தற்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இத்தகைய நிலைமை ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. மேலும் அந்த காரணங்களை தெரிந்து கொண்டு அதனை சரிசெய்ய எவ்வளவோ முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதற்கான சரியான பலன் கிடைக்காமல் சிலர் இருக்கின்றனர். இவ்வாறு குழந்தை பெற முடியாமல் இருப்பதற்கு போதிய சத்துக்கள் உடலில் இல்லாதது, உறவு சரியாக இல்லாதது, இனப்பெருக்க மண்டலம் பலவீனமாக இருப்பது என்று பல உள்ளன.
இப்போது அந்த வகையான பாலுணர்வைத் தூண்டும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
பாலுணர்வைத் தூண்டும் உணவுகள்!!!
தானியங்கள்
முளைகட்டிய தானியங்கள் மற்றும் நவதானியங்களை சாப்பிட்டால், உடலில் உள்ள பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள் நன்கு செயல்படும். ஏனெனில் இவற்றில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ரிலாக்ஸ் செய்து, லிபிடோவை அதிகரிக்கும். ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
நியாஸின் உணவுகள்
நியாஸின் அல்லது வைட்டமின் பி3 எனப்படும் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள உணவுகளான அவோகேடோ, பரங்கிக்காய் மற்றும் கீரைகளை அதிகம் சாப்பிட்டால், உடலுறவின் போது உணர்ச்சியை அதிகரிக்கும். ஏனெனில் இவற்றில் உள்ள நியாஸின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, செல்களின் செயல்களை அதிகரித்து, உணர்ச்சியை ஊக்குவிக்கும்.
வைட்டமின் ஈ உணவுகள்
வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள உணவுகளான இனிப்பு உருளைக்கிழங்கு, ராஸ்பெர்ரி, கேரட் மற்றும் நட்ஸ் போன்றவற்றை, உடலுறவு கொள்ளும் 3 மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனால் ஆண், பெண் இருவருக்குமே உணர்ச்சிகள் அதிகரித்து, அந்த உணர்ச்சிகளை நீண்ட நேரம் நிலைத்திருக்கச் செய்யும்.
சூப்பர் சாலட்
உறவின் போது நல்ல சந்தோஷத்தை அனுபவிக்க ஒரு சில ஃபேட்டி ஆசிட் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இத்தகைய ஃபேட்டி ஆசிட்கள் நட்ஸ், விதைகள், தானியங்கள் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் உள்ளன. ஆகவே அத்தகைய உணவுகளை சாலட் போல் செய்து அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அந்த நேரத்தில் மிகுந்த உற்சாகத்தை அடையலாம்.
வைட்டமின் டி உணவுகள்
டயட்டில் இருப்பவர்கள் அனைவருக்கு உண்ணும் உணவில் சேர்க்க வேண்டிய சத்துக்களில் ஒன்று தான் வைட்டமின் டி. இத்தகைய வைட்டமின் டி சத்து, காளான் மற்றும் சிக்கரியில் அதிகம் உள்ளது. ஆகவே இவற்ற சாப்பிட்டால், உடலில் உள்ள செல்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, உறவின் போது மனநிலையை ஒழுங்குபடுத்தும்.
முளைகள்
முளைகளை உறவு கொள்ளும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பு 3 முதல் 5 அவுன்ஸ் சாப்பிட்டால், உடலில் உள்ள ஹார்மோன்களை நன்கு தூண்டும். அதேப்போல் முளைப்பயிர்கள், கறுப்பு ராஸ்பெர்ரிகளை இரண்டு மணிநேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இதனாலும் உணர்ச்சிகள் நன்கு தூண்டப்படும்.
ஜிங்க் உணவுகள்
தற்போது அதிக வேலையின் காரணமாக மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அத்தகையவர்கள் தங்கள் டயட்டில் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, சரியான உறவில் ஈடுபட முடியும். இத்தகைய ஜிங்க் சத்து பச்சை காய்கறிகள், பூசணிக்காய் விதைகளின் முளைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
தர்பூசணி
தர்பூசணி ஒரு புதிய வயாகரா என்று சொல்லலாம். எப்படியெனில் இந்த தர்பூசணியில் 92% தண்ணீரும், 8% உணர்ச்சியைத் தூண்டும் சத்தான சிட்ருலின் என்னும் பொருளும் அடங்கியுள்ளன. இந்த சிட்ருலின் உடலினுள் செல்லும் போது அர்ஜினைன் ஆக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜினைன், வயாகராவைப் போலவே இரத்தக்குழாய்களை ரிலாக்ஸ் செய்து, லிபிடோவை அதிகரிக்கிறது.


17:47
ram
Posted in: