தலைப்பை படிச்சிட்டு உங்களை திட்டுறா நினைச்சுக்காதீங்க.
இது ஒரு தமிழ் சினிமாவோட தலைப்புதான்.
டிஜிட்டல் சினிமா வந்துட்டதால 50 லட்சத்துக்குள்ள யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்ங்ற நிலமை. வாரத்துக்கு பத்து படத்துக்கு பூஜை போடுறாங்க.
அதுல ஒரு படம்தான் இது.
இதுலேயும் மூணு ஹீரோயின் நடிக்கிறாங்க (எங்கேருந்துதான் கிளம்பி வருவாய்ங்களோ). மூன்று ஹீரோயின் இருக்குறப்போ மூன்று ஹீரோ இருந்தாகணுமே இருக்காங்க.
ஜி.ஸ்ரீதர் என்பவர் டைரக்ட் செய்கிறார். ஜெயபிரகாஷ் என்பவர் மியூசிக் பண்றார். பிரண்ட்ஸ் புரொடக்ஷன் என்ற புது நிறுவனம் தயாரிக்கிறது.
மூன்று விதமான குணத்தை கொண்ட மனிதர்களின் காமெடி படமாம். அந்த குணத்தைத்தான் டைட்டில் குறிப்பிடுகிறதாம்.