.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 17 September 2013

அளவிற்கு மிஞ்சக் கூடாது.- நீதிக்கதைகள்



 
 
மதன் வீட்டில் ஒரு வாய் குறுகலான ஜாடி ஒன்றில் அவனது அம்மா பாதாம் பருப்புகளை போட்டு வைத்திருந்தார்.

 
ஒரு நாள் அம்மா வெளியே செல்லும் போது மதனைப் பார்த்து ..மதன்..உனக்கு பசித்தால்..ஜாடியிலிருந்து கொஞ்சம் பாதாம்பருப்பை எடுத்து சாப்பிடு..',நான் வெளியே
போய் விட்டு சீக்கிரம் வந்து விடுவேன் 'என்று சொல்லிச் சென்றாள்.


பின் மதனும் ஜாடியினுள் கை விட்டு கையில் எவ்வளவு பாதம் பருப்பை எடுக்க முடியுமோ அதை எடுத்து ஜாடியினுள்ளிருந்து தன் கையை வெளியே எடுக்கப் பார்த்தான்.
ஜாடியின் வாய் குறுகலாக இருந்ததால் ..அவனால் கையை வெளியே எடுக்க முடியவில்லை...


கையில் இருக்கும் பாதாம் பருப்பை ஜாடியில் போட மனமில்லாமல் ...கையை வெளியே எடுக்கவும் முடியாமல் கண்ணீர் விட்டு புலம்பி அழுதான்...


அதற்குள் அவன் அம்மா வந்துவிட்டார்...அவர்..'மதன் உன் கையில் வைத்திருக்கும் பாதாம் பருப்பில் பாதியை ஜாடியில் போட்டுவிடு ..மீதி கொஞ்சம் பாதாம் பருப்புடன் கை சுலபத்தில்
வெளியே வந்துவிடும்' என்றார்.


எதையும் ஒரே சமயத்தில் அளவிற்கு அதிகமாக அடைய முயலக்கூடாது என்பதை உணர்ந்தான் மதன்.
 
 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - Idharkuthaane Aasaipattai Balakumara First Look Teaser HD new)





 ஆக்ரோஷமான கதாநாயகன், காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே படத்தில் ஒரு கதாநாயகி என இருந்த தமிழ் சினிமாவின் போக்கு சமீப காலமாக சற்று அதிலிருந்து விலக ஆரம்பித்துள்ளது.


வழக்கமான கதை, கதைக்களம், காட்சிகளை மறுத்து புது ரூட்டில் பயணிக்கும் இளைஞர்களை தமிழ் சினிமாவில் காணக்கூடியதாக உள்ளது.



தமிழில் தயாராகும் படங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவர்களின் படங்கள் மிக சொற்பம்தான். அட்டகத்தி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களை சொல்லலாம். அந்த வரிசையில் சூதுகவ்வும், யாருடா மகேஷ் படங்கள் தயாராகியுள்ளன. அதே ப்ளேவரில் தயாராகும் இன்னொரு படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.



 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...


விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். "சூது கவ்வும்" வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படம் 'ரௌத்திரம்' இயக்குனர் கோகுல் இயக்கும் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". 


நம் அன்றாட வாழ்வில் நிகழும் நகைச்சுவையின் பின் பலம் அதைவிட நகைச்சுவையானது. அதை முழு நீள நகைச்சுவையாக முன்னெடுக்கிறது இப்படம் என்றார் கோகுல்.



விஜய் சேதுபதி ஜோடியாக சுப்ரமணியபுரம் ஸ்வாதியும், அட்டக்கத்தி நந்திதாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் பரோட்டா சூரியும் நடிக்கிறார். 



'சுமார் மூஞ்சி குமார்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நடிக்கும் பசுபதியின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருக்கிறதாம். 



மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விப்பின் இசையமைக்கிறார். நடனம் ராஜூசுந்தரம். மதன்கார்கி வசனம் எழுதுகிறார்.

வணக்கம் சென்னை (2013) டிரெய்லர் - Vanakkam Chennai Movie Trailer new)








தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி 'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.




'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும் பிரியாஆனந்த் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சந்தானம், மனோபாலா, ஊர்வசி, ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.


காதலுக்கும் நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில், சென்னையில் பிறந்து வளர்ந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனும், நாயகியும் சென்னையின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கு இடையில் எப்படி காதலிக்கிறார்கள் என்பதுதான் கதை.



அனிருத் இசையமைக்க நா.முத்துக்குமார், மதன் கார்க்கி & விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.



 
 
 
 

நோயற்ற வாழ்வும் ...கல்வியும்.-நீதிக்கதைகள்



அருண் ஆறாம் வகுப்பு மாணவன்..அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர்.பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார்.
எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான்..தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான்.


கடவுள் அவன் முன்னால் தோன்றி ..'அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன்.ஆனால் யோசித்துக் கேள்'என்றார்.


அருண் உடனே..'இறைவா..நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும்' என்றான்.


அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார்.


உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது..அப்பா.அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.


அருணுக்கு பசி எடுக்க..அம்மா உணவு எடுத்து வந்தார்.அருண் உணவில் கை வைக்க அது பணமானது.தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அது பணமானது.பசியால் வாடிய அருண்.....

அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான்.


மீண்டும் இறைவனை வேண்டினான்.இறைவன் தோன்ற ,அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி ...தன்னை மன்னிக்கும்படியும் ..தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான்.


உடன் இறைவன் அருணைப்பார்த்து ..'அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும்..நோயற்ற வாழ்வும் தான் செல்வம்.அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது'
என்று கூறி..அவனுக்கு..அவ்விரண்டையும் அருளினார்.

தேப்லா!

தேப்லா


தேவையான பொருட்கள் :

 

கோதுமை மாவு - 2 கப்
 

நெய் - 1 ஸ்பூன்
 

உப்பு -தேவையான அளவு 



செய்முறை :


 

• கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து மெத்தென்று பிசைந்து கொள்ளவும்.

 

• மெல்லி சப்பத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுங்கள்.

 

• பூரியை விட சற்று பெரிய சப்பாத்திகளாக மெல்லியதாக திரட்டுங்கள்.

 

• தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய சப்பாத்தியை போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு அது உப்பும்போது சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள்.

 

• அதனுள் இருக்கும் காற்று, மற்ற இடங்களுக்கு பரவி பூரி போல எழுப்பி வரும். மறுபுறம் திருப்பிவிட்டு மீண்டும் லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து சிறிதளவு நெய் தடவி வையுங்கள்.

 

• மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த சப்பாத்தி. 

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top