.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

மழை மழையாகவே இருந்தது!

பிறிதொரு நாளில்
 
கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்
 
அழிக்க முயற்சித்தது
 
மழை

பிறிதொரு நாளில்
 
கண்களின் நீர்த்தாரைகளை
 
மறைத்துக் கொண்டோடியது
 
மழை

பிறிதொரு நாளில்
 
நிகழ்ந்த பிரிவின்
 
உருவை ஈரமாக்கியது
 
மழை

பிறிதொரு நாளில்தான்
 
மழை மழையாகவே
 
இருந்தது

நீ என்னோடு மார்பணைந்து
 
நனைந்திருந்த அன்று
 
*********************************

ந ள் ளி ர வு ம ழை!

எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்
 
ஈரமாய்
 
உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌
 
உணவாய்
 
புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்
 
நனைதலாய்
 
தூரலிட்டுப் போயிருக்கிறது
 

 
ள்
 
ளி
 

 
வு
 

 
 ழை
*********************************

சாளரம்!

சாளரம்

இந்தச்சாளரம்
 
இப்பேருலகின் உட்செல்ல
 
எனக்கான வாசலாயிருக்கிறது
 
மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
 
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
 
இங்கிருந்தே என் கரங்களுக்கு
 
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
 
இளவெயிலின் புன்னகையுடனோ
 
என் அத்தியாவசிய முகங்கள்
 
இதன்வழியேதான்
 
 எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
 
வியாபாரத்திற்காய் விரைகின்ற
 
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
 
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
 
பாரமான பொழுதுகளில்
 
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
 
தனித்துப்போதலும்கூட இங்கே
 
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு

***********************

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட!

1330711326_microsoft_excel_2010_109374233

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்ப…தில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்.
இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்.


மெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது திறக்கும் பாப் அப் விண் டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும். பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவு ஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்க ளுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிற தோ அங்கே இழுத்து விடவும். இப்பொ ழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்டவோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினை க் கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும்

இரவில் பேய்கள் என்னைமட்டும் துரத்தி ஓடிவந்தன!

கதை சொல்ல நச்சரித்தது
 
குழந்தை.
 
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
 
அனைவரும் உறங்கிவிட்ட
 
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
 
துரத்தி ஓடிவந்தன என்று
 
தொடங்கினேன்.
 
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
 
பின்னெப்படி ஓடிவரும் என்றது
 
குழந்தை.
 
உறங்கிவிட்ட பாவனையில்
 
கண்மூடிக்கிடந்தேன் நான்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top