அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர்.
பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர்.
அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே தயாரிக்கலாம் அழகு சாதன பொருட்களை. எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம்
கிச்சிலிக் கிழங்குபொடி-100கிராம்
உலர்ந்த மகிழம் பூ-200கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி-100கிராம்
கோரைக்கிழங்கு பொடி-100கிராம்
உலர்த்திய சந்தனப்பொடி-150கிராம்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து சுத்தமான பன்னீர் சேர்த்து அடித்து சிறிய உருண்டைகளாக சேகரித்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளவும்.
தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பால் கலந்து முகத்தில் தடவி அரைமணிநேரம் ஊறிய பின் குளிர்ந்த தண்ணீரால் முகத்தை கழுவலாம்.
கழுவிய பின் சோப்பு எதுவும் போடக்கூடாது. இவ்வாறு செய்து வந்தால் முகத்திற்கு மென்மையும் பளபளப்பும் கூடும்.