.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 15 December 2013

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!



முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?



இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.

ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.

இந்த 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.

'வோக்லெடின்-17' புரோட்டின், 'கிறிஸ்டல்', 'நியூகிளீசா'க மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றனர்.

இனிமேல் யாரிடமும் யாரும் "முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? " என்றெல்லாம் கேட்டு, 'டோச்சர்' பண்ணக்கூடாது. சரிதானா?

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top