.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 31 October 2013

usb மூலம் உங்கள் கணணியை லாக் செய்ய

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு USB பென்டிரைவ் மூலம் இதைச் செய்யலாம். பென்டிரைவ் என்பது கோப்புகளை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Device. அதையே சாவியாக பயன்படுத்த முடியும்.இதற்கென இணையத்தில் ஒரு புரோகிராம் இருக்கிறது. அந்த புரோகிராமிற்கு பெயர் பிரிடேட்டர் (Predator). இது முற்றிலும் இலவசமான புரோகிராம். இனி உங்களிடம் உள்ள பென்டிரைவை, கம்ப்யூட்டரில் உள்ள USB போர்ட்டில் செருகினால் மட்டுமே உங்களுடைய கம்ப்யூட்டர் பயன்படுத்த முடியும்.மற்றவர்கள் பயன்படுத்தவே முடியாது. அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் அக்சஸ் டினின்ட் (Access denied )அதிலிருந்து எடுத்துவிட்டால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியாது?இந்த...

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்..!

  செல்கான் மொபைல் நிறுவனம் புதிய செல்கான் ஆண்ட்ராய்ட் மொபைலை வெளியிட்டுள்ளது. சிறப்பு மிக்க இந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் இந்திய சந்தையில் ரூபாய் 3,999 க்கு இன்று முதல் கிடைக்கும் என அறிவித்துள்ளது செல்கான் நிறுவனம். Celkon Campus A15 என்ற பெயருடைய இந்த மொபைலானது ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போன் ஆகும். இதில் அடங்கியுள்ள சிறப்பு வசதிகளைப் பார்ப்போம். 3.5 அங்குல HVGA திரையுடன் உள்ள இப்போன் Android 4.2.2 இயங்குதளத்தில் இயங்குகிறது. இப்போனை இயக்கும் சிறந்த செயலியாக 1GHz dual core processor அமைந்துள்ளது. நிழல்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க 3.2 MP rear Camera அமைந்துள்ளது. 1400 mAh battery ஆனது...

மழை மழையாகவே இருந்தது!

பிறிதொரு நாளில்  கன்னத்து லிப்ஸ்டிக் முத்தம்  அழிக்க முயற்சித்தது  மழை பிறிதொரு நாளில்  கண்களின் நீர்த்தாரைகளை  மறைத்துக் கொண்டோடியது  மழை பிறிதொரு நாளில்  நிகழ்ந்த பிரிவின்  உருவை ஈரமாக்கியது  மழை பிறிதொரு நாளில்தான்  மழை மழையாகவே  இருந்தது நீ என்னோடு மார்பணைந்து  நனைந்திருந்த அன்று  ********************************...

ந ள் ளி ர வு ம ழை!

எச்சில் காய்ந்திடாத முத்தத்தின்  ஈரமாய்  உறக்கத்தின் ஆழ்நிலையில் ஊட்டிய‌  உணவாய்  புணர்தலின் முடிவிலான இயக்கத்தின்  நனைதலாய்  தூரலிட்டுப் போயிருக்கிறது  ந  ள்  ளி  ர  வு  ம   ழை********************************...

சாளரம்!

சாளரம் இந்தச்சாளரம்  இப்பேருலகின் உட்செல்ல  எனக்கான வாசலாயிருக்கிறது  மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்  நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்  இங்கிருந்தே என் கரங்களுக்கு  எட்டுவனவாய் இருக்கின்றன சாரல் சிதறடித்தபடியோ  இளவெயிலின் புன்னகையுடனோ  என் அத்தியாவசிய முகங்கள்  இதன்வழியேதான்   எனதறைக்குள் பிரவேசிக்கின்றன நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்  வியாபாரத்திற்காய் விரைகின்ற  பெருங்கூட்டத்தின் தந்திரங்களை  இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது சாலையில் பரபரப்புகள் நிறையும்  பாரமான பொழுதுகளில்  திரைச்சீலை இழுத்து நகர்த்தி  தனித்துப்போதலும்கூட இங்கே  மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு **********************...

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட!

