
சமீப
காலங்களில் வந்த படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான்,
கோலிவுட்டில் சூர்யா, பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பில்
நடித்தனர். படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் சிக்ஸ் பேக்
உடலமைப்பு கொண்டு வருவதற்காக நாள் ஒன்றுக்கு 15 நேரம் பயிற்சி எடுத்து
கொண்டார் என்பது போன்ற விளம்பரங்களும் வருவதுண்டு.
இந்த
சிக்ஸ் பேக் தீ, தற்போது இன்றைய இளைஞர்களிடம் பரவி உள்ளது. அழகின் முகவரி
எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக்
மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப்
பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள்
மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும்...