Tuesday, 21 May 2013
எவ்வளவு சதவீதம் அன்பைக் காட்ட வேண்டும். - குட்டிக்கதைகள் - 7
01:11
ram
குட்டிக்கதைகள் - 7
ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்த பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.
அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும் எனக்கு தர்ரியா என்று கேட்டான்.குட்டி பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.
அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.
அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக உறங்கினாள்.அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை.அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டான்.
நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.
இது காதலுக்கும் ,நட்புக்கும்,வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் பொருந்தும்.
எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்
Microsoft-ன் அற்புதமான சேவை - உங்களுக்காக......
00:01
ram
கணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.
இந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது (Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது.
Microsoft-ன் Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 7 Gb இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது.
இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.
இதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.
Skydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Files, Recent docs, All photos, Shared, PCs என்ற ஐந்து பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
Files என்பதில் உங்கள் கோப்புகளையும் All photos பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.
Share என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பாக Email, Facebook, Twitter, Linkedin, Flickr, Sina Weibo மூலம் பரிமாறிக்கொள்ளலாம்.
Get a link-ல் View Only, View and edit, Public போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.
பயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.
இணையதளம் :
Note:-
{ The service offers 7 GB of free storage for new users.
Additional storage is available for purchase.
Users who signed up to SkyDrive prior to April 22, 2012 could have opted-in for a limited time offer of 25 GB of free storage upgrade }
Storage : 7 GB தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னும் 4 மின்னஞ்சலை உருவாக்கி தரவேற்றுங்கள்!!!
சரிதானா?
Monday, 20 May 2013
உங்களுக்குப் பிடித்த மென்பொருளை ( Software) எந்த கணினியிலும் பயன்படுத்தலாம்
11:46
ram
போர்ட்டபிள் சாப்ட்வேர் என்பது கணனியில் அந்த மென்பொருளை நிறுவாமல் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொண்ட மென்பொருளாகும். அதாவது சாதாரணமாக நமக்குத்தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பிறகு அதில் .exe கோப்பை இயக்கிய பிறகே அந்த மென்பொருள் நம்முடைய கணனியில் நிறுவப்பட்டு, பிறகுதான் அதை நாம் இயக்கிப் பயன்படுத்த முடியும்.
அவ்வாறில்லாமல் கணினியில் நிறுவாமல் ப்ளாஷ் டிரைவ் (Flash Drive) மூலம் நேரடியாக பயன்படுத்தும் மென்பொருள் போர்ட்டபிள் சாப்ட்வேர் ( Portable software)எனப்படும்.
அவற்றில் Operating system software முதல், photo editing software, browsers வரை அனைத்து மென்பொருள்களுமே போர்ட்டபிளாக உருவெடுத்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இத்தகைய போர்ட்டபிள் சாப்ட்வேர்களை உங்களுடைய பென்டிரைவில் ஒரு முறை தரவிறக்கம் செய்துகொண்டால் போதுமானது.(One time software install) நீங்கள் எந்த ஒரு கணனியிலும் போர்ட்டபிள் மென்பொருள்களை பயன்படுத்தலாம். (You can use portable software any computer)
ஒரு கணனி பயனருக்குத் தேவையான முக்கியமான மென்பொருள்கள் அனைத்தையுமே போர்ட்டபிள்.காம் தொகுத்து வழங்குகிறது.
இத்தொகுப்பினை உங்கள் பென்டிரைவில் ஒரு முறை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டால் போதுமானது.
Features of Portable apps software
நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள கணினிகளில் உங்களுடைய பென்டிரைவைப் பொருத்தி பயன்படுத்த தொடங்கிவிடலாம்.
கணினியில் உள்ள programe start menu வைப் போன்றே இந்த மென்பொருளிலும் (portablesoftware.com) மெனு ஒன்று தோன்றும். அதில் உள்ள மென்பொருள்களை இயக்கிப் பயன்படுத்தலாம். தேவையெனில் உங்களுக்கு வேண்டிய மென்பொருள்களை கூடுதலாக தரவிறக்கம் செய்தும் இந்த மெனுவில் இணைத்துப் பயன்படுத்தலாம்.
