
அஜீத்–நயன்தாரா, ஆர்யா–டாப்சி நடித்த ‘ஆரம்பம்’ படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது என்று பட அதிபர் ஏ.எம்.ரத்னம் கூறினார்.‘ஆரம்பம்’ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், ரகுராம் தயாரித்துள்ள படம், ‘ஆரம்பம்.’ இந்த படத்தில் அஜீத்–நயன்தாரா ஒரு ஜோடியாகவும், ஆர்யா–டாப்சி இன்னொரு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்கள். பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த படத்தை விஷ்ணுவர்தன் டைரக்டு செய்து இருக்கிறார்.படத்தின் உச்சக்கட்ட காட்சி துபாயில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றி பட அதிபர் ஏ.எம்.ரத்னம் கூறியதாவது:–3 நாளில் உச்சக்கட்ட காட்சி‘‘வில்லன் கும்பலை அஜீத் ஒரு படகில் துரத்தி செல்வது போன்ற காட்சியை நடுக்கடலில் படமாக்கினோம். இதற்காக அஜீத்துக்கு படகோட்டும்...