| இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்க்கும் திட்டத்தில் உள்ளாராம் உலக நாயகன். |
கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கும் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும். பாடல்களே இல்லை, முக்கியமாக மிஷ்கினின் குத்துப்பாட்டு இல்லை, கதாநாயகி இல்லை. என பல இல்லை'கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி மிகப்பெரிய முத்திரையைப் பதித்திருக்கிறது. சமீபத்தில் கமல்ஹாசனை பிரசாத் ஸ்டுடியோவுக்கு பிரத்யேகமாக அழைத்த இளையராஜா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தைத் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். முழு படத்தையும் பார்த்து மிரண்டுபோன கமல் நெகிழ்ந்துபோய் மிஷ்கினைப் பாராட்டி கங்கிராட்ஸ் சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்லை சீக்கிரமா நாம ரெண்டு பேரும் சேர்ந்து படம் செய்வோம் என்று சொல்லி மிஷ்கினை மகிழ்ச்சியில் மிதக்க வைத்துள்ளாராம் கமல். |
Wednesday, 2 October 2013
மிஷ்கினுடன் இணையும் கமல்!
13:04
ram


Posted in: