விடவும் மிகப் பெரிய கோள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
பால்வெளி அண்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும், கோள்கள் உருவான விதம் குறித்தும் விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


அத்துடன் வானவெளியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து இவர்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம்.


வால் நட்சத்திரங்களின் தோற்றம், அவற்றின் பயணம் போன்ற பல தகவல்களை ஆய்வாளர்கள் தந்துள்ளனர்.


வானவெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது.


தொடர்ந்து இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது, ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்த கோள் தென்பட்டது.


இதையடுத்து புதிய கோள் இருப்பதை உறுதி செய்ய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.


இதன் பயனாக பூமியிலிருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் வியாழன் கோளைவிட எட்டு மடங்கு பெரிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில், வான்வெளியில் புதிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இக்கோளானது “எம்.ஓ.- ஏ.2011 - பி.எல்.ஜி. – 322” என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் சுற்று வட்டப்பாதை குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


டெக்ஸ்டாப் கணனிகளுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷன்!





இணைய உலாவிகளைப் பயன்படுத்தாது டெக்ஸ்டாப் கணனிகளில் யூடியூப் வீடியோக்களை பார்வையிடுவதற்கு Minitube எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரையறையற்ற வீடியோக்களை பார்வையிடும் வசதியைக் கொண்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் மூலம் புதிய முறையில் வீடியோக்களை பார்வையிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. 


அத்துடன் பார்வையிட வேண்டிய வீடியோக்களுக்கான சொற்களை டைப் செய்வதன் மூலம் விரைவாக வீடியோக்களை பெறக்கூடியதாகவும் இருக்கின்றது. 


இதன் உதவியுடன் 1080p வரையான HD வீடியோக்களை பார்வையிட முடியும். 


தரவிறக்கச் சுட்டி





50 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்!



வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.


சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.


பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.


வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:


1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.


2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.


3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.


4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.


5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.


6. வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.


7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.


8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.


9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.


10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.


11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.


13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.


14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.


15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.


16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.


17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.


18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.


19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.


20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.


21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.


22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.


23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.


24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.


25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.


26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.


27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.


28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.


29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.


30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.


31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.


32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.


33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.


34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.


35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.


36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.


37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.


38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.


39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.


40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.


41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.


42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.


43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.


44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.


45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.


46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.


47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.


48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.


49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.


50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

தமிழர்கள் வரலாறு ! - காவிரிப்பூம்பட்டினம்!

                                                        
காவிரிப்பூம்பட்டினம்



தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.


சோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.



                           


சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர்,     'மருவூர்ப் பாக்கம்',      'பட்டினப்பாக்கம்',      'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.

மருவூர்பாக்கம்:

           இது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.

பட்டினப்பாக்கம்:

            இது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர். 

கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.




 


வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் 'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.


இளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:



"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்காலின் வந்த கருங்கறி மூடையும்வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்கங்கை வாரியும் காவிரிப் பயனும் ....ஈழத் துணவும் காழகத் தாக்கமும்அரியவும் பெரியவும் நெரிய ஈண்டிவளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்பாலை 185-193).
 
மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். 



'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.


உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் 'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.



மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை "மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் " ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).



இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்


1.வெள்ளிடை மன்றம்,


2.இலஞ்சி மன்றம்,


3.பூத சதுக்கம்,


4.நெடுங்கல் நின்ற மன்றம்


5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .


மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில்


1.மலர்வனம்,


2.உய்யாவனம்,


3.சம்பாதி வனம்,


4.சுவேர வனம் மற்றும்


5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்


சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:



"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் " (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).


இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').



ஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: "மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது.




மணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக குறிப்பிடுகிறது.



அங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு "சிலபதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...




லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

 


உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே ! 


ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம். மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று…இன்று நாம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களுக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.


ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட டைப்ரைட்டர்களில் சிலிண்டர்கள் நட்டுக்குத்தலாக இருந்தன. இதனால், மேட்டரை டைப் செய்து பேப்பரை வெளியில் எடுத்துத்தான் மேட்டரை படிக்கமுடியும். முப்பதாண்டுகள் பழக்கத்துக்கு பிறகுதான், இப்போதுள்ள டைப்ரைட்டரை வடிவமைத்தார் ஹென்றி மில். 


கீ- போர்டும் முதலில் அல்ஃபபெட்டிக்கல் ஆர்டரில் தான் இருந்தது. பின்னர், ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை 'ஹோம் கீஸ்' என்றழைக்கப்படும் நடுவரிசைக்கு கொண்டுவந்தனர். அப்புறம் தான், டைப்ரைட்டர்கள் சரளமாக தடதடக்க ஆரம்பித்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2-வுக்கு மேல் கல்வியை தொடர முடியாத ஏழைகளுக்கு டைப்ரைட்டிங் கோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால், இப்போது? 


அன்று ஹவுஸ் ஃபுல்லாய் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் இன்று பழைய படங்கள் ஓடும் சினிமா கொட்டகைகள் கணக்காய் காத்தாடுகின்றன. பல ஊர்களில் இன்ஸ்டிடியூட்டுகள் மூடப்பட்டு கம்ப்யூட்டர் சென்டர்களாக மறு அவதாரம் எடுத்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் டைப்ரைட்டர்களை கம்ப்யூட்டர்கள் கபளீகரம் செய்துவிட்டன. ஒருசில அரசு அலுவலகங்களில் மட்டும் இன்னமும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை கக்கிக் கொண்டிருக்கின்றன டைப்ரைட்டர்கள் .இப்படியே போனால், அடுத்த சில ஆண்டுகளில் டைப்ரைட்டர்களை தொல்லியல் துறை சொந்தம் கொண்டாடி விடும் போலிருக்கிறது. 


டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களை கேட்டால், ‘’ஸ்ட்ரென்த் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை’’ என்று டைப்ரைட்டரைவிட வேகமாக தடக்கிறார்கள். விடுமுறையை வீணடிக்க இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவர்கள் எப்படி டைப் இன்ஸ்டிடியூட்களை தேடி வருவார்கள்? முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகி இருந்தால் தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளை எழுத முடியும். அப்புறம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலானவர்களும் என்றாகி… இப்போது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தமிழ்நாடு அரசின் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வுகளை எழுதலாம் என்றாகிவிட்டது. அதிலும் ஒரு அதிரடி சலுகையாக 6-ம் வகுப்பு பாஸானவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்பீடு டெஸ்ட் மட்டும் எழுதலாம், இரண்டாம் தாள் கிடையாது என்கிற அளவுக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்களுக்கு அடிமாட்டு ரேஞ்சுக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இத்தனை சலுகைகளை வாரித் தெளித்தாலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களில் '’தட்தடா தட்தடா' என டைப் அடித்துக் கொண்டிருந்த தாவணி பெண்களைப் போல இப்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களும் அரிதாகி விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்ஸ்டிடியூட்களிலும் ஸ்ட்ரென்த் இல்லை. தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளால் மட்டுமே இன்ஸ்டிடியூட்டுகள் ஓரளவு தள்ளாட்டத்திலாவது ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய டைப்ரைட்டர்கள் விற்பனை இல்லை என்கிறார்கள். 


