
ராஜமௌலி இயக்கி வரும் தெலுங்கு படத்திற்கு தமிழில் ‘மகாபலி’ என்று பெயர் வைத்துள்ளனர்.நான் ஈ பட இயக்குனர் ராஜமௌலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சரித்திர பின்னணியிலான இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடம் ஏற்றிருக்கிறார். ‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ்தான் கதையின் நாயகன்.இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகர் - நடிகைகள் பலர் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. தெலுங்கு திரையுலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.இந்நிலையில் படத்தின் ‘மேக்கிங்’ சம்பந்தமான வீடியோ ஒன்றை, கதாநாயகன் பிரபாஸின்...