பெண்களை இழிவுபடுத்துவது போல் அமைந்த சந்தானத்தின் வசனத்தை என்றென்றும் புன்னகை படத்திலிருந்து நீக்கியுள்ளனர். | |||
நகைச்சுவை நடிகர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து தனி ஹீரோயின், பாடல் என கலக்கிக் கொண்டிருந்தார் சந்தானம். ஆனால் சமீபகாலமாகவே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகையிலை எதிர்ப்பு விளம்பரத்தை கலாய்க்கிறார் என எதிர்ப்புக் கிளம்பியது. பலத்த எதிர்ப்புகளுக்குப் பின்னர் உடனடியாக அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கினார் அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ். இந்நிலையில் என்றென்றும் புன்னகை டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், ஒரு காட்சியில் சந்தானம் ஒரு துணை நடிகையுடன் பேசும் போது, ஐந்து பத்துக்கு போறேன்ணு சொல்லிறியே அழகா தானே இருக்க ஆயிரம் ஐநூறுக்கு போனால் என்ன என்று பேசிய வசனம் சர்ச்சையை கிளப்பியது. இந்த வசனத்திற்கு பெண்கள் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து சந்தானம் பேசிய சர்ச்சைக்குரிய வசனம் என்றென்றும் புன்னகை டிரெய்லரில் இருந்தும், படத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. |
Friday 1 November 2013
சந்தானத்திற்கு மற்றொரு அடி!
20:40
ram