இன்ஸ்டிடியூட்டுகளில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்ல முடியும். பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இபோதே ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து, ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ? 


டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!

 
அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்களை பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா. இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்களை வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புட்டின்! 


சஸ்பென்ட் செய்த கல்லூரி முதல்வரை வெட்டிக் கொன்ற மாணவர்கள் – தூத்துக்குடி பயங்கரம்!


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலுள்ள இன்பன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அக்கல்லூரி மாணவர்களால் படுகொலை செய்யப்பட்டார். கல்லூரியிலிருந்து சஸ்பென்ட் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வர் சுரேஷை படுகொலை செய்துள்ளனர்.


10 - tutugudi college

 



திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் 16 கி.மீட்டர் தொலைவில் வல்லநாடு கிராமம் உள்ளது. இங்கு இன்ப்ன்ட் ஜீசஸ் என்ற பொறியியல் கல்லூரி உள்ளது.. இங்கு சுமார் 2 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். 


இந்நிலையில் இன்று காலை கல்லூரிக்கு 9 மணியளவில் முதல்வர் சுரேஷ் காரில் வந்து இறங்கினார். இந்நேரத்தில் தயாராக இருந்த 3 பேர் கொண்ட மாணவ கும்பல் கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் கல்லூரியில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து ஓடினர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த முதல்வர் சுரேஷ் உயிருக்கு போராடியி நிலையில் பாளை., ஐகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் இவரது உயிர் பிரிந்தது. 


இந்த கொலையில் இங்கு படிக்கும் 3 மாணவர்கள் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தவகல் தெரிவிக்கிறது. இந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு முதல்வரே காரணம் என்று இவர் மீது மாணவர்கள் ஆத்திரமுற்றனர். இதனையடுத்து இவரை கொலை செய்ய மாணவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. 3 பேரும் முறப்பநாடு போலீசில் சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் இதனை உறுதி செய்யவில்லை.


கூகுளில் இனி குற்றவாளிகளின் புகைப்படம் இருக்காது!



இதுவரை கூகுள் தேடுதலில் கிடைக்காத படங்களே இல்லை என்ற நிலையில் தற்போது குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.


பொதுவாக் குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை தனது தேடுதளத்தில் இருந்து நீக்குவதால் குற்றவாளிகள் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பாக இருக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.



10 - tec police record

 


இதற்கிடையில் “சட்ட அமலாக்க கழகங்களின் உதவியுடன் இது போன்ற மக் ஷாட் புகைப்படங்களை பெற்று அவற்றை பொது மக்கள் பார்க்கும் வகையில் வெளியிடுவதற்கு என பல்வேறு வலைதளங்கள் உள்ளன. இதனை பொது சேவையாகவே கருதி செய்து வருகின்றன.


எனினும், இதனால் தங்களது குற்ற நினைவுகளில் இருந்து விடுபட்டு நல்ல பணி அல்லது வீடுகளில் வசிப்பது போன்ற எண்ணங்கள் அமைவது குற்றவாளிகளுக்கு சாத்தியமில்லாமல் போகிறது. அதிலும் கூகுள் போன்ற தேடுதளத்திலும் இது போன்ற புகைப்படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.ஆனால் இப்போதுஇது போன்ற புகைப்படங்களை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது” என்று . அந்நிறுவன செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார்.


Google to remove mug shot sites from search results

******************************** 


Google has reportedly decided to demote mug shot sites from its search results in a bid to help criminals or offenders come over the uncomfortable memory of the crimes and get a chance at not being stigmatized.

சோள ரொட்டி - சமையல்!

 Corn flour, wheat flour are mixed together. Also, ghee, salt, add a little young mallittalai hot water




என்னென்ன தேவை?


மக்காச்சோள மாவு - 2 கப்,
கோதுமை மாவு - அரை கப்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது? 


 

சோள மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். அத்துடன் நெய், உப்பு, மல்லித்தழை சேர்த்து சற்று இளம் சூடான தண்ணீர்  கொண்டு நன்கு பிசைந்து சிறிது நேரம் வைத்தபின் கனமான ரொட்டிகளாக திரட்டி தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுங்கள். பிரமாதமான  உணவு இது. ருசியும் கூட. பஞ்சாப் ஸ்பெஷல் இது. இதற்கு தால் மக்கானி மற்றும் ஒரு காரமான சப்ஜி நல்ல சைட் டிஷ்.



குறிப்பு:  




மஞ்சள் சோள மாவு பெரிய கடைகளில் கிடைக்கும். காய்ந்த மக்கா சோளத்தை மாவு மில்லிலும் அரைப்பார்கள். இதை மெல்லியதாக  விருப்பம்போல் திரட்டலாம்.


கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல் பிரச்சனை!

Dental problems that occur during pregnancy



ஹார்மோன் மாற்றங்களினால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய ஈறு அழற்சி பிரச்னை மிகவும் சகஜம். இது 2வது, 3வது மாதத்தில் தொடங்கி, 8வது மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். இதற்கு கர்ப்பகால ஈறு அழற்சி (pregnancy gingivitis)   என்று பெயர். ஈறுகளில் வீக்கம், சிவந்து, ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். மற்ற ஈறு அழற்சி மாதிரிதான்  இதுவும்.


கவனிக்கப்படா விட்டால், பற்களைச் சுற்றியுள்ள எலும்புகளை பாதித்து, திசு இழப்புக்கு வித்திடும். அரிதாக சில நேரங்களில் வீங்கிய ஈறு திசுக்களானது, அந்த இடத்தில் கட்டிகளைப் போன்று உருவாக்கலாம். அவை புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதால் பயப்படத் தேவையில்லை. அந்தக் கட்டிகள் வலியின்றி இருக்கும். சில வேளைகளில் உணவுத்துகள்கள் அதன் அடியில் புகுந்து கொண்டு, வலியை ஏற்படுத்தலாம்.


பிரசவத்துக்குப் பிறகு இது மெல்லக் குறையத் தொடங்குமே தவிர, முற்றிலும் சரியாகாது. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, முழுமையான பல் பரிசோதனை அவசியம். முதல் 3 மற்றும் கடைசி 3 மாதங்களில் பல் சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை இல்லை என்கிற பட்சத்தில், பிரசவமாகும் வரை அதைத் தள்ளிப் போடலாம்.


நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள், அவற்றின் அளவுகள் பற்றி பல் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். டெட்ராசைக்ளின் போன்ற சில மருந்துகள், கருவிலுள்ள குழந்தையின் பற்களைப் பாதிக்கும் என்பதால், அவை கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.  எக்ஸ் ரே எடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும்.


மசக்கை அதிகமுள்ள பெண்கள், அடிக்கடி வாயைக் கொப்பளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வாந்தி எடுப்பதால் உருவாகும் ஒருவித அமிலச்சுரப்பின் காரணமாக, பற்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம். பற்பசைகூட உபயோகிக்க முடியாத அளவு மசக்கை தீவிரமாக இருந்தால், மருத்துவரிடம் கேட்டு, சுவையற்ற பற்பசை வாங்கி உபயோகிக்கலாம்.


ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது!

If you paste the sticker is not pregnant!



எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளவில்லை. ‘‘இந்தக் காலத்தில் ஆபரேஷன் என்றெல்லாம்  கஷ்டப்பட வேண்டாம். பிளாஸ்திரி போல ஒரு ஒரு சின்ன பேட்ஜ்... அதைத் தோளில் ஒட்டிக் கொண்டாலே கருத்தரிக்காது. விசாரித்துப் பார்’’  என்கிறாள் என் தோழி. இது உண்மையா?


பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் செந்தாமரைச் செல்வி 



கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும்,  பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள்  அறிந்த அந்த பேட்ஜ். ‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம்.



இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக்கொள்ள வேண்டும்.  பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில்  செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.



இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச்  செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த  அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை. 90  கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பேட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு பொதுக்கருத்து உண்டு. எனவே நேரில் ஒரு  மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல்வாகுக்கு அது சரிப்படுமா என்று பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நல்லது!



HTC டிசயர் 500 ரூ.21.490 விலை-க்கு இந்தியாவில் அறிமுகம்!




HTC நிறுவனம் அதன் டிசயர் 500 ஸ்மார்ட்போன் ரூ 21.490 விலை-க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சாதனத்தில் இரட்டை சிம் ஆதரவுடன் கிடைக்கும்.


HTC டிசயர் 500 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:


1.2GHz Quad-core செயலி,


4.3 இன்ச் காட்சி,


8MP முதன்மை கேமரா,


1.6MP முன் எதிர்கொள்ளும் கேமரா,


4GB உள் நினைவகம்,


1GB ரேம்,


ஆடியோ பீட்ஸ்,


1,800 Mah பேட்டரி,


microSD 64GB வரை ஆதரிக்கும்,


அண்ட்ராய்டு 4.2 (ஜெல்லி பீன்) ஓஎஸ் இயங்குகிறது.




கூகுள் Chromebooks அக்டோபர் 17 முதல் இந்தியாவில் அறிமுகம்!



கூகுள் நிறுவனம் அக்டோபர் 17 முதல் Chromebooks இந்தியாவில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. Chromebooks-இல் மைக்ரோசாப்ட் விண்டோஸ்-க்கு பதிலாக கூகுள் Chrome OS மூலம் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் HP மற்றும் Acer தங்களது Chromebooks விற்பனையை இந்திய சந்தையில் தொடங்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 17 முதல் வாடிக்கையாளர்கள் Acer C720 அல்லது HP Chromebook 14 வாங்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. Acer C720 ரூ.22.999 விலைக்கும் மற்றும் HP Chromebook 14 ரூ.26.990 விலைக்கு கிடைக்கும். விண்டோஸ் உடன் Chrome OS ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது light மற்றும் web-based சார்ந்த பணிகள் இன்னும் பொருத்தமானதாக இருக்கும் மற்றும் Chromebook-ஐ இண்டர்நெட் உடன் இணைக்கப்படும் போது சிறப்பாக செயல்படுகிறது.



விண்டோஸ் கணினிகளில் இயங்கக்கூடிய புரோகிராம்கள் அனைத்தும் Chromebooks-இல் இயங்காது. Chromebooks-இல் வேகமாக பூட் செயல்திறன், போர்டபிளிட்டி மற்றும் சிறந்த பேட்டரி ஆயுள் அமைந்துள்ளது. Chromebooks இல் இருந்து விஷயங்களை வேகமாக மற்றும் எளிதாக செய்ய உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது. Chrome OS இயக்கப்படும் போது ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் பாதுகாப்பிற்காக மல்டிபுள் லேயர்ஸ்(multiple layers), கிளவுட் சேமிப்பு கொண்டுள்ளது.

C720:

C720 Haswell architecture அடிப்படையில் இன்டெல் செலரான் 2955U செயலி மூலம் இயக்கப்படுகிறது. திரை 11.6 இன்ச் மற்றும் 1.25kg எடையுள்ளதாக இருக்கிறது. 2GB ரேம் மற்றும் 16GB SSD சேமிப்பு உள்ளது. 8.5 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது.

Chromebook 14:


Chromebook 14 இன்டெல் செலரான் 2955U மூலம் இயக்கப்படுகிறது. 14 இன்ச் திரை மற்றும் 1.85kg எடையுள்ளதாக இருக்கிறது. இது 16GB SSD மற்றும் 4GB ரேம் உள்ளது. 9.5 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டுள்ளது. 




சாம்சங் நிறுவனம் இந்தியாவில் மூன்று புதிய அல்ட்ரா HD டிவி அறிமுகம்!




சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் அதன் F9000 வரம்பின் கீழ் இந்தியாவில் மூன்று புதிய அல்ட்ரா உயர் வரையறை (Ultra High-Definition) தொலைக்காட்சிகளை வெளியிட்டுள்ளது. இந்த தொலைக்காட்சிகள் நான்கு மடங்கு முழு HD தொலைக்காட்சி தீர்மானம் கொண்டுள்ளன மற்றும் 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 85 இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் வந்துள்ளது.


இந்நிறுவனம் 55 இன்ச் தொலைக்காட்சி ரூ.3.29 லட்சமும் மற்றும் 65 இன்ச் தொலைக்காட்சி ரூ.4,39 லட்சமும், 85 இன்ச் மாடல் ரூ.28 லட்சத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், சாம்சங் புதிய F9000 UHD தொலைக்காட்சிகளில் துல்லிய பிளாக் புரோ தொழில்நுட்பம் மற்றும் மைக்ரோ அல்டிமேட் டிம்மிங்கால் அம்சம் பயன்படுத்தப்படுகிறது. இந்த புதிய சாம்சங் UHD தொலைக்காட்சிகள் கேமரா, வீடியோ chat திறன் மற்றும் மொபைல் சாதனங்கள் கொண்டு வயர்லெஸ் மூலம் screen mirroring-க்கு பகிர்ந்துகொள்ளலாம்.  

