.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, 9 October 2014

வெந்தவன், வேகாதவன், அர வேக்காடு.....?

தலைப்பை படிச்சிட்டு உங்களை திட்டுறா நினைச்சுக்காதீங்க. இது ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான். டிஜிட்டல் சினிமா வந்துட்டதால 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்ங்ற நிலமை. வாரத்துக்கு பத்து படத்துக்கு பூஜை போடுறாங்க.  அதுல ஒரு படம்தான் இது.  இதுலேயும் மூணு ஹீரோயின் நடிக்கிறாங்க (எங்கேருந்துதான் கிளம்பி வருவாய்ங்களோ). மூன்று ஹீரோயின் இருக்குறப்போ மூன்று ஹீரோ இருந்தாகணுமே இருக்காங்க. ஜி.ஸ்ரீதர் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஜெயபிரகாஷ் என்பவர் மியூசிக் பண்றார். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் என்ற புது நிறுவனம் தயாரிக்கிறது. மூன்று விதமான குணத்தை கொண்ட மனிதர்களின் காமெடி படமாம். அந்த குணத்தைத்தான் டைட்டில் குறிப்ப...

Saturday, 18 January 2014

அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன்

  பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித்துடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி மனம் திறந்துள்ளார். ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008.................  தொடர்ந்து இங்கே படிக்கலாம்....  அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன...

Friday, 10 January 2014

‘ஜில்லா’ ! ஜெயிக்குமா? - திரை விமர்சனம்...

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து...

Thursday, 9 January 2014

ரிலீஸாகுமா ஜில்லா?

ஜில்லா படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.விஜய் நடித்துள்ள ஜில்லா படம் பொங்கல் விருந்தாக நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் , தெலுங்கில் வெளியான பகீரதா என்ற படத்தை தமிழில் ஜில்லா என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிட தயாரித்துள்ளேன். ஜில்லா என்ற பெயரை 2008ல் முறைப்படி பதிவு செய்துள்ளேன். படத்தை வெளியிட தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த படத்துக்கும் ஜில்லா என பெயர் சூட்டப்பட்டுள்ளது....

Wednesday, 8 January 2014

90 அடி உயரத்தில் அஜித்!

அஜித் நடித்துள்ள வீரம் படத்தின் கவுன்ட் டவுன் ஸ்டாட் ஆகிவிட்டதால் உற்சாகத்தில் உள்ளனர் ‘தல’ ரசிகர்கள்.சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வீரம் படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.இதனால் தமிழகம் முழுக்க அஜித்தின் கட்-அவுட் வைத்து அசத்த நினைத்துள்ள ’தல’யின் ரசிகர்கள் ஆங்காங்கே பிரம்மாண்ட ‘கட்-அவுட்’களை வைத்து வருகிறார்கள்.இதில் ஹைலைட்டாக நெல்லையில் உள்ள பாம்பே திரையரங்கு முன்பு வெள்ளை வேட்டி சட்டையில் அஜித்தின் கிராமத்து கெட்-அப் கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.இந்த கட்-அவுட் 90 அடி உயரம் கொண்டது,இந்த பிரம்மாண்ட கட்-அவுட் விடயம் தான் இப்போது டுவிட்டரில் அஜித் ரசிகர்களின் அசத்தல் டுவீட்டாக வலம் வந்து கொண்டிருக்கிற...

இணைந்தனர் சிம்பு - நயன்தாரா.....

பசங்க புகழ் பாண்டிராஜ் இயக்கிவரும் புதிய படத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்க ஆரம்பித்திருப்பதாகச் செய்திகள்வெளியாகியுள்ளன.சிம்புவுடனான காதல் முறிவிற்குப் பின்னர் வீண் வதந்திகளைத் தவிர்ப்பதற்காக நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடிப்பதைத் தவிர்த்துவந்தனர்.சுமார் 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி பாண்டிராஜ் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று ஏற்கெனவேஅறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். பாண்டிராஜ் இயக்கிவரும் இப்புதிய படத்திற்கு நயன்தாராவை விடவும் பொருத்தமான ஹீரோயின்கிடைக்கமாட்டார் என்பதால் படக்குழு நயன்தாராவை அணுகியது. நயன்தாராவும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறப்பட்டது. காதல் நகைச்சுவையை...

ஐ திரைப்படத்தின் கதை இதுதானா?

