.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 6 November 2013

கூடுதலாக ஒளிர்கிறது மின்மினி....கவிதை!!

கூடுதலாக ஒளிர்கிறது
மின் மினி
இன்று அமாவாசை
-
புகுந்த வீடு
பெண்களுக்கு
சுடும் காடு
-

கணக்கிடுகிறது
ஏமாற்ற முடியாது
காலத்தை

இறந்தோரின் திதியாக
வேலை வாய்ப்பகத்தில்
புதிப்பித்தல் தேதி

காதோடு பேசுவேன்..கவிதை!!

பாதணி
பாதத்திற்கு முகமூடி
வழித்துணை
-
பேசும் வண்ணம்
அழைக்கும்
கூண்டுக்கிளி

-
காதோடு பேசுவேன்
அவள் கையில்
செல்போன்
-
சோதித்து விட்டு தான்
உண்ணும்
அன்னப்பறவை

-
கிணறு தோண்டினால்
பாறையும் இருக்கு
பூமியின் கட்டுமானம்

இசைஞானி இளையராஜா - தாயைத் தெய்வமென வணங்கு!

உன் தாய் உன்னைப் பெற்றபோது பட்ட
பிரசவ வேதனைக்கு – ஈடாக – நீ என்ன
திருப்பித் தர முடியும்?

-
மனிதனாக – எத்தனைப் பிறவியெடுத்தாலும்
அத்தனைப் பிறவியலும்
அன்னையை
வேதனைப்படுத்தாமல்
நீ பிறக்க முடியாது!

-
அந்த வேதனைக்குப் பரிகாரமாக
நீ எது செய்தாலும் – அது குறையுடையதே!
அதனால்
உன் தாயைத் தெய்வமென வணங்கு!
அந்த வணக்கம் -
எந்த பள்ளத்தையும் நிறைவு செய்துவிடும்.


மனதால்….கவிதை!!




அன்புத் தாயே!
மரணத்தின் கதை கேளாய்…
என்
திரும(ர)ணக் கதை கேளாய்!
வாயைக் கட்டி,
வயிற்றைக் கட்டி,
உதிரம் சிந்தி
உழைத்த உழைப்பெல்லாம்
விழலுக்கு இறைத்த
நீராகி விட்டதம்மா!
ஐந்து காசு பெறாதவனுடன்
அட்சதை தூவி
அனுப்பி வைத்தாய் என்னை
அவன்
ஆண்பிள்ளை என்றதனால்…
அரை லட்சம்
சம்பாதித்தும்,
அடிமை வாழ்வு
வாழ்கிறேன் என்பதை
நீ அறிவாயோ?
மீண்டு வர வழியில்லை
மீட்டெடுக்க யாருமில்லை
மீளா உலகம் – நீ
சென்றதனால்!
உயிருள்ள சடலமா
உலா வருகிறேன்…
மனதால்
மரித்து விட்டதனால்!

விடியல்.. கவிதை!!


நிலவின் குளிர் தாங்கா அலையொன்று

மீனாக உருமாறித் தாவிக் குதிக்கிறது

மேகக் கூட்டுக்குள்

சலனம் கலைக்கப்பட்ட கோபத்தில்

தகிக்கத் தொடங்குகிறது

சூரியப்பறவை

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top