
ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பிலே ஸ்டோர்) பார்க்கலாம்.வாங்கலாம்.இப்போது கூகுலே ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.கூகுலே உருவாக்கிய செயலி இது.செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடியது.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளங்கையில் வந்து நிற்கு இந்த பாலம் வாயிலாக நீங்கள் உங்க்ளை உள்ளம் கவர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை வழங்கலாம்....