.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 15 September 2013

மெமரி கார்டு தன்மை, வகைகள் குறித்த சில தகவல்கள்!

செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் நான்கு வகை கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்....எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன....

மந்தாரையின் மருத்துவ பயன்பாடு!

சென்னை போன்ற பெரு நகரங்களில் மந்தாரை இலைகளைச் சேர்த்து ஈக்குகளால் தைத்து சோறு சாப்பிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். உணவு  சாப்பிட பயன்படும் இந்த இலைகள் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இரத்தபேதி, இரத்தவாந்தி, போன்றவற்றிற்கு மந்தாரை மொக்குகள் மிகச்  சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மந்தாரை மலர்களும், மந்தாரை மரத்தின் பட்டைகளும் கூட மருத்துவச்சிறப்பு பெற்று திகழ்கின்றன. இரண்டு கிலோ எடைக்கு மந்தாரை மொக்குகளைச் சேகரித்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை  காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பல வியாதிகள் போன்றவற்றிற்கும் குறிப்பாக பெரும்பாடு உதிரப்போக்கு நோய்க்கும் மிகச்சிறந்தது. ...

எண்ணெய் வயல் முதல் ஏடிஎம் வரை உளவு பார்க்கும் அமெரிக்காவின் ‘பறக்கும் பன்றி’ ‘மவுன நாய்க்குட்டி’

 வெளிநாடுகளின் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் ஊடுருவி, ரகசிய தகவல்களை சேகரிக்கவில்லை என்று அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவாதம் கொடுத்தாலும், அதன் உளவு அமைப்பு, பிரேசில் நாட்டின் எரிவாயு கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களில் இருந்த ரகசிய ஆவணங்களை ‘திருடியிருப்பது’ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.    அமெரிக்காவின் உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, வெளிநாடுகளுடன் ‘சைபர்’ போர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது. பல ரகசிய ஆவணங்களை, அந்தந்த அரசுகளின் சீக்ரட் கம்ப்யூட்டர்களில் ஊடுருவி ‘திருடுகிறது’ என்று எட்வர்ட் ஸ்னோடென் சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார்.  அமெரிக்க உளவு ஏஜன்சியின் முன்னாள் அதிகாரியான இவர் இப்படி ரகசிய...

நண்பனாகும் தகுதி...................குட்டிக்கதைகள்

சுண்டெலி ஒன்று .....தவளை ஒன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்தது.தவளையோ பெரும்பாலும் தண்ணீரிலேயே வசித்து வந்தது.....அது ஒரு நாள் சுண்டெலிக்கு ...தான் நீச்சல் கற்றுக் கொடுப்பதாகக்கூறி ...சுண்டெலியின் காலை தன் காலுடன் ஒன்று சேர்த்து கயிற்றால் கட்டிக் கொண்டது.அப்போது மேலே பறந்த பருந்து ஒன்று இவற்றைப் பார்த்து கொத்த வந்தது.உடனே தவளை ...சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது.தண்ணீரில் சுண்டெலி மூழ்கி மூச்சு திணறி இறந்தது...அதன் உடல் மேலே மிதந்தது...ஆனால் கால்கள் இன்னமும் தவளையுடன் சேர்த்துகட்டப்பட்டிருந்தது....அந்த சமயம்...தண்ணீரில் செத்த சுண்டெலி மிதந்ததைப் பார்த்த பருந்து கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன்...

கோச்சடையானில் 2 நாளுக்கு ரூ.3 கோடி வாங்கிய தீபிகா படுகோனே...!

ரஜினியின், கோச்சடையான் படத்தில் இரண்டே இரண்டு நாள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் நடிகை தீபிகா படுகோனே. ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது அப்பா ரஜினியை வைத்து இயக்குநராக அவதரித்துள்ள படம் கோச்சடையான். 3டி அனிமேஷனாக மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான அவதார், டின் டின் பட பாணியில் தயாராகியுள்ளது இப்படம். சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டது. வெளியான இரண்டு நாளில் சுமார் 2 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்து மகிழ்ந்துள்ளனர். ரஜினி இந்தபடத்தில் முற்றிலும் வித்தியாசமாக தோன்றுகிறார், அதுவும் இ‌ளமையாக காட்சியளிக்கிறார். இதற்கிடையே இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படு‌கோனே நடித்துள்ளார். படத்தில்...

வாயேஜர் விண்கலம் சாதனை : ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது!

சூரிய மண்டலத்தை கடந்து சென்றுள்ள முதல் விண்கலமான அமெரிக்காவின் வாயேஜர் 1 முதன்முறையாக சில விநாடிகள் நீடிக்கும் ஒலியை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வாயேஜர்  1 என்ற விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியது. அதற்கு துணை விண்கலமாக 16 நாட்களுக்குப் பிறகு வாயேஜர்  2 விண்கலத்தையும் அனுப்பியது. ரூ.6500 கோடி செலவில் இந்த திட்டத்தை நாசா செயல்படுத்தியது. 36 ஆண்டுகள் பயணம் செய்த வாயேஜர்1 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சூரிய மண்டலத்தை கடந்து இன்டர்ஸ்டேல்லர் மண்டலத்தை அடைந்தது. சூரியனில் இருந்து ஏறக்குறைய 1900 கோடி கி.மீ. தூரத்தில்...

அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது!

இந்தியா தயாரித்த அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி-5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர் வீலர் தீவு பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை சீனாவை மிரட்டும் அளவிற்கு பலம் படைத்ததாகும். இது போன்ற அக்னி 5 சோதனை கடந்த 2 ஆண்டுகளில் இன்று 2வது முறையாகும். அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா போன்ற 5 நாடுகளில் மட்டுமே இது போன்ற அணு ஆயுதம் சுமந்து தாக்கு ஏவுகணையை கொண்டுள்ள நாட்டில், இந்தியாவும் 6 வது நாடாக இடம் பிடிக்கிறது. இதுவரை குறைந்த தூரம் மட்டுமே செல்லக்கூடிய அக்னி தற்போது 5 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சென்று...