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்ப…தில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும். இனி மைக்ரோசாப்ட்...

இரவில் பேய்கள் என்னைமட்டும் துரத்தி ஓடிவந்தன!

கதை சொல்ல நச்சரித்தது  குழந்தை.  பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.  அனைவரும் உறங்கிவிட்ட  ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்  துரத்தி ஓடிவந்தன என்று  தொடங்கினேன்.  பேய்க்குத்தான் கால்கள் இல்லையே  பின்னெப்படி ஓடிவரும் என்றது  குழந்தை.  உறங்கிவிட்ட பாவனையில்  கண்மூடிக்கிடந்தேன் நான்...

குழந்தை!

அப்பாவும் அம்மாவும்  தராத அரவணைப்பை  பொம்மைக்கு தந்தபடி  உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.  கனவில் தோன்றிய கடவுள்கள்  அச்சிறு குழந்தையின் அரவணைப்பை  வரமாய் கேட்டனர்.  வரிசையில் நின்றிருந்த  கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை  தந்துவிட்டு பொம்மையை  இறுக்கி அணைத்துக்கொண்டதது.  பொம்மையாதலின் வழிமுறைகள்  அறியாமல் விழித்தபடிநின்றனர்  கடவுள்கள்...

கவிஞர் வைரமுத்து பாடிய அசத்தல் தாலாட்டு!

வேலைக்குப்போகும் பெண் குழந்தைக்குத் தாலாட்டினால் எப்படி இருக்கும்?என்ன சொல்லித் தாலாட்டுவாள்? சோலைக்குப் பிறந்தவளே!சுத்தமுள்ள தாமரையே!வேலைக்குப் போகின்றேன் வெண்ணிலவே கண்ணுறங்கு! அலுவலகம் விட்டு அம்மா வரும்வரைக்கும் கேசட்டில் தாலாட்டு கேட்டபடி கண்ணுறங்கு ஒருமணிக்கு ஒருபாடல் ஒலிபரப்பும் வானொலியில் விளம்பரங்கள் மத்தியிலே விழிசாத்தி நீயுறங்கு! ஒன்பது மணியானால் உன் அப்பா சொந்தமில்லை ஒன்பது முப்பதுக்கு உன் அம்மா சொந்தமில்லை ஆயாவும் தொலைக்காட்சி அசதியிலே தூங்கிவிட்டால் தூக்கத்தைத் தவிர துணைக்கு வர யாருமில்லை இருபதாம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!இதுதான் கதியென்று இன்னமுதே கண்ணுறங்கு! பேருந்தில் நசுங்கிப் பிதுங்குகின்ற வேளையிலும் எடைகொஞ்சம் இழந்து இறங்குகின்ற வேளையிலும் கோப்புக்குள் மூழ்கி குடியிருக்கும் வேளையிலும் பூப்பூவாய் உனது முகம் புறப்பட்டு வரும் கண்ணே! தந்தை வந்து கொஞ்சுவதாய்...

காப்புறுதிக்கும் காப்புறுதி!

நாங்க,திரவியம் தேடப் போன கதை,தேடிய திரவியம் போன கதை தெரியச் சொல்றேன் கேளுங்கையா! பிள்ளைகள் மறந்து பெற்றோர் துறந்து பெருசாய் ஒழைச்சோம் பணத்தைச் செய்ய! வீட்டை மறந்து ஒழைச்ச தெல்லாம் வீணாய்ப் போச்சே என்ன செய்ய? சிறுகச் சிறுகச் சேத்த பணம் பெருகக் கண்டது பேதை மனம் – அதப் பெருக்க நெனச்சது தப்பு இல்ல! – இப்பப் பெருவாறாய் இழந்து நிக்கிது என்ன செய்ய? சீட்டுக் கம்பெனியில் போட்டு வைத்தால் சீக்கிரம் பணமும் பெருகுமென்றார்! – அவர் போட்ட பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட்டமெடுத்த கதையறிவீர்! பங்குச் சந்தையில் போட்டுவைத்தால் பத்தாய் நுìறாய்ப் பெருகுமென்றார்!பங்குச்சந்தைகள் விழுந்து போச்சு!பாதிப்பு ரொம்பத்தான் ஆயிப்போச்சு! நிலையில்லா வாழ்க்கையிலே நிம்மதியாய் இருப்பதற்கே வழிமறித்து வழிசொன்னார் ஒருமுகவர்! ஆருயிருக்கும் காப்புறுதி ஆபத்துக்கும் காப்புறுதி வீட்டின் பேரிலும் காப்புறுதி விளையும் பொருளுக்கும்...

