.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 18 January 2014

அழுத்தமில்லாத மனசு…

உறக்கம் விற்று மெத்தை வாங்கினேன்.பசியை விற்று உணவு வாங்கினேன்.என்ற வசனங்களை நாம் பலமுறை கேட்டிருப்போம். இதை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு ஒரே காரணம்தான். பணம், புகழ் என்று கிடைத்தற்கரிய அனைத்தும் இன்று சாத்தியப்பட்டுவிட்டது.இவற்றிக்கு வெகுமானமாக நாம் வழங்கியிருப்பவை நம் மன அமைதியையும் ஓய்வையும். பரிசாகப் பெற்றிருப்பது மன அழுத்தத்தை. இன்றைய மாணவர்கள் கல்லூரிப் படிப்பு முடித்த கையோடு பட்டத்துடன் சேர்த்து ஏதோ ஒரு நிறுவனத்தின் வேலை நியமன ஆணையையும் வாங்கி விடுகிறார்கள். கை நிறைய சம்பளத்தோடு அவர்களுக்கு மனம் நிறைய அழுத்தமும் இலவசமாக வழங்கப்பட்டு விடுகின்றன. நம்மில் பலருக்கும் இதே நிலைதான். மன அழுத்தம் தீவிரம் அடைகிற போது நம் அலுவலகங்களையும் தாண்டி...

புருவங்களின் அழகுக்கு…

கண்களும் தான். இதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.வில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது. முகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும்.முகத்திற்கே பல வடிவம் இருக்கிறது. சதுர முகம், நீண்ட முகம், முக்கோண முகம், வட்ட முகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த முக அமைப்புக்கு பொருத்தமானதாக, புருவம் இருக்க வேண்டும். உதாரணமாக, சதுரமான முக அமைப்பு கொண்ட பெண்களுக்கு, லேசாக ஒரு கோடு போல புருவ அமைப்பு இருந்தால், அது...

கூந்தலுக்கு வைத்தியம்

* தேங்காயைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.* சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும். நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.* விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும்....

“படித்ததும் கிழித்துவிடவும்” வகையிலான கைபேசி மென்பொருட்கள்...?

இணையத்தில் நீங்கள் தனிச் செய்தியில் பரிமாறும் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ ஒரு செர்வர் கணினியில் சேமித்து வைக்கப்பட்டே இருக்கும். சில மாதங்களுக்கு முன்னர் கூட, முகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் அழித்தாலும் , முகநூல் நிறுவனத்தின் கணினிகள் அதை எப்பொழுதும் ஒரு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது.ஆதலால், பல மென்பொருள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திற்கு வராமல் பயன்படுத்தவோ, சேமிக்கவோ மாட்டோம் எனும் வாக்குறுதியுடன் வெளிவந்தன.அதில் முதன்மையாகவும், வெற்றியும் பெற்ற நிறுவனங்களைப் பற்றிக் காண்போம்.டயாஸ்போரா (Diaspora)நான்கு மென்பொருள் வல்லுனர்கள் சேர்ந்து, முகநூலை...

இளநரையை போக்க வழிகள்...?

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும்.முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம்.ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது.அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற...

எல்லாவற்றையும் சரி ஆக்கும் இணையதளம்...?

வாழ்க்கை பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடும் மந்திர சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்ற உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. மேக் -எவ்ரிதிங் ஓகே எனும் அந்த தளம் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை தருகிறது.பிரச்சனைகள் வாட்டும் போதோ அல்லது மோசமான மனநிலையில் இருக்கும் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாம், ஆறுதல் வார்த்தைகளும், எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையும் தான். இவை இருந்தால் எந்த பிரச்ச்னையையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம்.மேக் -எவ்ரிதிங் ஓகே இணையதளம் இதை தான் செய்கிறது . இந்த தளத்தில் அப்படி என்ன இருக்கிறது ? ஒரு பட்டன் இருக்கிறது. மாய பட்டன் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அந்த பட்டன்...

கம்ப்யூட்டரை மாற்றும் புதிய ராம் சிப்கள்...?

புதிய வகை ராம் மெமரி சிப்கள் அறிமுகமாகி, வரும் ஆண்டுகளில் பெர்சனல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பெரும் புரட்சியைக் கொண்டு வர இருக்கின்றன. இப்போதெல்லாம், மெமரி மற்றும் கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ் என்பவனவற்றின் இடையே உள்ள மாறுபாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது. இது நாம் பெர்சனல் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதனை மாற்றப் போகிறது.புதிய சிப்கள், தற்போது டேப்ளட்டில் இயங்கும் வகையில், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் இயங்கும். இதில் MRAM (Magnetoresistive RAM) என்ற வகை மெமரி சிப் புதிய தொழில் நுட்பமான nonvolatile memory technology ஐக் கொண்டிருக்கும். இதே போல resistive RAM — RRAM சிப்களும் சில எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டதாக இருக்கும். வழக்கமான...

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்…!

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.  சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.  தூக்கணாங்குருவி...

அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன்

  பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததன் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களின் மனத்திலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் மனத்திலும் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், தல அஜித்துடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பினைப் பற்றி மனம் திறந்துள்ளார். ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரிப்பில் , ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, நவ்தீப் மற்றும் பியா நடிப்பில் கடந்த 2008.................  தொடர்ந்து இங்கே படிக்கலாம்....  அஜித்துடன் நடிக்கும் வாய்ய்பை இழந்தேன்..! - சிவகார்த்திகேயன...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top