தஞ்சாவூர் மாவட்டத்தின் வரலாறு !



தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப்

பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான்.

மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார்.

இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது.

முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகளை ஈன்றெடுத்த மண். கர்நாடக இசைத் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. காவிரி

தவழும் கவின்மிகு பூமி. தஞ்சாவூர் 8-ஆம் நுற்றாண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையரின் பெயரையே இந் நகரம்

பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைப்பெற்றது என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் தஞ்சாவூரில் உள்ளது. மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப் படுகின்றன.

பெயர் வரக் காரணமாகச் சொல்லப்படும் புராணக்கதை. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அசுரன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த

இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும்

சாலையில், பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிஷ்ணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி

நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c நவம்பர் 1 முதல் இந்தியாவில் அறிமுகம்!



ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c நவம்பர் 1 முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று அறிவித்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 5s மற்றும் ஐபோன் 5c அக்டோபர் 25-க்குள் இத்தாலி, ரஷ்யா, ஸ்பெயின் மற்றும் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. 



ஐபோன் 5s ஆப்பிள்-வடிவமைக்கப்பட்டுள்ளது A7 64-bit chip உடன் வருகின்றது. 8 மெகாபிக்சல் iSight கேமரா, ட்ரூ டோன் ஃபிளாஷ் மற்றும் டச் ஐடி கைரேகை சென்சார் உள்ள அனைத்து புதிதாக இருக்கும். ஐபோன் 5c அனைத்தும் புதிய வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது, பல நிறங்கள் மற்றும் பேக்ஸ் இண்டர்னல்ஸ் உடன் வருகின்றது. 




இப்போது இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C விலை குறிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்காவில் 16GB variant சாதனங்களின் விலை $ 649 மற்றும் $ 549 ஆகும். இந்தியாவில் ஐபோன் 5c விலை ரூ. 40,000-க்குள் இருக்கும் என்றும் மற்றும் ஐபோன் 5s விலை ரூ.50,000 மேலே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட 14 பேருக்கு விருது!



 மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் குடியரசு தலைவரின் செம்மொழி விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் 2009, 10, 2010,11ம் ஆண்டில் செம்மொழி வளர்ச்சியில் ஈடுபட்ட முனைவர்கள் 14 பேருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.



2009,10ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது ஐராவதம் மகாதேவன், அயல்நாட்டு அறிஞருக்கு வழங்கப்படும் குறள் பீட விருது செக் குடியரசை சேர்ந்த  ஐரோஸ்லாவ் வசேக், இளம் அறிஞர் விருதுகள் டி.சுரேஷ் (மதுரை), எஸ்.கல்பனா (அண்ணாமலை நகர்), ஆர்.சந்திரசேகரன் (நாமக்கல்), வாணி அறிவாளன் (சென்னை), சி.முத்தமிழ்ச்செல்வன் (சிவகாசி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



2010,11ம் ஆண்டுகான தொல்காப்பியர் விருது பேரா.தமிழண்ணல், குறள் பீட விருது இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ரால்ஸ்டன் மாருக், இளம் அறிஞர் விருதுகள் டி.சங்கையா (மதுரை), ஏ.ஜெயக்குமார் (ஆத்தூர்), ஏ.மணி (புதுச்சேரி), சி.சிதம்பரம் (காரைக்குடி), கே.சுந்தரபாண்டியன் (மதுரை) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தொல்காப்பியர் விருது மற்றும் குறள் பீட விருது பெற்றவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரொக்க பரிசு, சான்றிதழ், மேலும் இளம் அறிஞர் விருது பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


200-வது டெஸ்டுக்குப் பின் ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு!



இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.
இதனால், கடந்த சில மாதங்களாக, கிரிக்கெட் உலகில் நிலவி வந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் பட்டியல்களை மலைக்க வைத்தவரான 40 வயது சச்சின், சமீப காலமாக முழுமையான ஃபார்மில் இல்லை. இந்தச் சூழலில், தனது ஓய்வு முடிவை, பிசிசிஐ-க்குத் தெரிவித்திருக்கிறார். இதனால், 24 ஆண்டுகால அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. 


சச்சின் உருக்கம்

 
"இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என் வாழ்க்கையின் கனவு. இந்தக் கனவுடன் 24 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருக்கிறேன். 11 வயதில் இருந்து விளையாடிவரும் நிலையில், கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட கடினமாக இருக்கிறது" என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 


"இந்தியாவுக்காக விளையாடியதையும், உலகம் முழுவதும் விளையாடியதையும் மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். என் சொந்த மண்ணில் 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்காகக் காத்திருக்கிறேன். 


என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ-க்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். என்னைப் புரிந்துகொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்த என் குடும்பத்தினரும் நன்றி. 


எல்லாவற்றையும்விட, தங்களது வாழ்த்துகளாலும் பிரார்த்தனைகளாலும் என்னை மிகச் சிறப்பாக விளையாடும் வகையில் என்னை வலுவாக்கிய என் ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 


சச்சின் டெண்டுலகரின் இந்தச் செய்திக் குறிப்பை, பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ளார். 


ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் இப்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணிக்கு எதிராக இரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனை படைப்பார். 


சச்சின் டெண்டுலகரின் கடைசி மற்றும் 200-வது டெஸ்ட் போட்டி, நவம்பர் 14-ல் தொடங்கி, அவரது சொந்த ஆடுகளமான மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சச்சின்தான். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் உள்ளனர். இருவரும் தலா 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்தியாவின் ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 


முன்னதாக, 200-வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமென்று பிசிசிஐ வலியுறுத்தியதாக வெளியான தகவல்களை, அண்மையில் கிரிக்கெட் வாரியம் முழுமையாக மறுத்தது என்று குறிப்பிடத்தக்கது. 


அதேநேரத்தில், சச்சின் டெண்டுல்கர் அணியில் நீடிப்பதால், இளம் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்ற சர்ச்சையும் நீடித்து வந்தது கவனத்துக்குரியது. 


ஆலிக் மென்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!




2013ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிக் மென்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


ஸ்வீடனில் ஸ்டாக் ஹோம் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆலிக் மென்ரோ தேர்வு செய்யப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை மாலை தேர்வுக் குழு அறிவித்தது.




நாமே முடிவு செய்யவேண்டும். (நீதிக்கதை)!



ராமன் தனது மனைவியுடனும்,அவன் வளர்க்கும் குதிரையுடனும் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.

வழியில் அவனது நண்பன் முருகன்...நீயாவது...மனைவியாவது குதிரையில் அமர்ந்து செல்லலாமே என்றான்.

உடனே ராமன் தன் மனைவியை குதிரையின் மீதேற்றி அழைத்து சென்றான்.