கவிதைப்பெண்!

பெண்கள்  ஆண்களைவிடக் கவிதைக்கு  அதிகம் நெருக்கமானவர்கள்  காரணம்  பெண்களைப் போலவே  கவிதையும் மென்மையானது பெண்களைப் போலவே  கவிதைக்கும் நாணமுண்டு  கவிதையும்  எதையும் மறைத்தே சொல்கிறது கவிதையைப் போலவே  பெண்களும்  ஆழமானவர்கள் ;  சித்தர் பாடல்களைப்போல்  அவர்களைச் சீக்கிரமாகப் புரிந்து  கொள்ள முடியாது ;  சில புதுக் கவிதைகளைப்போல  கொஞ்சம் போராடினால்தான்  புரிந்து கொள்ள முடியும் அளந்து அளந்து  பெண்கள் அடியெடுத்து  வைப்பது போலவே  கவிதையும்  அடியெடுத்து வைக்கிறது பெண்கள் தங்களை  அலங்காரம் செய்து கொள்வதைப் போலவே  கவிதையும்  சொல்லணி, உவமையணிகளால்  தன்னை  அலங்காரம் செய்து கொள்கிறது ஆண்களைவிடப் பெண்கள்  கவிதைக்கு  அதிகம் ந...

பென்சில் நதி!

பென்சில் நதி நதி பற்றிய கவிதையை  நான் எழுதியபோது  அருகில் வந்த மகள்  வரைந்த நதியைக் காட்டினாள்  தாளில் ஓடியது  பென்சில் நதி  என் கவிதையை  அதில் கரைத்துவிட்டு  மறுபடி பார்க்க  இன்னும் முடியவில்லை  எனச் சொல்லியபடியே  ஓடிய அவள்  கண்களில் மீதி நதி  ****************...

டிஜிட்டல் கேமராவையும் மிஞ்சும் 41 மெகாபிக்சல் நோக்கியா மொபைல்!

 நோக்கியா நிறுவனம் அண்மையாக 41 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது என்பது பெரும்பாலோனோருக்கு தெரியும். நோக்கியா லூமியா 1020 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனின் ஆன்லைன் விற்பனையும் சிறப்பாக நடந்து வருகிறது. நோக்கியா லூமியா 1020 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கேமரா தான் விளங்குகிறது, டிஜிட்டல் கேமராக்களையும் மிஞ்சும் அளவுக்கு இந்த ஸ்மார்ட்போனின் கேமரா திறன் உள்ளது.   இதை பற்றி பார்ப்பதற்க்கு முன் இந்க போனின் மற்ற சிறப்பம்சங்களை பார்ப்போம். 4.5இன்ஞ் ஆமோலெட் டச் ஸ்கிரீன் வின்டோஸ்...

மழைக்குறிப்புகள்!

மழைக்குறிப்புகள்  > வீட்டு முற்றத்தில்  > தேங்கிய மழைநீரில்  > விளையாட  > கத்திக்கப்பல் செய்து தாவென  > ந‌ச்ச‌ரிக்கிறாள் ம‌து   > பழசின் அதிர்வுக‌‌ள் உறுத்த  > வேண்டும‌ட்டும் செய்துத‌ருகிறேன்  > தெறித்த ம‌ழையின்துளிக்கு  > மூழ்கிய க‌ப்ப‌லின் சோக‌ம் அழுத்த  > வீரிட்டு அழுகிறாள்  > தேற்ற வ‌ழியின்றி த‌விக்குமென் நினைவுக‌ளில்  > உடைகிறது ஒரு  > சிறு குமிழி...

நண்பா நீ என் வேர்!!