அந்நியன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மறுபடியும் ஷங்கர், விக்ரம் இணையும் திரைப்படமாதலால் ‘ஐ’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இயக்குனர் ஷங்கர் ‘ஐ’ திரைப்படத்தைப் பற்றிய எவ்வித தகவல்களையும் வெளியிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால் ’ஐ’ திரைப்படத்தின் கதை என்று பல கதைகள் பேசப்பட்டன. ஆனால் தற்போதோ ஐ திரைப்படத்தின் கதை இதுதான் என்று அடித்து சொல்கிறது கோடம்பாக்கம். விஷ இரசாயணங்களால் பாதிக்கப்பட்ட 5 நபர்களின் கதை தான் ஐ திரைப்படமாம். ஐ திரைப்படத்திற்காக விக்ரம் பல்வேறு கெட்-அப்புகளில் தன்னை மாற்றிக்கொண்டிருந்த படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஐந்து கதாபாத்திரத்திலும் விக்ரமே நடிக்கிறாரா? அல்லது ஒரே கதாபாத்திரத்திற்கு...

ஜில்லா பஞ்ச்...!

இளைய தளபதி விஜய் படங்களில் பஞ்ச் வசனங்களுக்கு என்றுமே குறைவிருக்காது. அவரது படங்களில் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுபவை சண்டைக்காட்சிகள், நடனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகளாகும்.சூப்பர் ஸ்டார் ரஜினியை அடுத்து தமிழில் அதிக பஞ்ச் வசனங்கள் இளைய தளபதியின் படங்களில் இருக்கும். விஜய் ரசிகர்களும் இந்தப் பஞ்ச்டயலாக்குகளைப் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.“ ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சவே நானே கேட்க மாட்டேன்” என்ற பஞ்ச் வசனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதைப் போலவே ஜில்லா படத்திலும் ஒரு பஞ்ச் வசனம் வெளியாகவுள்ளது.ஜில்லா படத்தில் “ ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல இந்த ஜில்லாவுலயே இருக்க மாட்டான்” என்ற பஞ்ச் வசனம் இப்படத்தில்இடம்பெறுகிறது....

Tuesday, 7 January 2014

வீரம் படத்தைப் பற்றித் தனது அனுபவங்களைப் பகிர்கிறார் தமன்னா!

தல அஜித் மற்றும் தமன்னா நடிப்பில் வருகிற ஜனவரி 10ல் வெளியாகவுள்ளது வீரம் திரைப்படம். இப்படத்தை பற்றித் தமன்னா தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது வீரம் திரைப்படம். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்குஇசையமைத்துள்ளார்.இப்படத்தில் அஜித்திற்குச் ஜோடியாக நடித்துள்ள தமன்னா தனது வீரம் திரைப்பட அனுபவத்தை ரசிகர்களுடன் நேரடியாத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார். நாளை மாலை 4 மணியளவில் ரசிகர்கள் தங்களது கேள்விகளைத் தமன்னாவிடம் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்கலாம்.தமன்னாவின் ஃபேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/Tamannaahநீண்ட...

Monday, 6 January 2014

``அப்பா`` ஆன “விக்ரம்``...!

ஷங்கர் இயக்கத்தில் “விக்ரம் “நடித்துள்ள படம் “ஐ”. இந்த படத்துக்காக கடந்த இரண்டு வருடங்களாக கடினமாக உழைத்து வந்த விக்ரம், தற்போதுதான் அந்த மேக்கப்பை கலைத்து விட்டு, புதிய படங்களுக்காக கதை கேட்டு வருகிறார்.தாண்டவம், ராஜபாட்டை உள்பட சில படங்கள் தோல்வி காரணமாக இப்போது ரொம்பவே உஷாராகி வருகிறார் விக்ரம். அவர் சில நாட்களாக நடித்த “கரிகாலன்” படமும் கிடப்பில் போடப்பட்டதால், இனி அதுபோன்ற பிரச்னைகள் தனக்கு ஏற்படக்கூடாது என்றும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில் மற்ற மொழிகளிலும் வெளியான தரமான கதைகளாக இருந்தாலும் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் விக்ரம், சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடித்த “த்ரிஷ்யம்” படத்தை பார்த்து அசந்து விட்டார்....

விஜய் அஜித்துடன் மோதும் சத்யராஜ்..!