"கர்வம் கூடாது"...................குட்டிக்கதைகள்

ரமேஷ் புத்திசாலி மாணவன்...அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு என நிரூபிக்க வேண்டும் என எண்ணினர்அப்போது ...அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த வினோத் என்ற மாணவன் அந்தப் பணியை ஏற்றான்.அவன் ரமேஷிடம் சென்று 'ரமேஷ் நீ புத்திசாலி ..அதேபோல நானும் உன்னைவிட புத்திசாலி தான்' என்றான்.கோபமடைந்த ரமேஷ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ..'நான் ஒரு கேள்வி கேட்பேன் .உனக்கு விடை தெரியவில்லை எனில் நீ எனக்கு பத்து ரூபாய் தரவேண்டும்.நீ கேட்கும் கேள்விக்கு...

நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே?

நிஜத்தில் கெட்டவனாக வாழ்ந்து நிழலில் நல்லவர்களாக வாழ்வதும் நிஜத்தில் நல்லவனாக வாழ்ந்து, நிழலில் கெட்டவர்களாக நடிப்பதும் சினிமாவின் இன்னொரு பக்கம்….இதுவரை ஏற்ற அனைத்து வேட்ன்களுமே நெகடிவ் தான் என்றாலும் ஜீவன் அப்படியொன்றும் கெட்டவனில்லையாம் …ஆம்..சுமார் இரண்டரை வருடங்களாக திரை வட்டாரத்தில் இருந்து விலகி இருந்த ஜீவன் திடீர் அவதாரம் எடுத்திருக்கிறார்.இதையடுத்து கண் இல் பட்ட அவரிடம் “என்ன..நடுவுல கொஞ்சம் ஜீவனை காணோமே ? என்று கேட்டோம்.அதற்கு பதிலளித்த ஜீவன்”கிருஷ்ணா லீலை முடிந்து ரிலீஸுக்கு தயாரானது சில காரணங்களால் தடை பட்டு போனது அது ரிலீஸாகி இருந்தால் இந்த இடைவெளி தெரியாமல் போயிருக்கும் .அதோடு நான் கலையுலகில் பயணித்த காலம் வேண்டுமானால் அதிகமாக...

டி-சர்ட் அணிந்து அலுவலகம் வரத் தடை!: கர்நாடக அரசு அதிரடி!!

அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.அதில் “புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார்...

அழகை பராமரிக்க இயற்கை வழிகள்!

 இயற்கையான அழகுக்கு ஏங்காதவர்கள் யாரேனும் உண்டா? எப்போதும் அழகாகத் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் உண்டு. அதற்காக பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது உண்டு. அதே நேரத்தில், வேதிப்பொருள் குறைவாக உள்ள அல்லது வேதிப்பொருட்களே இல்லாத அழகு சாதனப் பொருட்களையே விரும்புகிறோம். வேதிப் பொருட்கள் கலந்த அழகு சாதனப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது மட்டுமல்ல. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவை சருமத்திற்கு, கூந்தலுக்கு மற்றும் உடலுக்கு கேடுகள் விளைவிப்பவை என்றும் அனைவரும் நன்றாக அறிவோம். எனவே, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தி வரும் இயற்கையான பொருட்கள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, உடலை அழகாகப் பராமரிப்பதற்காக, சில அழகுக் குறிப்புகள்...

கம்பு அடை!

தேவையானப் பொருள்கள்: கம்பு மாவு-ஒரு கப் சின்ன வெங்காயம்-7 பச்சை மிளகாய்-1 பெருஞ்சீரகப் பொடி-சிறிது கொத்துமல்லி இலை-ஒரு கொத்து கறிவேப்பிலை-ஒரு கொத்து உப்பு-தேவைக்கு நல்லெண்ணெய்-தேவையான அளவு செய்முறை: * வெங்காயம்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை,கொத்துமல்லி,பெருஞ்சீரகப் பொடி,உப்பு இவற்றைப் போட்டு பிசைந்துகொண்டு அதில் கம்புமாவை சேர்த்து நன்றாகப் பிசையவும். * பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துப் சப்பாத்தி மாவு பதத்தைவிட கொஞ்சம் இறுக்கமாகப் பிசைந்துகொள்ளவும். * கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு மாவு முழுவதும் தடவி ஒரு 10 நிமிடத்திற்கு...

மனதில் உறுதி வேண்டும்.........குட்டிக்கதை

 அது ஒரு சிறு கிராமம்...அந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்னை வந்தது...மக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கிணறு வெட்ட தீர்மானித்தனர்.ஒரு இடத்தை தீர்மானித்து ...அந்த இடத்தில் இருபது அடி ஆழம் தோண்டினர்.ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை..இடம் சரியில்லை என நினைத்து வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கு முப்பது அடி வெட்டினர்.அங்கும் அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.அந்த இடமும் சரியில்லை என மூன்றாவதாக ஒரு இடத்தை கண்டுபிடித்து அங்கு ஐம்பது அடி வெட்டினர்.தண்ணீர் இல்லை.மூன்று இடங்களிலும் சேர்த்து அவர்கள் நூறடிக்கு மேல் தோண்டியுள்ளனர்.அவர்கள் தங்கள் முயற்சியை ஒரே இடத்தில் பொறுமையுடன் மேற்கொண்டிருந்தால் முதலில் வெட்டிய இடத்திலேயே தண்ணீர் கிடைத்திருக்கும்.மனதில்...

ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது ஏன்?

கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top