நண்பா நீ என் வேர்!! இன்ப நொடிகளில்  கனவுக் காலங்களில்,  வெற்றித் தருணங்களில்  உன் நினைவுகள் வருவதே இல்லை  ஆனால் தோல்வியின் துயரத்தில்  மனம் விரிசல் காண்கையில்  வாழ்க்கை உலர்ந்து கிடக்கையில்  பற்றற்று மரமாகிப் போகையில்-தான்  உணர்ந்து கொள்கிறேன்  என் வேர் நீயென்று… ************...

கல்லா மனிதன் மனம்?

கல்லா மனிதன் மனம்? ஏதோ நினைவுடன்  தனியே நடக்கையில்   ஒரு கல்லில் கண்டேன்,  ஒற்றை இதழுடன் மஞசள் மலர்  குட்டுப் பட்டதாய் உணர்ந்தேன்  யார் ஒப்பிட்டது  மனிதர் மனத்தைக் கல்லோடு………  *********...

உன்னோடு இருந்திருப்பேன்…

சுகம் தரும் உலகம் தான்,  பல நண்பர்கள் என்னோடு,  விரும்பிய நேரமெல்லாம் விளையாட்டு தான்;  இருந்தென்ன பயன்  உன் சுட்டு விரல் தீண்டலின்றி?  தாயே உன் கணினியாய் நானிருந்திருந்தால்  உன் ஸ்பரிசமாவது கிடைத்திருக்கும்….  *********...

மொபைலின் சில அடிப்படை விஷயங்கள்..

  இன்று நாம் அனைவரும் என்னதான் மொபைல் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் பல அடிப்படை பற்றி நிச்சயம் நமக்கு தெரிவதில்லை எனலாம் இதோ இங்கே கொஞ்சம் மொபைலில் அனைவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன இதோ இவற்றை பாருங்கள். இன்று நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன்...

பெஸ்ட் ஸ்மார்ட்போன் எது?

   தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டே இருக்கிறது… அதே சமயம் தீபாவளி பர்சேஸ் ஒரு சிலருக்கு இனிமேல்தான் தொடங்கும். ஆனால் உங்களுக்கென்றே பிரத்யேகமாக ஏதேனும் ஒரு பொருள் வாங்க நினைத்திருப்பீர்கள். பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன் வாங்குவதையே ஒரு பெரிய குறிக்கோளாகவே வைத்திருப்பார்கள். ஒரு நல்ல காஸ்ட்லி போன் வாங்க நீங்க தீர்மானிச்சிருந்தால் நிச்சயமாக தொடர்ந்து படியுங்கள். காஸ்ட்லி போன் வாங்குவதால் பல நன்மைகள் உண்டு. நல்ல தரமிக்க டிஸ்பிளே, அதிக பிக்சல் கொண்ட கேமரா, அதிக உள்ளக நினைவகம், மெமரிகார்ட் மூலம் அதிகமாக கோப்புகளை சேமித்து, சேகரித்து வைக்கும் வசதி. அதிக நாள் உழைக்க கூடிய, நீண்ட...

விஸ்வரூபம் ரகசியம்!

கமலின் விஸ்வரூபம் படத்தின் ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளன. உலகநாயகனின் படம் என்றாலே பல சுவாரசியமான செய்திகள் மறைந்திருக்கும். ஆனால் அவற்றையெல்லாம் வெளிவிடாமல் ரகசியமாக காத்து வருகிறார் கமல். இந்நிலையில் விஸ்வரூபம் படத்தின் ரகசியம் ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் படத்தில் இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் காட்சிகள் அனைத்தும் அடையாறு சத்யா ஸ்டுடியோ மைதானத்தில் எடுக்கப்பட்டவையாம். அமெ‌ரிக்காவில் எடுக்கப்பட்டதாக படத்தில் காட்டப்படும் காட்சிகள் கூட உள்ளூ‌ரில் எடுக்கப்பட்டவைதானாம். எல்லாமே கிராபிக்ஸ் வேலைகள் தான் என்ற ரகசியம் இப்போது தான் வெளிவந்துள்ளது....