நக்கல் மன்னன் சத்யராஜ் நடித்துள்ள கலவரம் திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.சத்யராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் கலவரம் திரைப்படத்தை எஸ்.டி.ரமேஷ்செல்வம் இயக்கியுள்ளார். ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இக்கதை இருக்குமென்றும் கூறப்படுகிறது. யுனிவர்சல் புரொடக்சன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் முறையே ஜில்லா மற்றும் வீரம் ஆகிய திரைப்படங்கள்வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஏற்கெனவே இப்படங்களுக்கான முன்பதிவு தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.இதைத் தொடர்ந்து சத்யராஜின்...

விஜயுடன் - தனுஷ் .....!

இளைய தளபதி விஜயுடன் தான் பாட்டுப்பாடி, நடனமாடி மகிழ்ந்ததாக தனுஷ் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.சமூக ஊடகமான ட்விட்டரில் தனுஷ் பெரும்பாலும் ஏக்டிவாக இருக்கிறார். அவரது அப்டேட்டுகளை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள டிவிட்டர் அவருக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது. சமீபமாக தனுஷின் டிவிட்டர் ஐடி வெரிஃபை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஜனவரி 4 ஆம் தேதி இளையதளபதி விஜயுடன் அவர் ஆடிப்பாடி மகிழ்ந்ததாக விஜயுடன் தான் இருக்கும் புகைப்படத்தைத் டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். nஉடனே விஜய் ரசிகர்கள் இளையதளபதியைத் தங்களுக்கு ஒரு ஹாய் சொல்லச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். உடனே விஜய் தனது ரசிகர்களுக்கு ஹாய் சொல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்....

எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்கள் : உளறிய ஐீவா!! -

தனது பிறந்த நாள் விழாவின் போது இரசிகர்கள் மத்தியில் பேசிய ஜீவா தவறுதலாக எல்லாரும் மறக்காம திருட்டு வீசிடில படம் பாருங்க என வாய் தவறிப் பேசியதால் சிரிப்பில் அரங்கம் கலகலத்தது.நடிகர் ஜீவாவுக்கு நேற்று முப்பதாவது பிறந்த நாள். தன் பிறந்த நாளையொட்டி 20 பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை ஆர்கேவி அரங்கில் நடந்தது. உதவிகள் வழங்கிய பிறகு ஜீவா பேசுகையில்..இந்த முறை ஒரு நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறேன். அண்ணன் விஜய் நடிக்கும் ஜில்லா படத்துக்கு நானும் அண்ணனும் இணைத் தயாரிப்பாளர்கள். எல்லோரது படங்களும் நன்றாக ஓடணும்.சினிமா என்பது ஒருவரையொருவர் சார்ந்து இயங்கும் உலகம். அதனால் படங்கள் ஓடணும். அதற்கு நீங்கள்...

இளையராஜா இன்று முதல் மீண்டும் இசையமைக்கிறார்!

சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார்.இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார்.தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந்திப்படத்துக்கும்...

கஹானி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நயன்தாராவுக்கு விருது கிடைக்கும்: டைரக்டர் சேகர்முல்லா

இந்தியில் வெற்றிகரமாக ஓடிய கஹானி படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.இந்தியில் வித்யாபாலன் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தார். காணாமல் போன கணவனை தேடும் கர்ப்பிணி பெண் வேடத்தில் அவர் வந்தார். தமிழ், தெலுங்கு பதிப்பில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா நடிப்பை பார்த்து வியந்து இப்படத்துக்கு தேர்வு செய்தார்களாம். சேகர்முல்லா இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.இதில் நயன்தாராவும், கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. ஆனால் படக்குழுவினர் அதை மறுத்தனர். புதிதாக திருமணமான பெண் காணாமல் போன தனது கணவனை தேடி அலைவது போன்று கதையில் மாற்றம்...

மன்சூர் அலிகானின் அடுத்த ‘அதிரடி’ ஆரம்பம்

சினிமாவில் எதையாவது வித்தியாசமாக செய்வது மன்சூரலிகானின் வாடிக்கை. பூனையை குறுக்கே விடுவது. ராகுகாலத்தில் படபூஜை போடுவது என்பது இவரது முந்தைய செயல்படுகள். அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில் ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட... என்ற நீளமான பெயர் கொண்ட படத்தை எடுத்தார். வாழ்க ஜனநாயகம் என்ற அரசியல் கிண்டல் படம் எடுத்தார். இவர் எடுத்த படங்கள் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து படம் எடுப்பது அவரது தன்னம்பிக்கை.இன்று காலை ஆர்கேவி ஸ்டூடியோவில் 50 முட்டைகளை விழுங்கி, வயிற்றில் பாறாங்கல்லை உடைத்து, தனது குழந்தைகளுடன் பாட்டுபாடி என பல அதிரடி வேலைகளை செய்து படத்தை துவக்கினார். விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிரண்டு ஓடாத குறையாக இருந்தது அவரது அதிரடிக...