அப்போது ராமனின் மற்றொரு நண்பன் கணேசன் வந்தான்....ராமா..உன் மனைவியை விட நீ வயதானவன்..ஆகவே நீ குதிரையின் மீதேறிச் செல்லலாமே என்றான்.உடன் மனைவியை குதிரையிலிருந்து இறக்கிவிட்டு விட்டு ராமன் குதிரை மீதேறி அமர்ந்தான்.

சிறிது தூரம் சென்றதும்..கந்தன் வந்தான்...அவன் ராமனைப் பார்த்து..'குதிரை இரண்டு பேரையுமே சுமக்குமே..இருவரும் குதிரையில் ஏறிச் செல்லலாமே' என்று சொல்ல ராமன் தன் மனைவியையும் குதிரையில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

அப்போது அவன் மற்றொரு நண்பன் சரவணன் வந்தான்.'ராமா..உனக்கு மூளை இருக்கா..குதிரை வாயில்லா மிருகம்.அதில் இருவர் ஏறி அதன் சுமையை ஏற்றலாமோ ..என்றான்.'

எப்படிச் செய்தாலும் யாரேனும் ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்..ஆகவே நாம் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் மதிப்பளித்தால் முட்டாள் பட்டம் தான் கிடைக்கும்.

ஆகவே மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு நம் மூளையை உபயோகித்து நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யவேண்டும் என ராமன் உணர்ந்தான்.
 
 

'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!



      'மனைவி கட்டிய தாஜ்மஹால்'

 'மனைவி கட்டிய தாஜ்மஹால்'
காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால்.
 அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம். அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில் மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய தாஜ்மஹால்.
 
ஹுமாயுன் என்கிற நஸ்ருதீன் ஹுமாயுன். பாபரின் புதல்வர். அக்பரின் தந்தை. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி செய்தவர். கி.பி. 1530- 40வரையிலும் 1555- 56வரையிலும் ஹுமாயுன் ஆட்சி நடந்தது. 1556ல் தனது நூலகத்தின் படிகளில் இருந்து தவறி விழுந்து எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.
 
அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மனைவி ஹமீதாபானு பேகம் விருப்பப்படி கட்டடம் எழுப்பப்பட்டது. இதற்காக பாரசீக கட்டடக்கலை நிபுணர்களான சையத் முகமது, அவரது தந்தை மிராக் கியாதுதீன் ஆகியோரை ஆப்கானிஸ்தான் ஹெரத் நகரில் பிரத்யேகமாக வரவழைத்துள்ளனர். சுமார் 8ஆண்டுகளாக கட்டடப்பணி நடந்துள்ளது. சதுரவடிவிலான அழகான நந்தவனங்கள், நீரோடைகள், நடுவே மாளிகை வடிவத்தில் நினைவிடம் என பாரசீக பாணியில் கட்டி முடிக்கப்பட்டது. செக்கச்சிவந்த சிவப்பு கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்கள் கலந்து உருவாக்கப்பட்ட இந்த கட்டடம் இன்றளவும் அதே அழகுடன் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது.
 
இதை கணவர் ஹுமாயுன் நினைவாக கட்டுவதற்கு உத்தரவிட்ட ஹமீதாபானு பேகம் இறந்தபிறகு அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, டெல்லியை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர்ஷா உள்ளிட்ட பல மன்னர்களின் கல்லறைகளும் இங்குள்ளன. 1857-ம் ஆண்டில் நடைபெற்ற கலகத்தின் போது இரண்டாம் பகதூர்ஷா இங்கே மறைந்திருந்ததாகவும், அவரை லெப்டினென்ட் ஹாட்சன் இங்கிருந்துதான் பிடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
வரலாற்று நினைவுகளையும் வனப்புகளையும் தாங்கி நிற்கும் ஹுமாயுன் கல்லறை, 1993ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 
எப்படிச் செல்வது?
 
டெல்லியிலேயே இது அமைந்துள்ளதால் எங்கிருந்தும் எளிதாக சென்றடையலாம். நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ரயில் வசதி இருக்கிறது. டெல்லியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது.

சந்தேகம் - குட்டிக்கதைகள்!




Image hosted by Photobucket.com


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.


அப்போது இறைவன், ""தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.

அடுத்தவன், ""நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,'' என்றான்.

மற்றவன், ""நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,'' என்றான்.

இன்னொருவன், ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,'' என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ""அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

""தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.

""கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

""யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, ""இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது!




0
 
0
 
0
 
 
பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது

10/10/2013 12:22:50 PM
பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது. முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11469&id1=3#sthash.NUojYLBB.dpuf
 For budget increase, Anushka film to be two parts
0
 
0
 
0
 
 
பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது

10/10/2013 12:22:50 PM
பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது. முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11469&id1=3#sthash.NUojYLBB.dpuf

பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார். 



சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. 



இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது. 


 முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்.
ஆக உள்ளது.
ஆக உள்ளது.
ஆக உள்ளது.

பெயர் மாற்றம் நடிகைகளுக்கு கை கொடுக்கிறதா?

 Actresses change of name given to the hand?

  
ராசி, சென்டிமென்ட், நியூமரலாஜி, வாஸ்து போன்ற இன்னும் என்னென்ன இருக்கிறதோ, அவ்வளவும் சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இன்றியமையாத விஷயமாகி விட்டது. பெயரை மாற்றியும், தோற்றத்தை மாற்றியும், மூக்கு ஆபரேஷன் செய்தும், எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று துடிக்கின்றனர். அந்தவகையில் பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை இப்போது அதிரடியாக மாற்றி வருகின்றனர்.



பல படங்களில் நடித்துள்ள சுனேனா, இப்போது அனுஷா என்று மாறியுள்ளார். 


வசுந்தரா, அதிசயா என்ற பெயரில் நடித்தார். ஒர்க்கவுட் ஆகவில்லை. வசுந்தரா கஷ்யப் என்ற பெயரில் நடிக்கிறார். 


அமலா பால், அனகா என்ற பெயரில் சில படங்களில் நடித்தார். ‘மைனா’ அவருக்கு மைலேஜ் கொடுக்க, மீண்டும் அமலா பால் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பிசியாக இருக்கிறார்.



 சரண்யா, சரண்யா நாக் என்று மாறினார். ஹன்சிகா மோத்வானி, இனி மோத்வானியைப் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லி விட்டார்.


மனோசித்ரா, நந்தகி ஆனார். ஒர்க்கவுட் ஆகாத நிலையில், மனுமிகா என்ற பெயரில் நடித்தார். இப்போது மனோசித்ரா ஆகியிருக்கிறார். 


சுஜா, சுஜா வாருனீ என்று பெயரை மாற்றியுள்ளார். 


ஹாசினி, இப்போது சாரிகா ஆகிவிட்டார். 


