கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அணு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களில் யுரேனியத்துக்கு முக்கிய பங்கு உள்ளது.
யுரேனியம் தாது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.
அவை கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில்லில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் ரசாயன துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கடல் நீரில் இருந்து யுரேனியம் பிரித்தெடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் வைத்து நவீன தொழில் நுட்ப முறையில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.


09:16
ram




Posted in: