ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ், 3 படத்தின் மூலம இயக்குனராக அறிமுகமானார். தனுஷ்-ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருந்த அப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும், ஐஸ்வர்யாவுக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதனால்தான், அடுத்து உடனடியாக வை ராஜா வை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார்.
முதல் படத்தை விட இரண்டாவது படத்தை ஹிட்டாக கொடுத்து பேசப்படும் இயக்குனராகி விட வேண்டும் என்று கவனமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், தனது தங்கை செளந்தர்யா, அப்பா ரஜினியை வைத்து கோச்சடையான் படத்தை இயக்கி விட்டதால், ஐஸ்வர்யாவுக்கும் அப்பாவை வைத்து ஒரு மெகா படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.
அதனால் ஏற்கனவே அப்பாவுக்காக சில கதைகளை ரெடி பண்ணி வைத்திருந்த ஐஸ்வர்யா அதில் ஒரு சிறந்த கதையை மெருகேற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். வை ராஜா வை தான் எதிர்பார்த்ததை விடவும் பெரிய ஹிட் படமாக அமைந்தால், தான் ரெடி பண்ணி வைத்திருக்கும் ஸ்கிரிப்ட்டை அப்பா ரஜினியிடம் சொல்ல திட்டமிட்டுள்ளாராம் ஐஸ்வர்யா தனுஷ்.


16:10
ram

Posted in: