.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 20 January 2014

கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.

சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர்.

இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு விட்டு விடாமல், இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இங்கே எதனால் இரத்த போக்கு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.

இது எதனால் நிகழ்கின்றது?

கருவின் கழுத்து பகுதியில் பாதிப்பில்லாத மாற்றங்கள் நிகழும் போது சில திசுக்கள் உடைந்து இரத்தப் போக்கு வெளிர் நிறத்தில் வெளியேறும். சில பெண்கள் பிரசவ காலம் முழுவதும் மாதவிடாய் அடைவார்கள். ஆனால் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் உள்ளது.

கரு முட்டை உருவாதல்

முதல் மாதத்தில் கரு உருவாக ஆரம்பிக்கும் போது, கருப்பையில் மாற்றம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்படலாம். அப்பொழுது இரத்தம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அதுவும் ஒன்று இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது

கர்ப்பப்பை வாயில் தொற்று நோய்

அதே போல் கர்ப்பமாக இல்லாத போதும், இந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.
குறிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால், கருப்பையின் வாயில் எரிச்சல் ஏற்பட்டு சிறிது இரத்தம் வடியும். இந்த வகையான இரத்தப்போக்கு உடலுறவுக்கு பிறகு நடக்கும் பின்னர் மிகவும் விரைவாக நின்றுவிடும்.

சளிப்பிளவு

பிரசவ வலி ஏற்படும் போது கருப்பையின் உள்ள சளி போன்றது உடைந்துவிடும். அப்பொழுது இரத்த கசிவு ஏற்படும். ஒருவேளை இது முன்னரே உடைந்தால், குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னரே பிரசவம் நடக்க போகின்றது என்று அர்த்தம்.

நஞ்சுக்கொடி நகர்வு

நஞ்சுக்கொடி பகுதி கருப்பையின் உள்ளிருந்து வெளிவரும் போது இரத்தப்போக்கு ஏற்படும்.

கருப்பை

கருப்பை மிகவும் இறங்கிய நிலையில் இருந்தாலும், இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருந்தால் கருப்பையின் கனம் தாங்க முடியாமல் இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடம் மாறிய கர்ப்பம்

கருமுட்டை கருப்பையின் வெளியே கருத்தரித்தால், இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக ஒரு கருமுட்டை குழாயில் கருத்தரிக்கும் போது, இந்த பாதிப்பு ஏற்படும். அப்பொழுது கடுமையான வயிற்று வலி இருக்கும். இவ்வகை பிரச்சனை இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கருச்சிதைவு

இரத்தப் போக்கு கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்க முடியும். ஆனால் இது மூன்று மாதத்திற்கு பின் ஏற்படாது.

காரணமில்லாமல் ஏதும் படைப்பதில்லை (நீதிக்கதை)



ஒரு நாள் எலி ஒன்றைப் பூனை ஒன்று துரத்த ...தன் உயிரைக் காத்துக்கொள்ள எலி வேகமாக தன் வலைக்குள் புகுந்தது.எலியைக் காணாத பூனை திரும்பிச் சென்றது.வெளியே வந்த எலி நத்தை ஒன்று  மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தது.

நத்தையை கேலி செய்த எலி ....'நத்தையே உன் முதுகில் வீட்டை சுமந்து செல்கிறாயே ஏன்?நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன்.அதனால் ஆபத்திலிருந்து என்னால் தப்பிக்கமுடிகிறதுஆனால் அப்படி ஆகும்போது உன்னால் என்ன செய்ய முடியும் என்றது.

அதற்கு நத்தை ...'நீ உயிருக்கு பயந்து வேகமாக ஒடுகிறாய்..ஆனால் சமயத்தில் பூனையிடம் மாட்டிக்கொண்டால் உன் சாவு நிச்சயம்.ஆனால் நானோ....கூட்டை முதுகில் சுமந்து செல்வதால்...எப்போழுது ஆபத்து வந்தாலும் ...அந்த கூட்டுக்குள்ளையே பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வேன்..என்றது.

அப்போதுதான் எலிக்கு ஆண்டவன் காரணமில்லாமல் எதையும் படைப்பதில்லை என புரிந்தது.

ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட்!