விஜய்க்கு கிடைத்த இணையதள பெருமை..?

ஜில்லா’ வெளியாகப் போகும் உற்சாகத்தில் இருக்கும் விஜய்க்கு, இந்த புத்தாண்டில், அவரின் உற்சாகத்தை, மேலும் அதிகரிக்கும் வகையிலான செய்தி கிடைத்துள்ளது. கடந்தாண்டில், இந்தியாவில், இணையதளங்கள் மூலம், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில், விஜயின் பெயரும் இடம் பிடித்துள்ளது. ஆனாலும், இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எதிலும், விஜய் பங்கேற்கவில்லையாம். புத்தாண்டை, முழுக்க முழுக்க, தன் குடும்பத்தினருடன் மட்டுமே செலவிட்டாராம். ‘ஜில்லா’ படம் வெளியாகும் வரை, வேறு எந்த படப் பிடிப்பிலும் பங்கேற்காமல், ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம், விஜய். படம் வெளியான பின், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகப் போகும் படத்தில், நடிக்கவுள்ளார்....

உதயநிதியின் “நண்பேன்டா“...

உதயநிதி ஸ்டாலின் நண்பேன்டா படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளார்.தயாரிப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் சந்தானத்துடன் 'நண்பேன்டா' என்ற தனது சொந்தப் படத்தில் இணைகின்றார்.இயக்குனர் ராஜேஷின் இணை இயக்குனரான ஜெகதீஷ் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.ராஜேஷ் இயக்கி நடிகர் ஆர்யா நடித்து வெளிவந்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் சந்தானம் பேசி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற 'நண்பேன்டா' என்ற வசனமே இந்தப் படத்தின் தலைப்பாக மாறியுள்ளது.தற்போது இணையதளத்தில் இந்த லோகோவை வெளியிட்டுள்ள உதயநிதி, பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.உதயநிதி, சந்தானம் மற்றும் நடிகை காஜல் நடிக்க...

தொடரும் வெற்றிப்பட ஃபார்முலா...

சந்தேகமே வேண்டாம். தெலுங்கு சினிமாதான் ஒரே பாடம். தென்னிந்திய கமர்ஷியல் சினிமாவில் கால் பதிக்க நினைக்கும் அனைவரும் கசடற கற்க வேண்டிய பால பாடங்கள் ஆந்திராவில்தான் தயாராகின்றன.ஆக்ஷனா... இந்தா பிடி என கொடுக்கிறார்கள். லோ பட்ஜெட் கொத்து பரோட்டாவா... எடுத்துக்கோ என பரிமாறுகிறார்கள். நெகிழ வைக்கும் குடும்பச் சித்திரங்களா... வாங்க வாங்க என அழைக்கிறார்கள். த்ரில்லரா... இந்த பயம் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என அலற வைக்கிறார்கள். மொத்தத்தில் எல்லா ஜானரையும் நீக்கமற கொடுக்கிறார்கள். க்ளாமருக்கான எல்லைக்கோட்டை பிரமாதமாக வரையறுக்கிறார்கள்.1980களில் தமிழ்ச் சினிமா இப்படித்தான் இருந்தது என்பது கடந்தகால வரலாறானது நமது துர்பாக்கியம்.இதெல்லாம் இட்டுக்கட்டிய...

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...

இதோ வருகிறது கோச்சடையான் கீதம்...கோச்சடையான் படத்தின் இசை பிப்ரவரி 15ம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.‘கோச்சடையான்' திரைப்படத்தின் ஓடியோ ரிலீஸை ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 ம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்ட விழாவாக நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தின் வேலைகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதால் டிசம்பர் 12 ம் திகதி வெளியாகவிருந்த ஓடியோ வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் கோச்சடையான் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கும் சோனி நிறுவனம், பிப்ரவரி 15ம் திகதி இசை வெளியிடப்படும் என்று தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறது.தற்போது...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top