"தல" ஒரு காட்சியில் கண்ணாடியை தூக்கி போட்டு மாட்டுகிறார்!

ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தல அஜித்தின் ஆரம்பம் படம் இன்று(அக்டோபர் 31) தமிழகம் எங்கும் வெளியானது.பில்லா வெற்றிக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்- அஜித் கூட்டணியில் உருவான படம் ஆரம்பம்.இப்படத்தில் அஜித்துடன் ஆர்யாவும் நடித்துள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நயன்தாரா- டாப்சி நடித்துள்ளனர்.இவர்கள் தவிர தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, அதுல் குல்கர்னி, ஆடுகளம் கிஷோர் என்று பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ஸ்ரீசத்யசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் தயாரித்துள்ளார்.இப்படம் இன்று தமிழகம் முழுக்க 1400 தியேட்டர்களில் ரிலீசானது.ஏற்கனவே சென்னை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அஜித்தின் ஆரம்பம் படம் ஒருவாரத்திற்கு புக்காகிவிட்டது.சென்னையில்...

வனம்!

ஆறு மாதத்திற்குப் பின் இங்கே வந்திருக்கிறேன் தியானத்திற்காய் …..உதிர்ந்த இலைகள் பொலிவிழந்த மரங்கள் ஹோ …..என் தியானம் எப்படிக் கழியும் அமைதியுடன் . ***** வனாந்திரத்தில் உதிர்ந்த பூக்களை மிதித்தபடி மரத்திலிருக்கும் பூக்களை ரசித்துக் கொண்டிருக்காதே .அதனதன் இயல்பிலிருக்கின்றன பூக்கள் . ***** வனத்தில் அமர்ந்து சிறிது நெருப்பைப் பற்ற வைத்தேன் .மரங்கள் அவற்றை தன் அருகிலிருக்கும் துணைமரங்களுக்கு கைமாற்றி விட்டுக் கொண்டிருந்தன ...

தமிழ் பெயர் படங்களுக்கும கேளிக்கை வரி -ஹைகோர்ட்டில் வழக்கு!

தமிழில் பெயர் வைத்த திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது என்றும், வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.கிட்டத்தட்ட நாலைந்து வருடங்களுக்கு முன்னாள் தமிழக மக்கள் உரிமைக் கழக இணை செயலாளர் புகழேந்தி பொதுநலன் கருதி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் “சினிமா படங்களுக்கு தமிழ் பெயர் சூட்டினால் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு 22.7.2006-ல் உத்தரவை பிறப்பித்தது. இதன்...

இயற்கை!

தொடர்ந்து  இயற்கையை அவதானித்துக்  கொண்டிருந்தேன்….  ………தொடர்ந்து..  வயதாகி விட்டது .  என் மகனிடம் கையளித்துவிட்டு  செல்கிறேன் .  மரங்களும்   தன் பங்கிற்கு  கிளை மரங்களை எழுப்பியிருக்கின்றன ...

துறவி!

தியானத்திற்குப்பின்  மூன்று துறவிகளும்  ஒரே கிணற்றுக்குள் இறங்கி குளித்தனர் .  குளித்து முடித்து வெவ்வேறு  கிணறுகளிலிருந்து வெளியே வந்தனர் .  முதல் துறவி சொன்னார் .  நான் குளித்த கிணற்றில் பாசிபடர்ந்திருந்தது .  இரண்டாம் துறவி ……..  நான் குளித்த கிணற்றில் நீர் உப்பு கரித்தது.  மூன்றாம் துறவி ………..  நான் குளித்த கிணற்றில்  27தவளைகளும் ,  நீர்ப் பாம்பொன்றும் இருந்ததென .  பின் ஒரே கிணற்றின் கரையில் நின்று  தத்தம் ஈர உடலை துடைத்துக்கொண்டன. ...