கம்ப்யூட்டரில், விண்டோஸ் சிஸ்டத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கையில், சற்று நேரம் ஓய்வெடுக்க விரும்பினால், அதன் இயக்கத்தை முடிவிற்குக் கொண்டு வராமல், சற்று நேரம் செயலற்ற நிலையில் வைத்திருக்கலாம். இதனால், மின் சக்தி மிச்சமாகும். அனைத்து சாதனப் பிரிவுகளும் ஓய்வெடுக்கும். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான வழி முறைகளை இரண்டு வகைகளில் தருகிறது. அவை ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் (Sleep மற்றும் Hibernate) விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Hybrid Sleep என்ற வசதியும் தரப்பட்டுள்ளது. இந்த வசதிகள், லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு, மின் சக்தி மிச்சப்படுத்துவதில் அதிக உதவி செய்கின்றன. லேப்டாப் கம்ப்யூட்டர்களைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள், குறிப்பாக நம் மாணவர்களுக்கு இந்த தகவல்கள், முதல் முதலாகப் பெறுபவையாக இருக்கும். இவற்றைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 



1. ஸ்லீப் மோட் (Sleep mode):


 இது மின்சக்தியை மிச்சப்படுத்தும் ஒரு சிறந்த வழி. டிவிடியைப் பயன்படுத்தி திரைப்படங்களைப் பார்க்கையில், வேறு ஒரு சிறிய வேலைக்குச் செல்ல வேண்டும் என எண்ணினால், pause பட்டன் போட்டு நிறுத்துவது போல இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறது. இதனை இயக்குகையில், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளப்படும் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. திறந்து வைத்து செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் டாகுமெண்ட்கள், இயங்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும் மெமரியில் வைக்கப்படுகின்றன. இவற்றை மீண்டும் கொண்டு வர விரும்பினால், அவை சில நொடிகளில் இயக்கத்திற்குக் கிடைக்கும். இது ஏறத்தாழ "Standby” என்பது போலத்தான். சிறிய காலப் பொழுதிற்கு நம் கம்ப்யூட்டர் வேலையை நிறுத்த வேண்டும் எனில், இந்த வழியை மேற்கொள்ளலாம். இந்த நிலையில் (Sleep mode) கம்ப்யூட்டர் அவ்வளவாக, மின் சக்தியைப் பயன்படுத்துவதில்லை.



2. ஹைபர்னேட் (Hibernate):


இந்த நிலையில், திறந்து வைத்து நாம் பயன்படுத்தும் டாகுமெண்ட்கள் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் அனைத்தும், ஹார்ட் டிஸ்க்கிலேயே சேவ் செய்யப்படுகின்றன. மின்சக்தி பயன்படுத்துவது அறவே நிறுத்தப்படுகிறது. மீண்டும் சக்தி அளிக்கப்படுகையில், செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு கிடைக் கின்றன. அதிக நேரம் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற சூழ்நிலையிலும், அதே நேரத்தில், பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை நிறுத்தி மூடி வைக்கும் எண்ணம் இல்லை என்றாலும், இந்த நிலையையே பயன்படுத்த வேண்டும்.



3. ஹைப்ரிட் ஸ்லீப் (Hybrid Sleep):


மேலே 1 மற்றும் 2 நிலைகளில் சொல்லப்பட்ட ஸ்லீப் மற்றும் ஹைபர்னேட் நிலைகள் இரண்டும் இணைந்த நிலையே இது. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கானது. இந்த நிலையை மேற்கொள்ளும் போது, திறந்திருக்கும் டாகுமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் அனைத்தும், மெமரியிலும் ஹார்ட் டிஸ்க்கிலும் சேவ் செய்து வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் மிகவும் குறைவான மின்சக்தி செயல்பாட்டில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், மீண்டும் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்கு வர, மிக மிகக் குறைவான நேரமே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் சிஸ்டத்தில், மாறா நிலையில் செயல்பாட்டு நிலையில் அமைக்கப் படுகிறது. லேப்டாப் கம்ப்யூட்டரில், இது செயல்பாடு இல்லா நிலையில் உள்ளது. இதனை இயக்கியவுடன், இது உங்கள் கம்ப்யூட்டரைத் தானாகவே, ஹைப்ரிட் ஸ்லீப் நிலையில் வைக்கிறது.

இந்த நிலை, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், மின்சக்தி பிரச்னை ஏற்பட்டால் உதவியாய் இருக்கும். மின்சக்தி மீண்டும் கிடைக்கும் போது, மெமரியிலிருந்து பைல்கள் கிடைக்காத நிலையில், விண்டோஸ், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அவற்றை எடுத்து இயக்குகிறது.


