
அழகை பராமரிக்க பெண்கள் எடுத்துக்கொள்ளும் பல சிகிச்சைகளில் கற்றாலையும் ஒன்று.. பொதுவாக அனைவரும் இதனை அழகுக்காகவும், தோல் பராமரிப்பிற்காகவும் ஆரோக்கிய உடல் நலத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர். கற்றாலை மூலிகையாக பயன்படுகிறது கற்றாலையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் கற்றாலை..கற்றாலையை தோல், உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். கற்றாலையில் பாலிசாக்கரைடுகள், லெக்டின், மேன்னஸ் போன்ற கலவைகளை கொண்டுள்ளது. கற்றாலையில் முக்கிய உறுப்பாக தண்ணீர் உள்ளது. இது தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல செயல்பாட்டு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது....