.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 18 December 2013

அற்புதமான விளக்கம் மனைவிக்கு.....?





ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.

எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.


கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.


மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்?" என்று.


அதற்கு மனைவி சொன்னால் " கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் மிகவும் அன்புக்குரியவர்" என்று புன்னகையோடு பதிலளித்தாள்.


கனவனும் புன்னகையோடு "இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆபத்தானவைதான். ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன், என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு எவ்வித பயமுமில்லை என்றான்...!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top