4. எப்படி பெறுவது?:

Sleep மற்றும் Hibernate நிலைகளை, ஷட் டவுண் பட்டன் அருகே உள்ள ஆரோ பட்டனை அழுத்தி, ஆப்ஷன் மெனுவில் பெறலாம்.இவை காணப்படவில்லை என்றால், அதற்கான காரணங்கள் கீழே குறிப்பிட்டவற்றில் ஒன்றாக இருக்கலாம்.


1. உங்களுடைய வீடியோ கார்ட், ஸ்லீப் நிலையை சப்போர்ட் செய்திடாமல் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில், வீடியோ கார்ட் நிறுவன இணைய தளத்தில், இதனை சப்போர்ட் செய்திடும் ட்ரைவர் புரோகிராமை இறக்கி இயக்கவும்.



2. உங்கள் கம்ப்யூட்டரில், உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டிவ் உரிமை இல்லாத பயனாளராக நீங்கள் செயல்பட்டாலும், இந்நிலை உங்களுக்குக் கிடைக்காது.


3. மின்சக்தி மிச்சப்படுத்தும் வழிகள் (powersaving modes), கம்ப்யூட்டரின் பயாஸ் சிஸ்டத்தால், இயக்கவும் மூடவும் செய்யப்படு கின்றன. இவற்றை இயக்கத்திற்குக் கொண்டு வர, உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடுங்கள். அடுத்து பயாஸ் செட் அப் புரோகிராம் செல்லுங்கள். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இதற்கான கீ வேறுபடும். எனவே, எந்தக் கீயை அழுத்தினால், பயாஸ் புரோகிராமிற்குச் செல்ல முடியும் என்பதனை அறிந்து செல்லவும். பொதுவாக, கம்ப்யூட்டர் பூட் செய்யப்படுகையிலேயே, பயாஸ் புரோகிராம் செல்ல என்ன செய்திட வேண்டும் என்பதற்கான வழிமுறை காட்டப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, கம்ப்யூட்டருடன் வந்த குறிப்பு ஏட்டினைப் பார்க்கவும். அல்லது கம்ப்யூட்டரைத் தயார் செய்த நிறுவனத்தின் இணைய தளம் செல்லவும்.


4. கம்ப்யூட்டரை எழுப்புதல்: இந்த செயல்படா நிலையிலிருந்து எந்த வழிகளில், கம்ப்யூட்டரைச் செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம்? பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், பவர் பட்டனை அழுத்துவதன் மூலம், செயல்படும் நிலைக்குக் கொண்டு வரலாம். சிலவற்றில், கீ போர்டில் ஏதேனும் ஒரு கீ அல்லது மவுஸ் பட்டன் அழுத்துவதன் மூலம் இயக்க நிலைக்குக் கொண்டு வரலாம். சில லேப்டாப் கம்ப்யூட்டர்களில், அதன் மூடியைத் திறந்தாலே, செயல்நிலைக்குக் கம்ப்யூட்டர் மாறிவிடும். இந்த வழியையும், கம்ப்யூட்டர் நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அறியலாம்.


5. ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை அமைத்தலும் நீக்கலும்:


ஹைப்ரிட் ஸ்லீப் நிலையை கம்ப்யூட்டர் ஒன்றில் அமைத்திட, ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செல்லவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் Power Options என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில், Power Options காணப்படவில்லை என்றால், கண்ட்ரோல் பேனல் மேலாக வலது பக்கம் உள்ள வியூ (View) என்பதில் உள்ள கீழ் விரி மெனுவினைத் திறக்கவும். இதில் Large icons அல்லது Small icons என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். கேடகிரி (Category) வியூவில், System and Security என்பதில் கிளிக் செய்து, இதில் Power Options என்ற தலைப்பில் கிளிக் செய்திடவும்.


இங்கு Select a power plan என்ற பகுதி காட்டப்படும். இதில் அப்போதைய மின்சக்தி கட்டுப்பாடு குறித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தின் அருகே, Change plan settings என்பதற்கான லிங்க் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும். இங்கு Change advanced power settings என்ற லிங்க்கும் கிடைக்கும். Sleep என்பதில் உள்ள ப்ளஸ் அடையாளத்தில் கிளிக் செய்தால், அனைத்து ஆப்ஷன்களும் காட்டப்படும்.
ஏற்கனவே, விரிக்கப்பட்டிருந்தால், அப்படியே அதில் உள்ள ஆப்ஷன்களைக் காணவும். Allow hybrid sleep என்பதன் அருகே உள்ள ப்ளஸ் அடையாளத்தினைக் கிளிக் செய்திடவும்.