மிகச்சிறந்த பயனுள்ள இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த செல்ல வேண்டிய முகவரி:
"Twitter" - Facebook-யை விட எளிமையானது! பாதுகாப்பானது! அப்படியா......?
10:57
ram
ட்விட்டர் பயன்படுத்துவது பேஸ்புக் பயன்படுத்துவதைக் காட்டிலும் எளிதானது. அதே சமயம் ஒரே வினாடியில் உலகிலுள்ள அனைவருக்கும் செய்தியைத் தெரிவிக்க வேண்டுமென்றால் அது ட்விட்டரால் மட்டுமே முடியும்! வரும் காலங்களில் தொலைக்காட்சியைவிட அதிகமான மக்கள் செய்திகளைத் தெரிந்துகொள்ளும் இடமாக ட்விட்டர் மாற இருக்கிறது.
இங்கு செய்தியாளர்கள் ட்விட்டர் உபயோகிப்பாளர்கள்தான். புரியவில்லையா? உதாரணமாக நீங்கள் உங்கள் வீட்டில் நிலநடுக்கம் உணருகிறீர்கள்! அதை ட்விட்டரில் தெரிவிக்கும்போது, உங்களைப் பின்தொடருபவர்கள் ரீட்வீட்செய்யும்போது அவர்களைப்பின் தொடரும் நண்பர்களுக்கு நொடியில் செய்தி சென்று சேரும்! இப்படி ஒருசில வினாடிகளில் உங்கள் செய்தி உலகம் முழுவதும் தெரிந்துவிடும்.
ட்விட்டரை விளக்கும் வகையில் புதிதாய் ட்விட்டருக்கு வரும் அன்பர்களுக்கான பதிவு இது!
மிகமிக முக்கியமான விஷயம் – ட்விட்டர் மிகவும் பாதுகாப்பானது. பேஸ்புக்கில் உங்களைப்பற்றிய விவரங்களைத் தவறாக உபயோகிக்க வாய்ப்பு மிக அதிகம். புகைப்படம் போன்றவற்றை தவறான செயல்களுக்கு உபயோகப்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் ட்விட்டரில் நீங்கள் உங்களைப்பற்றிய விவரங்களை நீங்களாகவே வெளியிடாதவரை யாருக்கும் தெரியாது.
ட்விட்டர் எனப்படுவது 140 எழுத்துக்கள் மட்டுமே எழுத முடிந்த ஒரு குறுஞ்சேவை SMS போன்றது. புகைப்படம், வீடியோ போன்றவை EXTERNAL LINKஆக லோட் ஆகும்! அதாவது அந்த லிங்கையோ அல்லது செய்தியையோ கிளிக் செய்து புகைப்படத்தைக் காணலாம்! முதலில் http://twitter.com இணையதளத்திற்கு சென்று ஒரு free account திறக்கவும். நீங்கள் லாக்-இன் செய்தவுடனே இதுபோன்ற ஒரு முகப்புப்பக்கம் தெரியும்!
இதை நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறோம்
1. Home
Tweets :
செய்த ட்வீட்களின் எண்ணிக்கை
Following :
ஒரு நபரைத் தொடர, அதாவது அவர்கள் செய்யும் ட்வீட்களை படிக்க வேண்டுமென்றால் FOLLOW பட்டனை கிளிக் செய்யவும். (அந்த நபரின் PROFILE-லில்) பேஸ்புக் போல் பிரெண்ட் ரேகுவஸ்ட் அனுமதியெல்லாம் தேவையில்லை. நீங்கள் பின் தொடருபவர் உங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டிய அவசியமில்லை.
Followers :
உங்களைத் தொடருபவர்களின் எண்ணிக்கை! உங்கள் ட்வீட்டை படிப்பவர்களின் எண்ணிக்கை!