‘பேராண்மை’ வர்ஷா, அஸ்வதி என்ற பெயரில் நடிக்கிறார். 


மோனிகா, மலையாளத்தில் பார்கவி என்ற பெயரில் நடிக்கிறார். 


ஷாம்னா காசிம் முதலில் ஷாம்னா, பிறகு தாமரை என்ற பெயர்களில் நடித்தார். எதுவும் ஒர்க்கவுட் ஆகாததால், பூர்ணா என்று மாறிவிட்டார்.


 மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம். ‘அழகன் அழகி’ ஆருஷி, தற்போது ஆருஸ்ரீ என மாறியுள்ளார். 


‘அழகர்சாமியின் குதிரை’ அத்வைதா, கீர்த்தி ஆகிவிட்டார். கீர்த்திகா, ஹன்சிபா என பெயர் மாறியுள்ளார். 


‘ஊ ல ல லா’ திவ்யா பண்டாரி, கீர்த்தி பண்டாரி என்ற பெயருக்கு மாறி, மீண்டும் திவ்யா பண்டாரி ஆகிவிட்டார். 


மலையாளத்தில் ‘அபூர்வா’ என்ற பெயரில் நடித்தவர், தமிழில் ஓவியா என்ற பெயரில் நடித்து வருகிறார். 


பிரியங்கா கோத்தாரி, ‘ஜே ஜே’ மூலம் அமோகா என மாறி, பிறகு நிஷா கோத்தாரி என்ற பெயரில் நடித்து, இப்போது பிரியங்கா கோத்தாரியாக இருக்கிறார். 


தெலுங்கில் மீரா சோப்ரா பெயரில் இருப்பவர், தமிழில் நிலா என்ற பெயரில் நடிக்கிறார். மேக்னா சுந்தர் என்ற பெயரில் நடித்தவர், இன்று மேக்னா ராஜ் ஆகிவிட்டார்.


 இவ்வாறு பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை மாற்றி நடித்தாலும், பெயர் மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. இந்த லிஸ்ட்டில் ஹன்சிகா, அமலா பால் மட்டுமே முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். மற்றவர்கள் தட்டுத்தடுமாறியபடிதான் இருக்கி றார்கள்.


விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!




குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது.  விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது, 


மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என  ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு. 


இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும்.  70 நாடுகள் இணைந்து ஐநா சபை ஒப்புதலுடன் உலகம் முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

‘நான் மலாலா’ புத்தகம் விற்பனைக்கு வந்தது!


தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது.


10 - malala
 


பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.


பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதி ‘நான் மலாலா’ என்ற பெயரில் 276 பக்க புத்தகமாகி உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது..


New book from Malala Yousafzai details journey from schoolgirl to activist

****************************************


 

easy to forget she is still a teenager, and now a long way from home.The memoir I Am Malala goes some way toward redressing that balance. Published around the world on Tuesday, the book reveals a girl who likes Ugly Betty and the cooking show Masterchef, worries about her clothes and her hair, but also has an iron determination that comes from experience beyond her 16 years.The book, written with the British journalist Christina Lamb, recounts Malala’s life before and after the moment on Oct. 9, 2012, when a gunman boarded a school bus full of girls in Pakistan’s Swat Valley and asked “Who is Malala?” Then he shot her in the head.

வெட்கபட வைக்கும் புள்ளி விவரம்!



உலகிலேயே அதிகக் குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா இருப்பது குறித்து வருத்தம் மட்டுமல்ல வெட்கமும் பட வேண்டும். 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 14 வயதுக்கும் கீழே 1 கோடியே 30 லட்சம் குழந்தைகள் உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களில் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் ஏறத்தாழ 5 லட்சம் பேர்! இதில் முதன்மைத் தொழிலாளர்கள் 50.78 லட்சம் பேர். குறுந்தொழிலில் ஈடுபடுவோர் 60.89 லட்சம்.


அதன்பின் வெளியான் “தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (என்.எஸ்.எஸ்.ஓ.) 2007′ தகவல்படி தொழிலாளர் சந்தையில் 50 லட்சம் குழந்தைகள் தீவிரமாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது 5-லிருந்து 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதம்.


10 - child labour

 


அரசின் இந்தப் புள்ளிவிவரங்களை மறுக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், 5 கோடி குழந்தைகள் 5-லிருந்து 14 வயதுக்குள்ளும், 7 கோடி குழந்தைகள் 14-லிருந்து 18 வயதுக்குள்ளும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று தெரிவிக்கின்றன.


1986-இல் குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் 14 வயதுக்குக் கீழே உள்ளவர்களை “குழந்தைகள்’ என்று வரையறைத்தது. தடை செய்யப்பட வேண்டிய குழந்தைத் தொழில்கள் மற்றும் செயல்முறைகளைப்பிரிவு 3-இல் அட்டவணை “அ’ மற்றும் “ஆ’ வில் குறித்துரைத்தது.


இவ்விரண்டில் சொல்லப்படாத அனைத்து பிற தொழில்களிலும் ஈடுபடும் குழந்தைத் தொழிலாளர்களின் வேலை நேரம், வாராந்திர விடுமுறை, வேலையளிப்போர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், அனுசரிக்க வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளை – “ஒழுங்குபடுத்துதல்’ என்ற அம்சத்தின் கீழ் வரையறுத்தது.


தமிழகத்தில் மட்டும் 1997-லிருந்து 2006 வரை 12,32,050 தொழிற்சாலை ஆய்வுகளும் 6,122 விதி மீறல்களும், 4,165 குற்ற விசாரணைகளும், 11,054 குற்றங்களுக்கான தண்டனைகளும், 323 குற்ற விடுதலையும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எவ்வளவு குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்றனர், மறுவாழ்வு பெற்றனர், எந்தச் சமுதாய மக்களிடையில் வாழ்நிலையிலும் சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் வந்தது என்பதைப் பற்றிய புள்ளிவிவரங்களோ, வாழ்க்கை ஆய்வுகளோ அரசிடம் இல்லை.


2012 டிசம்பர் 4-ல் மாநிலங்களவையில், “”வரைவு குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல்) திருத்த மசோதா – 2012” தாக்கல் செய்யப்பட்டது. இது தாரா சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இக் குழு பொதுமக்கள் மற்றும் குழந்தை உரிமை ஆர்வலர்களிடமிருந்து உகந்த பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறது. இதில் முதன்மைச்சட்டப்பிரிவு 2-இல், குழந்தை என்போர் 14 வயது பூர்த்தியடைந்தவர் அல்லது 2009-ம் ஆண்டின் கட்டாயக் கல்விச்சட்டம் வகுத்துரைத்த வயது அடைந்தோர் – இதில் எது அதிகமோ அது பொருந்தும் என்று கூறுகிறது.


