.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, 9 October 2014

விஞ்ஞானிகளாக பிரத்யேக படிப்பு - திறன்மிக்கவரின் வாழ்வில் பூரிப்பு ...!!!

 விஞ்ஞானியாகும் லட்சியம் கொண்டவர்களுக்கான பிரத்யேக படிப்பாக பி.எஸ்-எம்.எஸ். ஐந்தாண்டு படிப்பு உள்ளது. டூயல் டிகிரி புரோகிராமான இப் படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் நேரடியாக நுழைவுத் தேர்வு எழுதி சேரலாம். இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐ.ஐ.எஸ்.இ.ஆர். (இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்) கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. போபால், கொல்கத்தா, மஹாலி, பூனே, திருவனந்தபுரம் ஆகிய ஐந்து பெரு நகரங்களில், ஐ.ஐ.எஸ்.இ.ஆர். இயங்கி வருகிறது. இக் கல்வி நிறுவனத்தில் சாதாரணமாக சேர்ந்து விட முடியாது. அதி புத்திசாலித்தனம், படிப்பில் திறமை மிக்கவர்களை பல்வேறு கட்ட நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சோதித்து, சேர்த்துக்...

கசக்கும் வேம்பின் இனிக்கும் நன்மைகள்....!

வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது. வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து...

Sunday, 19 January 2014

Pandigital Number ஓர் எளிய அறிமுகம் ( வீடியோவுடன்)

Pan Digital Numbers பற்றியும் அவற்றின் சிறப்பு தன்மை பற்றியும் காணலாம். Pandigital Numbers க்கு பொருத்தமான தமிழ் கிடைக்கவில்லை. Pandigital Number என்றால் என்ன? முதல் எண் 0 அல்லாத 0-9 வரை உள்ள அனைத்து இலக்கங்களையும் உள்ளடக்கிய எண் Pandigital Number எனப்படும்.  "zeroless" pandigital  என்றால் அவை 1-9 வரை உள்ள இலக்கங்களால் ஆனவை. இது அடி 10 (base 10) க்கு உரியது. இப்படி எந்த அடியிலும் அந்த அனைத்து இலக்கங்களை உள்ளடக்கிய எண்கள் PanDigital Numbers எனப்படும். சில சந்தர்ப்பங்களில் இவற்றில் வந்த எண் மீள வர கூடாது சொல்லப்படுகிறது. பல வகையான விளக்கங்கள் Pandigital Numbers க்கு வழங்கப்படுகின்றன. இந்த வகையில் மிகச்சிறிய Pandigital...

எப்படியெல்லாம் பேசக்கூடாது?

மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும். மனதை தகர்க்கும்...

Tuesday, 7 January 2014

பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!

புதிய உலகத்தில்பெரியமனுசியாய்கடமைகளுடன்கால்தடம் பதிக்கிறாய்.வா.பெருமையுடனும்மரியாதையுடனும்வலிமை பொங்கநடந்து வா.இன்று முதல்நீ -நம் மக்களின் தாய்.நம் தேசத்தின் தாய்.பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின்...

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!           ...

உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?

என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.இரண்டில் "எது ஜெயிக்கும்?""நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்""எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....சரி, நம்முடைய...

Monday, 6 January 2014

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்!!!

(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும்...

வெற்றிக்கான சுருக்கு வழி.

வெற்றிக்கான சுருக்கு வழி.1.என்னுடைய உறுப்புகள் விலங்குகளின் வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன,மாறாக என்னுடைய எண்ணங்கள் கடவுளின்  படைப்பாற்றல்  வழியாக  .என்னுடைய உறுப்புகளின் வழியாக விலங்குகளின்  குணங்களும் என்னுடைய சிந்தனைகள்  வழியாகக் கடவுளின் படைப்பாற்றலும்.இவை இரண்டின் செயல்களும்  இயற்கையாகவே கடவுளின்  படைப்பாற்றல் வழியில்.உறுப்புக்களின் செயலில்  கடவுளின்  எண்ணத்தைச் செயல் படுத்தும் போது அது கடவுளின் படைப்பாற்றலாகவும் உறுப்புக்களைத் தன்னிச்சையாக விடும் போது  அவை விலங்குப் பண்பையும்  வெளிக்  காட்டுகின்றது.2.நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு .நாம்  ஒவ்வொருவரும் ...

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வுஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி...

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?

