
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சொந்த மண்ணில் களம் காண்பதால் ஆனந்த் கூடுதலான எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் அளாகி இருக்கிறார்.43 வயதான ஆனந்துக்கும் 22 வயதான கார்ல்சனுக்கும் இடையிலான இந்த போட்டி அனுபவத்துக்கும் இளைமை துடிப்புக்குமான மோதலாக...