.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 9 October 2014

ஸ்பெஷல் புளூடூத் மவுஸ்...!!



லாஜிடெக் நிறுவனம், தான் வடிவமைக்கும் மவுஸ்களுக்குப் புகழ் பெற்றது. தொடக்கத்திலிருந்து இந்த புகழை இந்நிறுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


அண்மையில் Logitech Ultrathin Touch Mouse T630 என்ற பெயரில் புதிய மவுஸ் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயரைக்கேற்ற வகையில், இது மிக மிகக் குறைவான தடிமனுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.


லாஜிடெக் நிறுவனத்தின் இணைய தளத்தில் இதன் அமெரிக்க விலை 70 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன் வடிவமைப்பு மிக எளிதாக இதனைப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. புளுடூத் வழியே இது செயல்படுகிறது. இதனை மேம்படுத்தும் வகையில், இரண்டு புளுடூத் சேனல்கள் தரப்பட்டுள்ளன.


 இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க கீழாக ஒரு ஸ்விட்ச் தரப்பட்டுள்ளது. இதனால், ஒன்றுக்கு மேற்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர்களை, வயர்லெஸ் மவுஸ் மூலம் இயக்க விரும்புபவர்களுக்கு இது பயன்படும்.


இதில் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி ஒன்று தரப்பட்டுள்ளது.மேலும் லேப்டாப்பில் மவுஸை சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு நிமிடம் சார்ஜ் செய்தால், ஒரு மணி நேரம் மவுஸைப் பயன்படுத்தலாம் என்று, லாஜிடெக் இதற்கான குறிப்புகளில் தெரிவித்துள்ளது.


இதனால், இதற்கென பேட்டரிகளைத் தூக்கிக் கொண்டு பயணம் செய்திடத் தேவை இல்லை. இந்தியாவில் விற்பனைக்கு வருகையில், விலை குறைய வாய்ப்புண்டு.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top