Who to follow :
ட்விட்டர் கொடுக்கும் SUGGETION LIST
Trends :
உலகளவில் அல்லது குறிப்பிட்ட இடங்களில் மக்கள் எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ட்விட்டர் கொடுக்கும் பத்து சொற்கள்
Compose new Tweet :
140எழுத்துக்களுடன் நீங்கள் ட்வீட் செய்யும் இடம்! உங்களது செய்தி, எண்ணம், லிங்க் என எதை வேண்டுமானாலும் இங்கு தரலாம்! தரப்படும் செய்தி நொடிகளில் உங்களைத் தொடரும் நண்பர்களுக்குச் சென்று சேரும்!
Reply :
உங்களது TL(TWITTER LINE)இல் வரும் ஏதாவது செய்திக்கு பட்டனை கிளிக் செய்யவும். உடனே @USERNAME என செய்தி எழுத ட்விட்டர் தயாராகிவிடும். (@USERNAME எனும்போது எந்த நபர என்று ட்விட்டர் கண்டறிந்து அவரிடம் இந்த செய்தியை கொண்டு சேர்த்துவிடும்)
Retweet :
இதை இரண்டுவகையில் செய்யலாம்.
1. ட்வீட்டின் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்வது. இதன்மூலம் அந்த ட்வீட் உங்களைப் பின் தொடருபவர்களுக்கு ட்வீட்டின் உரிமையாளர் பெயரிலேயே அவர் புகைப்படத்துடன் சென்று சேரும்! இதற்கு கொடுக்கப்படும் Reply உங்களுக்கு வராது!
2. அந்த ட்வீட்டை காப்பி செய்து RT@USERNAME + COPIED ORIGINAL TWEET என போஸ்ட் செய்யலாம். இந்த ட்வீட் உங்கள் பெயரில் ட்வீட் ஆகும். இப்பொழுது யாராவது இதற்கு REPLY கொடுத்தால் நீங்கள் மற்றும் அந்த ட்வீட்டின் சொந்தக்காரர் என இருவருக்குமே செய்தி சென்று சேரும்!
Favorite :
இது ஒரு BOOKMARK வசதி போன்றது – உங்களுக்கு மிகவும்பிடித்த ட்வீட்களை Favorite செய்து வேண்டியபோது படித்துக்கொள்ளலாம்!
@mention :
யாருக்கேனும் REPLY கொடுக்கும்போதோ, யாரேனும் ஒருவருடன் உரையாட வேண்டுமென்றால் ட்வீட் செய்யும்போது @USERNAME கொடுக்க வேண்டும். இது அவர்களின் @Connect பாக்ஸில் தெரியும். (உதாரணம் @nilapennukku என்று ட்வீட்டினால் உங்களது செய்தி என் @Connect பாக்ஸில் வரும்! @nilapennukku என்பது http://twitter.com/#!/nilapennukku என்பதன் சுருக்கம் அவ்வளவுதேன்)
View conversation :
இப்படி @username கொடுத்து மாறிமாறி ட்வீட்டும்போது கடைசியாய் எழுதிய செய்தியே TLல் தெரியும். அதன் முழு உரையாடல்களையும் காண View conversation பட்டனை ( or Tweet) கிளிக் செய்யவும்! திரும்பவும் கிளிக் செய்தால் உரையாடல் மூடிக்கொள்ளும்!