கிரிக்கெட் :மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான இந்திய அணி அறிவிப்பு!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் நடக்க உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி கோல்கட்டாவில் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது.இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.தோள்பட்டை காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படவில்லை.இந்திய அணி வீரர்கள் வருமாறு : தோனி,புஜாரா,சச்சின்,தவான், கோஹ்லி,அஷ்வின்,ரகானே,ரோகித் சர்மா,இஷாந்த் சர்மா,முரளி விஜய்,ஓஜா,உமேஷ் யாதவ், முகமது சமி,புவனேஷ்வர் குமார்,அமித் மிஸ்ரா.தனது கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நட்சத்திர ஆட்டகாரர் சச்சினுக்கும்...

ஈழத்தமிழனின் வேண்டல்!

ஈழத்தமிழனின் வேண்டல்!பழநிமலை முருகா பழம் நீ திருக்குமரா என்னும் மெட்டில்!  ********************கதிர்காம வேல்முருகா காப்பதுமுன் பாரமப்பா எம்துயரம் நீக்கிடுவாய் – முருகா தமிழீழம் எங்களுக்குத் தாபோரும் ஓயாதோ விடியலும் வாராதோ இடமின்றித் தவிக்கின்ற அவலமும் தீராதோ நிலைமை சீராக நிழலும் நிஜமாக நிம்மதியை எங்களுக்குத் தா – முருகா தமிழீழம் எங்களுக்குத் தா[கதிர்காம வேல்முருகா]இதுநாள் யாம்பட்ட இடரிங்கு போதாதோ இப்படியே எம்மக்கள் அழிவதும் சரியாமோ கருணைத் திருவுள்ளம் மிகுந்தவன் நீயல்லவோ கண்மலரை திறந்திடப்பா – முருகா தமிழீழம் எங்களுக்குத் தா[கதிர்காம வேல்முருகா]சூரனை மாய்த்திடவே வேற்படை நீகொண்டாய் சூரர்கள் பலவிங்கு எமையழிக்க வருகின்றார் கதிர்காமப் படைவீட்டில் பாங்குடனே நீயிருக்க எமக்கிந்த நிலை முறையோ – முருகா தமிழீழம் எங்களுக்குத்...

** விதைகள் **

கைகட்டிய சேவகனாய் பவ்யமாய் உள்நுழைந்தது பனி விலக்கிய ஒரு மதியப்பொழுது விலகலின் திசை நேரெதிரென  அறியப்பட்டிருக்கவில்லை அப்போது இரை விழுங்கி சுருண்டிருக்கும்  சர்ப்பமதின் செரித்தல் நிகழ்வென  மெதுவாய் நடந்தேறியது  வன்மத்தின் வாக்குவாதம் தென்றலின் தீண்டலை மறுத்துரைத்து  உஷ்ணக்காற்றாய் முகம் கிழித்தது  முள் தடித்த சொற்கள் எங்கோ பெய்யும் மழையின்  ம‌ண்வாசனையிலும்  அறுந்து விழும் நூலாம்படையிலும்  கருக்கொண்டுவிடும் இன்னமும்  விஷச்செடியின் வீரிய‌விதைகளென ...

சுண்டெலியின் மிரட்டலுக்கு அஞ்சி பெரிய யானை பதுங்குவதா?

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்கு பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என புது தில்லியில் உள்ள இலங்கைத் தூதர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.அதாவது இந்தியா தனிமைப்படுத்தப்படும் எனவும் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மிரட்டும் அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். ஒரு நாட்டின் தூதர் எந்த வரம்பிற்கு உட்பட்டுப் பேச வேண்டுமோ அந்த வரம்பைத் தாண்டி அவர் பேசியுள்ளார்.இந்தியாவின் தலைநகரிலேயே இந்த மிரட்டலை விடும் துணிவு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒரு நாட்டின் தூதர் இது போன்று வரம்பு மீறினால்...

எங்கே என் காதலி?

எங்கே என் காதலி?நிலவுப் பெண்ணை காணப் போகும் கணத்தை எண்ணி வெட்கத்தில் சிவந்த வானம் சிறிதே எனைச் சிந்திக்க வைக்கிறது.ஏன் கிடைக்கவில்லை எனக்கொருத்தி?நான் எழுதும் காதல் வரிகளின் தீவிரத்தைத் தாங்கவல்ல பெண் பிறக்கவில்லையா?அல்ல எனது வரிகள் எவளுக்கும் ஏற்றதில்லையா?இதோ என்னைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்…மணிக்கொரு முறை காதலியை அழகென்று நான் கூறமாட்டேன் நீ இல்லாது எனக்கு வாழ்வில்லை என்று வழக்காட மாட்டேன் என் வெற்றிக்கும் தோல்விக்கும் என்றும் நீயே காரணமென கூறி எனது 23 வருட வெற்றி தோல்விகளை பொய்யாக்க மாட்டேன் என் பெற்றோரை விட அவள் முக்கியமென்று அவளிடமோ, இல்லை அவளை விட எனது பெற்றோரகள் முக்கியமென வீட்டிலோ சொல்ல மாட்டேன் கணத்திற்கொருமுறை நான் உன்னை காதலிக்கிறேன்...

இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபராதம் செலுத்த ஒப்புதல்!

இன்போஸிஸ் நிறுவனம் அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் என்ஞ்னியர்களை அனுப்புவதில் விசா விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டிய அமெரிக்க அரசு ரூ.215 கோடி (35 மில்லியன் டாலர்) அபராதம் விதித்தது.இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் இன்போஸிஸ் நிறுவனம் ரூ.215 கோடி அபாரதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது.அமெரிக்காவில் அந்நாட்டினரை ஒதுக்கிவிட்டு குறைவான சம்பளம் கொடுத்து வெளிநாட்டைச்சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதாக அமெரிக்க தரப்பில் இருந்து இன்போஸிஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க...

இன்று வல்லபாய் படேல் பிறந்த தினம்!

 31 October 1875 – 15 December 1950 (aged 75)தற்போது நாட்டில் 28 மாநிலங்கள்,7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இது, இவர் இல்லையென்றால் இருந்திருக்காது.சிதறுண்டு கிடந்தஇந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர். அவர் தான் இந்தியாவின் “இரும்பு மனிதர்’ என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்.இன்று இவரது பிறந்ததினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது....

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்!

திரையுலகில் சரித்திர புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நடிகர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.ரஜினியின் கோச்சடையானும், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படமும் இதே கதையம்சத்தில் வருகின்றன. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் தயாராகும் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையம்சம் கொண்டது.கோச்சடையான் படத்தில் ரஜினி மன்னன், இளவரசன் என இரு வேடங்களில் வருகிறார். புராண காலத்தில் சிவ பக்தனாக வாழ்ந்த ஒரு அரசனை பற்றிய கதையே இப்படம். மன்னர் காலத்து ஆடை அணிகலன்கள், யுத்த கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவின் கெட்டப் காட்டுவாசியை நினைவூட்டுவதுபோல்...

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆனது?

நடிகர் சிம்பு ‘வாலு’, ‘வேட்டைமன்னன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களையும் நீண்டகாலமாக கடத்தி வந்த சிம்பு சமீபகாலமாக ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட ‘வேட்டை மன்னன்’ படம் குறித்து சிம்பு வாய் திறக்காமலே உள்ளார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்நிலையில், சிம்பு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில்...

குழந்தைகள் உலகம்.....தொடர் பதிவு

இன்று குழந்தைகள் ..அந்த வயதில் நாம் இருந்ததைவிட புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை வழி நடத்திச் செல்ல பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகளே அதிகம்.ஆகவே இத் தொடர் பதிவில் பெற்றோர்கள் பற்றியே எழுதியுள்ளேன்.மழலையர் உலகம்.....ஆஹா..சூது..வாது இல்லாத உலகம்...மழலைச்சொல்..இசையைப்போல மனதை மயக்கக்கூடியது...அதனால் தான் வள்ளுவனும்குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்.                       -   என்றான்......குழந்தைகள் மனம் நாம் சொல்வதை ' பளீச் ' என பிடித்துக் கொள்ளும்...பசுமரத்தாணிப்போல ...அதனால் தான் பெரியவர்கள் குழந்தைகளிடம் பார்த்து பேசவேண்டும்.குழந்தையிடம் 'பொய்...

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டைஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை"பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை.  அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top