சட்டப்பிரிவு 3, 14 வயதுக்குள்ளான குழந்தைகள் எந்தவொருதொழிலிலும் தொழில்சார்ந்த செயல்முறைகளிலும் ஈடுபடுவதை முழுமையாகத் தடை செய்கிறது. முந்தைய சட்டத்தில் அபாயகரமற்ற தொழில்களில் ஈடுபடுத்துவதை ஒழுங்குபடுத்தலாம் என்றிருந்தது அறவே நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு குடும்பத்துக்கு உதவுவதற்காக வெளியிடங்களிலோ, வயல்வெளிகளிலோ, வீடு சார்ந்த பணிகளிலோ, வனங்களில் விளைபொருள்களைச் சேகரிக்கவோ செல்வதைத் தடை செய்யவில்லை.


அடுத்து புதியதாக பிரிவு 3 (அ)-ல் “வளரிளம் குழந்தைகள்’ என்று 14 வயது பூர்த்தியடைந்து 18 பூர்த்தியடையாத பிரிவினர் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 1992-ம் ஆண்டு இந்தியா ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்ட “சர்வதேச குழந்தை உரிமைகள் உடன்பாட்டின்படி’ 18 வயது பூர்த்தியடையாத அனைவரையும் குழந்தைகள் என்றே கருதவேண்டும். வளரிளம் பருவத்தினர் என்ற செயற்கைப் பிரிவினை 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகும்.


குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் வழங்கப்படும் சிறைத்தண்டனை, விதிக்கப்படும் அபராதம் ஆகியவை முதன்மைச் சட்டப்பிரிவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. வியாபார நோக்கத்துக்காக இக்குழந்தைகள் வேலை செய்வதை பெற்றோரோ, காப்பாளரோ அனுமதித்தால் “தண்டிக்கலாம்’ என்றும் சொல்லியுள்ளது.


அதைவிட முக்கியம் முதன்மைச்சட்டப் பிரிவு 3-இல் அட்டவணை “அ’ மற்றும் “ஆ’வில் சொல்லி தடை செய்யப்பட்ட 18 குழந்தைத் தொழில்கள், 65 செயல்முறைகளை முழுவதும் நீக்கிவிட்டது. சுரங்கம், தீப்பற்றக்கூடிய – வெடிக்கக்கூடிய பொருள்கள், அபாயகரமான தொழில் செயல்முறைகள் ஆகிய 3-இல் மட்டும் குழந்தைத் தொழிலாளர்களை கட்டாயம் ஈடுபடுத்தக்கூடாது என்று பொத்தம் பொதுவாகக் கூறியிருக்கிறது. இது, பழைய சட்டமே பரவாயில்லை என்ற அளவுக்கு இருக்கிறது.
பிரிவு 14 (அ), இச்சட்டம் மீறுவதை குற்றச் செயலாக, காவல்துறை வழக்காகப் பதிந்து நீதிமன்ற நிவாரணம் மூலம் தண்டிக்கப்படக்கூடிய குற்றமாக வரையறைத்துள்ளது. இது குழந்தை உரிமை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.


பிரிவு 17 (அ), இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரத்தையும் கடமையையும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கியுள்ளது.
பிரிவு 17 (ஆ), அபாயகரமான தொழில், தொழில் செயல்முறை இடங்களுக்குச் சென்று குழந்தைத் தொழிலாளர் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்று ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.


இப்புதிய சட்டத்தில் மறுவாழ்வுக்கு என்று தனி விதிகள் உருவாக்கப்படவில்லை. திருத்தங்கள் போதாது.


மலர்ந்து மணம்பரப்ப வேண்டிய இளம் தளிர்கள், குடும்ப வறுமை காரணமாக இளவயதுத் தொழிலாளியாக வேலைபார்த்து தங்களுடைய குழந்தைப் பருவத்தையும் மகிழ்ச்சியையும் தொலைத்து மலர்வதற்குப் பதிலாக வெம்பி,கருகி உதிர்ந்துவிடுகின்றனர். இந்த அவலநிலை நீங்க அரசு, தன்னார்வத் தொண்டர்கள், மக்கள் என்று அனைவரும் பாடுபட வேண்டும்.

(பி. கிருஷ்ணமூர்த்தி) தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர் நோக்கம் சார்பான குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர்).

2020-க்கு பிறகு சாக்லேட் சாமான்யர்களுக்கு எட்டாத அரிபொருளாகி விடுமாக்கும்!


கொஞ்சுண்டு சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி அதிகளவில் சாப்பிடுவதால் போதைக்கு அடிமையானவர்களாக மாறவும் வாய்ப்புள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதிலும் அதிக அளவு சாக்லேட் சாப்பிடுவதால் போதையில் தள்ளப்படுவர்களாம்! மேலும் அபின் போன்ற போதை மருந்து சாப்பிடுவர் போன்று அடிமையாக மாறி விடுவர்கள் என்று ஒரு அதிர்ச்சி தரும் தகவல் மிக்சிகன் பல்கலைக்கழக ஆய்வில் ஆய்வாளர்கள் கண்டறிந்து சொல்லியிருந்தனர்ர்.


10 - choclets.MINI

 

அதாவது இயற்கையாவே நம் மூளையினுள் என்கெப்லின் என்ற ரசாயன திரவம் உள்ளது. சாக்லேட் அதிகம் சாப்பிடும் போது என்கெப்லின் திரவம் இரு மடங்காக சுரக்கின்றது. எனவே மூளைக்கு செல்லும் உணர்வு நரம்புகளை பாதித்து செயலிழக்க செய்து போதையை உண்டாக்குகிறது.எனவே தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவது, அபின் போன்ற போதை பொருள் சாப்பிடுவதற்கு சமம் என்றுதான் மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.


ஆனாலும் இப்போதும் குழந்தைகள் முதல் முதியவர் வரை சாக்லேட் என்ற மந்திர வார்த்தையை கேட்டவுடன் இளமுறுகலான அந்த பொன்னிறமும், மனதை சுண்டி இழுக்கும் அதன் மணமும், சுவையும் நாக்கில் நீரை சுரக்கச் செய்து விடுவதை யாரும் தடுக்க இயலாது.


என்வே கோக்கோ என்னும் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் அசல் சாக்லேட்களுக்கு உலகளாவிய அளவில் கடும் கிராக்கி உள்ளது. ஒருபுறம் சாக்லேட் பிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் மற்றொரு புறம், கோக்கோவை பயிரிடும் விளை நிலங்கள் நாளடைவில் குறுகிக்கெண்டே போகின்றன.கோக்கோவை பணப் பயிராக விளைவித்து வந்த விவசாயிகள் பலர் தற்போது அதிக லாபம் தரக்கூடிய ரப்பர் மரத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கி விட்டனர்.