பொதுவாக, பவர் சேவிங் திட்டத்தில், கம்ப்யூட்டர் தூங்கும் போது, அதனை இயக்கத்தில் கொண்டு வர முயற்சிக்கையில், விண்டோஸ் சிஸ்டம் பாஸ்வேர்ட் ஒன்றைக் கேட்கும். இது தேவை இல்லை என எண்ணினால், பவர் ஆப்ஷன் டயலாக் பாக்ஸில், இதனை நீக்குவதற்கான வழி கிடைக்கும். அதனைச் செயல்படுத்தவும்.



அனைத்தையும் அமைத்த பின்னர், சேவ் பட்டனில் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் மேல் வலது மூலையில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து வெளியேறவும்.


6. கம்ப்யூட்டர் தானாக இந்த நிலைகளை எடுப்பதனை எப்படி தடுப்பது? 


முன்பு கூறியபடி, கம்ப்யூட்டர் இந்த நிலைகளில் இருந்து மீள்கையில், பாஸ்வேர்ட் கேட்பதனை நாம் தடுக்கும் வகையில் செட் செய்திட முடியும். ஆனால், பேட்டரியில் இயங்கக் கூடிய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இதில் ஒரு பிரச்னை உள்ளது. இத்தகைய கம்ப்யூட்டர்களில், ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலையை முடிக்கையில், கவனமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணியாற்றுகின்ற வேளையின் நடுவே, பேட்டரி முழுவதுமாகத் தன் சக்தியை இழப்பதாக இருந்தால், நாம் பயன்படுத்திய அல்லது உருவாக்கிய டேட்டாவினை இழந்துவிடுவோம்.



கம்ப்யூட்டர் ஸ்லீப் அல்லது ஹைபர்னேட் நிலைக்குச் செல்லுவதற்கான நேரத்தினை மாற்றலாம். கீழ்க்குறித்தபடி செயல்பட்டு மாற்றலாம்.
கண்ட்ரோல் பேனலில், Power Options என்ற பிரிவிற்குச் செல்லவும். Select a power plan திரையில், தற்போதைய பவர் ஆப்ஷன்ஸ் நிலைக்கு அருகே உள்ள Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.


On the Change settings for the plan என்ற விண்டோவில், Change advanced power settings என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep என்ற தலைப்பில் டபுள் கிளிக் செய்திடவும். நீங்கள் லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், On battery or Plugged in என்பதில் கிளிக் செய்திடவும். இதனால், எடிட் பாக்ஸ் இயக்கப்படும். இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை அழுத்தவும்.


குறிப்பு:

  நீங்கள் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், Setting கிளிக் செய்து, Never என்பது தேர்ந்தெடுக்கப்படும் வரை, இங்கு கிடைக்கும் கீழ் நோக்கிய அம்புக் குறியை அழுத்தவும். பின்னர், ஓகே கிளிக் செய்து, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் அனைத்தையும் சேவ் செய்திடவும். பின்னர், முன்பு கூறியபடி கண்ட்ரோல் பேனல் விண்டோவையும் மூடவும்.
நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கு Hibernate நிலைதான் மிகச் சரியான தேர்வாக அமையும். ஏனென்றால், மற்ற இரு நிலைகளுடன் ஒப்பிடுகையில், இதுவே, அதிகமான மின் சக்தியை மிச்சம் செய்திடும்.

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து 'அப்படியா!!!' என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.

இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளைப் பார்ப்போமா!!!


லிப்ஸ்டிக்

பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.

ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.

இறால்

கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.

நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.

பட்டாம்பூச்சி

இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.

யானை

பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
 

ஆங்கில மொழி

ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?


நெருப்புக்கோழி

உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையை விட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.

புகைப்பிடித்தல்
இப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

முழங்கை ட்ரிக்

கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.

சிலந்தி

உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.

தும்மல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும்மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்து தும்மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலாம்.


பிறப்பு
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
 

கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையில் 'typewriter'என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
 

முதலை

பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும் தான், மேல் தாடை தூக்கி வாய் திறக்கப்படும்.


கரப்பான்பூச்சி

வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும் போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.


வெங்காயம்

யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.


தூசிப்படிந்த வீடு

வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.


கர்ப்பமான மீன்

வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை 'ட்விட்' (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, 'கர்ப்பமான தங்கமீன்' என்று சொல்லக்கூடாது.

பீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்!!!

உலகிலேயே பீர் தான் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான ஆல்கஹால் ஆகும். மேலும் இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஆல்கஹால்களுள் ஒன்றாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி, ஏதேனும் பார்ட்டி அல்லது விழா என்று வந்தால், அங்கு பீர் பார்ட்டி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அத்தகைய பீரில் நிறைய பிராண்ட்டுகள் உள்ளன. ஒவ்வொரு பிராண்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.

இத்தகைய பீரை அளவாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பீரைப் பற்றிய பல உண்மைகளை, ஆய்வுகள் பல கூறுகின்றன. அவற்றில் பீரை அளவாக அருந்தி வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை 45% வருவதை தவிர்க்கலாம் என்றும், பீர் எலும்புகளை பலப்படுத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை. மேலும் இதுப்போன்று அந்த பீரைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 

பீர் பிராண்ட்டுகள்

உலகில் சுமார் 400 வகையான பீர்கள் உள்ளன. இந்த 400 வகையான பீர்களின் சுவையையும் ருசிக்க வேண்டுமெனில், பெல்ஜியம் சென்றால் கிடைக்கும். ஏனெனில் இங்கு அனைத்து வகையான பீர்களும் கிடைக்கும்.


பீர் ஃபோபியா


உங்களுக்கு பீர் ஃபோபியா பற்றி தெரியுமா? ஆம், பீர் குடிக்கும் போது, முழுவதும் குடித்தப் பின்னர், அதன் பாட்டிலை காலியாக பார்க்கவே முடியாது. அதனால் பாட்டில் காலியாக காலியாக அடுத்தடுத்த பீரை குடிக்க வேண்டுமென்று தோன்றும். என்ன உங்களுக்கு இந்த பீர் ஃபோபியா இருக்கா?


உண்மையான பீர்

பீரைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளில் ஒன்று தான், அசல் பீரானது சிச்சா என்று அழைக்கப்படும் நொதிக்கப்பட்ட நீரில் இருந்து செய்யப்பட்டது என்பதாகும்.


சளிக்கு சிறந்தது

சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது 1 டம்ளர் பீர் குடித்தால், பீரில் உள்ள எத்தனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். அதிலும் இந்த பீரை சாப்பிட்டால், 60 சதவீத கிருமிகள் உடலில் இருந்து அழிக்கப்படும்.


இதய நோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை சரிசெய்ய நினைத்தால், ஒரு டம்ளர் பீர் சாப்பிட்டு வந்தால், இதய நோயில் இருந்து விடுபடலாம். அதிலும் ஒரு பாட்டில் பீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பிளாஸ்மாவை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.


அழகு

பீரில் உள்ள மற்றொரு உண்மை என்னவென்றால் பீரை பெண்கள் குடித்து வந்தால், பீரானது அழகாகவும், ஸ்மார்ட்டாகவும் இருக்க வைக்கும்.


ஸ்மார்ட்டாக்கும்


எப்போதும் ஸ்மார்ட்டாக இருக்க விரும்பினால், ஒரு டம்ளர் பீர் குடித்தால் ஆகலாம். ஏனெனில் பீர் குடித்தால், புரிந்து கொள்ளும் திறனானது மேம்படுத்தப்பட்டு, ஸ்மார்ட்டான நபராக மாற்றும்.


ஆற்றல் பானம்

உடலில போதிய ஆற்றல் இல்லாவிட்டால், அப்போது ஒரு டம்ளர் பீர் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பதோடு, ஆற்றலும் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.


விலை உயர்ந்த பீர்


மிகவும் விலை உயர்ந்த பீரை குடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் லண்டனுக்கு செல்ல வேண்டும். ஆம், அங்கு தான் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பீரான 'Vielle Bon Secours' உள்ளது. அதுவும் லண்டனிலேயே ஒரே ஒரே ஒரு பாரில் மட்டும் தான் விற்கப்படுகிறது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top