.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 21 January 2014

அக்னிசாட்சியாக திருமணம்....... ஏன்?

இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.திருமண உறுதி (நிச்சயதார்த்தம்): திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.சடங்கு முறைகள் :அவையில் சான்றோர்களுடன்...

காய்கறி வாங்குவது எப்படி?

1. வாழை தண்டு : பொறியல், சூப் - ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம் 6.தக்காளி :  தக்காளி வாங்குவது புளிப்பு சுவைக்காக, ஆரஞ்சு வண்ணத்தில்...

காதலில் ஆறு வகை..!!

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்’ காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும். அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே… மன்மதன் காதல் காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும்...

யூகலிப்டஸ் இலையில் தங்கம்

   யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் அகலத்தில் 5ல் 1 ...

குழந்தை மலச்சிக்கலை போக்கும் கைவைத்தியம்!

குழந்தைகள் ஆரோக்யமில்லாத உணவுப் பொருட்களின் மீது ஆசைப்படுகின்றனர். அதனை பெற்றோர்களும் வாங்கிக் கொடுப்பதால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தண்ணீர் இல்லாவிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். இவ்வாறு மலச்சிக்கல் ஏற்படும் போது குழந்தைகள் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். ஆகவே பெற்றோர்கள் குழந்தைகளின் பிரச்சனையை புரிந்து கொண்டு அவர்களை அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும். மேலும் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பல்வேறு உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை சரிசெய்யும் சில கைவைத்தியங்கள் உள்ளன....

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

   கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?                                                       இதோ பட்டியல்          பெருங்காயத்தில் ...

புகை பிடிப்பதால் 25 நன்மைகள் !

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டாலே மறைந்து நின்று ஒரு சிகரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.     பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும்.     நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top