தரமான கோக்கோ விளைச்சலுக்கு பெயர் போன தென்னாப்பிரிக்க நாடுகளும் இனி கோக்கோவை பயிரிடுவதால் பெரிய லாபத்தை பார்க்க முடியாது என்று முடிவெடுத்து விட்டது. இந்நிலையில், தேர்வில் ‘பாஸ்’ ஆகிய செய்தியை சொல்ல, காதலை வெளிப்படுத்த என ஆண்-பெண் இருபாலருக்கும் அருமையான தூதுவனாக இருந்து வந்த சாக்லேட்டின் விலை தாறுமாறாக எகிறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 


அதுவும், முழுக்க முகுக்க பதப்படுத்திய கிரீமி சாக்லேட்களுக்கு பதிலாக, சிறிதளவு சாக்லேட் கலக்கப்பட்ட மொறுமொறுப்பான ‘வேஃபர்’ வகைகள் தான் சந்தையில் கிடைக்கும்.ஆக -2020-க்கு பிறகு தூய சாக்லேட் என்பது சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாத அரிபொருளாகி விடும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்..


தாம்பத்ய உறவால் விளையும் நன்மைகளின் பட்டியல்!


தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும்,புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட தாம்பத்ய உறவு குறைக்கிறது என்றும் சமீப கால ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன .தற்போது தாம்பத்ய உறவு என்பது உடலுக்கு பல நன்மைகளைத் தரக்கூடிய மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றே கூறுகின்றனர. உறவின் போது ஏற்படும் அசைவுகளினால் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் மட்டுமல்லாமல் முதுகுத்தண்டுவடப் பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன. அதோடு முதுகுத் தண்டுவடப் பகுதியில் உள்ள சிறிய முட்கள்போன்ற எலும்பு அமைப்புகளும் சிதைவு மாற்றங்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்படுகின்றன.


9 - sex_

 



அத்துடன் உடலுறவினால் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட வலிமை கூடுவதாகவும் அச்சமயம்அதிக கலோரிகள் கரைக்கப்படுவதால் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் குண்டாவதும் தடுக்கப்படுகிறது. எது எப்படியோ, இந்த உற்சாகமான இந்த உடற்பயிற்சியினை காதலர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.



இதற்கிடையில் தாம்பத்ய உறவிற்கு மிக முக்கிய எதிரி மன அழுத்தம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப காலமா மூடு சரியா இல்லைன்னு உங்களவர் சொல்கிறார் என்றால் எதற்காக இப்படி சொல்கிறார் என்று பாருங்கள். மனரீதியான சிக்கல்கள், மனச்சோர்வு, உடல்சோர்வு இவற்றில் ஏதாவது ஒரு காரணத்தினால் பாதிக்கப் பட்டிருக்கிறாரா என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங்களேன்.



மேலும் புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் தாம்பத்யத்தின் முக்கிய எதிரி. இந்த பழக்கங்கள் இருந்தால் உறவின் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் உற்சாக உறவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி உங்கள் துணையிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். எனவே தாம்பத்ய உறவின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக நிறுத்த முடியாவிட்டாலும் படிப்படியாக நிறுத்துங்கள்.



பொதுவாக மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன. 



செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. 



அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். 



காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள். முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 



செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம். ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். 


அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

உலக மனநல தினம் – அக்டோபர் 10!


பொதுவாக் மனது என்ன நினைக்கிறதோ, அதுதான் செயல் வடிவம் பெறுகிறது.. ஆரோக்கியமான வாழ்வுக்கு,உடல்நலத்தைப் போல, மனநலமும் முக்கியம்..உலகளவில் 35 கோடி பேர், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்..என புள்ளிவிவரம் கூறுகிறது……எனினும்,நாம் எல்லோருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் மனநிலை பாதித்தவர்களாகவே இருக்கிறோம்…


10 - health world day

 


அனைத்து வயதினரையும் மனநலம் பாதிக்கிறது..நீண்டகால சோகம்,
வேலையின்மை,ஏமாற்றம்,ஏக்கம்,தொடர்தோல்வி,மதுப்பழக்கம்,பிடிப்பு இல்லாமை ஆகியவை மன அழுத்தம் உருவாக காரணங்கள்..மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்,தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர்..ஆண்டு தோறும் உலகம் முழுவதும், 8 லட்சம் பேர் தற்கொலை செய்கின்றனர்..இவர்களில் 15 முதல் 44 வயதுக்குட்பட்டோரே அதிகம்..இந்நிலையில் உடலால் நன்றாக இருந்து, மனதால் பாதிக்கப்பட்டுள்ள உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்க வலியுறுத்தியே அக்., 10ம் தேதி உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.




இத்தகைய மனநல பாதிப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. ஒரு வயது குழந்தைக்கு கூட மனஅழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பின்னாளில் மனநலம் பாதிக்கப்படலாம். இன்று உலக மனநல தினம். இளமையிலும்,முதுமையிலும் மனநலம் பேணுவதின் அவசியத்தை விளக்குகின்றனர், இந்தாண்டு உலகமனநல நாள் முதியோர் மனநலம் பேணும் ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் முதியோர்களாக உள்ளனர். உடல் நலம் குறைவு, பிள்ளைகள் புறக் கணிப்பு, கவனிக்க ஆள் இல்லாத நிலையில் கடுமையான மனஅழுத்தம், மனச்சோர்வால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதில் ஆண்கள் அதிகம். பிள்ளைகளுக்கு கொடுக்க ஒன்றுமில்லாத போது தான் பெற்றோரின் உறவு கசக்க ஆரம்பிக்கும். 30 வயதைத் தாண்டும் போதே தங்களது முதுமைக்காக சேமித்து வைக்க வேண்டும். சொத்து இருந்தால் பிள்ளைகளின் பெயரில் மாற்றக்கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் முதுமையின் சுமையை ஓரளவு குறைக்கலாம் எனகிறார்கள் மருத்துவர்கள் . 



இதற்கிடையில் கண்டிப்பாக முதியோர் மன நலத்தையும் கவனித்தே ஆக வேண்டும். ஏனெனில் மருத்துவர்களின் கருத்தின்படி பெரும்பாலான உடல் நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம், கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம் ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல் பாதிக்கப்படும்.. விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்து குறைவு , மூச்சு கோளாறு தொடர்ச்சியான இருமல் ஆகியன ஏற்படும்.


இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர் டென்சன், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி காட்டலாம். எந்த பரிசோதனையும் இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம் காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு, சீரணிக்க சுலபமான உணவு வகைகளை தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர் போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும் சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம் உண்ணுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச் செய்யலாம்.


மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விஷயமே வந்தது. அதிலும் அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன.


 வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top