பழக்கங்களை சமாளிப்பது எப்படி?        தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் இது முதுமொழி.எனவே நமது ஆரம்பகால பழக்கங்கள் புதிது புதிதாய் ஆழ்மனதில் தொடர்ந்து பதிந்து கொண்டே வருகிறது.    எதுவும் பழக்கமாகுவது கெடுதலா?   மனோதத்துவ முறையில் பழக்கம் என்பது மனதில் உருவாகும் ஒரு பதிவு.பெரும்பாலான நமது திறமைகள் பழக்கத்தின் ஆதாரத்திலேயே உருவாகின்றன.   அவற்றை இருவகைகளாக பிரித்து கொள்ளலாம் ஒன்று நல்ல பழக்கவழக்கங்கள்,மற்றது தீய பழக்க வழக்கங்கள்.முன்னது வளர பின்னது தேய அவனது வாழ்க்கையில் உயர்வும் நல்ல பல குண நலன்களையும் அடைகிறான்.   இரண்டிலும் மனபழக்கங்கள்,உடல் பழக்கங்கள் என இரண்டு வகை...

Sunday, 5 January 2014

தோல்விக்கு நன்றி சொல்!

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க முடிகிறது. பலர் வெற்றிப்பாதையில் வரும் தடைகளை எண்ணி மனம் துவண்டு தனது குறிக்கோள்களைக் குறுக்கிக் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. எவ்வித தடை வருமாயினும் சிலர் குறிக்கோள்களை விடா முயற்சியுடன் அடைய முனைவதே தன்னம்பிக்கையாகும்.வெற்றியாளர்களில் இருவகை, ஒன்று வெற்றிக்கான அடிப்படை வசதிகள், அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வெற்றிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி அதில் வெற்றி காண்பவர்கள். இவற்றில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களே மேலோங்கி நிற்பவர்கள். ஏனென்றால், இவர்களுக்கு எந்த...

ஆறுதல் சொல்வது எப்படி ?

உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.• "அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு...

நீங்கள் நல்ல நுகர்வோரா?

ஒரு பிரபலமான பிஸ்கெட் நிறுவனம். அவர்கள் தயாரித்த 50 கிராம் இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்று 36 கிராம்தான் இருந்தது. உடனே நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். உடனே நிறுவனத்தில் இருந்து செட்டில்மென்ட் பேசி முடிக்க வந்தார்கள். நாங்கள் ஒத்துக் கொள்ளாமல் வழக்குத் தொடுத்திருக்கிறோம். ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் 14 கிராம் பிஸ்கெட் குறைந்தால் என்ன? பெரிய இழப்பா? என்று கேட்கலாம். ஆனால் அந்த ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைப் போல அந்தப் பேட்சில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிஸ்கெட் பாக்கெட்களும் அதே எடையில்தானே இருந்திருக்கும்? அப்படியானால் அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம்? நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு எவ்வளவு நஷ்டம்? வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.நாடு...

பாரத ரத்னா நெல்சன் மண்டேலா

இனத்தின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, சற்றும் தளராமல் தன் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போராளி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சென்ற நூற்றாண்டின் கடைசி அறவழிப் போராளியான அவரை இந்த நூற்றாண்டில் உலகம் இழந்துவிட்டது.தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் மாகாணத்தில் உம்டாடா பகுதியில் உள்ள மெவிசோ கிராமத்தில் 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவரது அப்பா, காட்லா. அம்மா, நோஸ்கெனி. பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், ரோபிசலா மண்டேலா. ரோபிசலா என்றால் கலகக்காரர் என்று அர்த்தம். பின்னாளில், அவர் உரிமைகளைப் பெறுவதற்கான கலகத்தில் ஈடுபட்டு உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார்.மண்டேலாவின் முன்னோர்கள் அப்பகுதி...

தடைகளே ஓடி வா!

தடைகளே ஓடி வா!1.எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?.வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது,நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர்பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது.தடைகளை கண்டு அணைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம்.அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?2.தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமானதல்ல,தடைகள் தான் வாழ்க்கை,அந்த தடைகளை நாம் எதி நோக்கவில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்றுதான் பொருள்.நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த காலகட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று அதனை எதிர் நோக்கியிருந்தோமோ, அந்த கால...

Saturday, 4 January 2014

மரணத்தின் மறுபக்கம்...!

எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்.  பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே.  என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.  மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும்.  எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.  எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  எமது வாழ்வில் நாம் செய்யாத...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top