.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 10 October 2013

ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது!

If you paste the sticker is not pregnant!



எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இன்னும் கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளவில்லை. ‘‘இந்தக் காலத்தில் ஆபரேஷன் என்றெல்லாம்  கஷ்டப்பட வேண்டாம். பிளாஸ்திரி போல ஒரு ஒரு சின்ன பேட்ஜ்... அதைத் தோளில் ஒட்டிக் கொண்டாலே கருத்தரிக்காது. விசாரித்துப் பார்’’  என்கிறாள் என் தோழி. இது உண்மையா?


பதில் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் செந்தாமரைச் செல்வி 



கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும்,  பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் தாங்கள்  அறிந்த அந்த பேட்ஜ். ‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம்.



இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக்கொள்ள வேண்டும்.  பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில்  செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.



இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச்  செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த  அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை. 90  கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பேட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு பொதுக்கருத்து உண்டு. எனவே நேரில் ஒரு  மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல்வாகுக்கு அது சரிப்படுமா என்று பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நல்லது!



 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top