2. @Connect
@username - இல் உங்கள் பெயர் கொடுத்து உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ட்வீட்கள்!. அவர்களுக்கு பதில் அனுப்ப Reply பட்டனை கிளிக் செய்யவும்
3. #Discover
ட்வீட்களில் தேட! ஏதேனும் வார்த்தையை # கொண்டு தேடலாம்! நீங்கள் ட்வீட் செய்யும்போது ஏதேனும் வார்த்தைக்கு முன் # சேர்க்கவும்! யாரேனும் அந்த வார்த்தையைத் தேடும்போது உங்கள் ட்வீட் வரும்! (#IPL என நீங்கள் ட்வீட் செய்தால் IPL என தேடும்போது உங்களது பதுவும் அதில் பட்டியலிடப்படும்)
4. Profile
Direct Message :
தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு செய்தி அனுப்ப/பெற (கடலை போட)
Lists :
உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கேன்றே ஒரு லிஸ்ட் அமைத்து அவர்களின் போஸ்டை மட்டும் பார்க்கலாம்! (ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் நீங்கள் FOLLOWING தொடர்ந்தால் எக்கச்சக்க ட்வீட்கள் உங்கள் TL-ல் தோன்றும், அதற்கு இதுவே மாற்றுவழி)
Settings :
உங்கள் புகைப்படம், பெயர் (பெயரை மாற்றிக்கொள்ளலாம் USERNAME மாற்ற இயலாது) டிசைன், பாஸ்வோர்ட் என எல்லாவற்றின் அமைப்புகளை மாற்றும் இடம்!
Unfollow :
தேவையில்லாதவர்களை Unfollow செய்துவிட்டால்(Go to –> Profile -> Unfollow)அவர்களது ட்வீட் உங்களுக்கு வராது! ஆனால் உங்களை அவர் Follow செய்துகொண்டிருந்தால் உங்கள் ட்வீட் அவருக்குப்போகும்!
Block user:
ஒருவர் உங்களுக்கு விரும்பத்தகாத வகையில் நடந்து கொள்கிறார் எனில் அவரின் Profile சென்று சிறிய வலதுபுறமுள்ள சிறிய லோகோவை கிளிக் செய்து Block User தேர்ந்தெடுக்கவும்! இதனால் உங்கள் ட்வீட் அவரால் படிக்க முடியாது, உங்களுக்கு செய்தியும் அவரால் அனுப்ப முடியாது!
Verified Profile:
பிரபலங்களுக்கு ட்விட்டர் சரிபார்த்துக்கொடுக்கும் லோகோ! (Tick Mark)
Protected Account:
அமைப்பில் இந்த மாற்றம் கொண்டுவருவதன் மூலம் நீங்கள் அனுமத்தித்த நபர்களே உங்கள் ட்வீட்டை பார்க்க முடியும், Retweet செய்ய முடியும்! பொது மக்களாகிய நமக்கு இது தேவையில்லாதது! (Settings -> Account -> Tweet Privacy -> Protect my tweets)
சில சந்தேகங்களும் தீர்வுகளும்!
1. நீங்கள் பின் தொடராத ஒருவரின் ட்வீட் TL-ல் வருகிறதா?
நீங்கள் பின் தொடரும் யாரேனும் அதை RETWEET செய்திருக்கலாம்! அந்த ட்வீட்க்கு கீழே பார்க்கவும், யாரால் செய்யப்பட்டது என்ற செய்தி இருக்கும்!
2. நண்பர்களுக்கு @MENTION செய்து பிறர் பேசுவது எனக்கு ஏன் வருகிறது?
நீங்கள் பின் தொடருபவர் என்ன செய்தாலும் (TWEET, RETWEET, @MENTION) அது உங்கள் TL-ல் வரும்
3. ட்விட்டரில் அடிக்கடி சண்டைகள் வருகிறதே?
ட்விட்டரில் வரும் சண்டைகள், விவாதங்கள், கடலை போடுதல் என எல்லாமே எப்போதுமே சுவாரசியத்தைக் கொடுப்பவை. இங்கு உங்கள் கருத்துகளுக்கே முக்கியத்துவம் – நபர்களுக்கு அல்ல!
இருவருக்கிடையிலான சண்டை என்றால் நீங்கள் தலையிடக்கூடாது. பொதுவான சண்டை அல்லது விவாதமெனில் நீங்களும் கலந்துகொள்ளலாம், @mention கொடுத்து பிறரையும் கோர்த்துவிடலாம்! இங்கு விவாதங்கள் சிறப்படையக்காரணம் நொடிப்பொழுதுகளில் 1000க்கும் மேற்பட்டவர்களின் கருத்துக்கள் இடம்பெறுவதால்தான்!