.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 30 May 2013

ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !!!




Facebook Share Image - 12









       ஆயிரம் வருடங்களுக்கு முன்னே இப்படித்தானே கட்டி இருப்பார்கள் இதை !



     எத்தனை யானைகள் களத்தில் வேலை செய்திருக்கும் ! 



   இந்த யானைகளை எத்தனை வருடம் பழக்கி இருப்பார்கள் ! 



       எத்தனை மனிதர்கள் வேலை செய்திருப்பார்கள் ! 



       எத்தனை சிற்பிகள் இவற்றை செதுக்கி இருப்பார்கள் !



     மலைகளே இல்லாத தஞ்சையில், இவ்வளவு டன் பாறைகளை எப்படி கொண்டு    வந்திருப்பார்கள் ! 



            இவர்களை யார் கண்காணித்திருப்பார்கள் ! 



    நினைக்கும் போதே தலை சுற்றுகிறதே ! 



ராஜ ராஜா உனக்கே வெளிச்சம் !

உலக பிரபலங்களின் கையெழுத்து!!!




Facebook Share Image - 11







Wednesday, 29 May 2013

அணு மூலக்கூறு உள்பகுதியை முதன் முறையாக போட்டோ எடுத்த விஞ்ஞானிகள்!








                              முதன் முறையாக அணு மூலக்கூறு உட்பகுதியை படமெடுத்து நெதர்லாந்து நாட்டில் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள்ர் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.!.





                   இந்த உலகிலுள்ள அத்தனை பொருட்களும் அணுக்களால் ஆனவை.இந்த அணுக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது என்று முதலில் கருதப்பட்டது ஆனால் பிறகு அணுவைப் பிரிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. 





                      அப்படி பிரிக்கப்பட்ட அணுவில் எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் எர்னெஸ்ட் ருதர்போர்ட் என்பவரே இது போன்று அணுவை வெற்றிகரமாக பிரித்ததால் அணுப் பெளதிகவியலின் தந்தை என்று கருதப்படுகின்றார்.அத்துடன் இவரை இரண்டாம் நியூட்டன் எனறும் அழைக்கிறார்கள்.











                        இந்நிலையில் பிரிக்கப்பட்ட அணு மூலக்கூறின் உள் பகுதியின்  வடிவமைப்பை யாராலும், எந்த சூழ்நிலையிலும் இதுவரை போட்டோ எடுக்க முடியவில்லை. ஏனெனில் அணு சோதனையின்போது அவற்றின் துகள்கள் உடனடியாக அழிந்துவிடும்.






                       ஆனால், சமீபத்தில் நடந்த சோதனையின்போது நெதர்லாந்து விஞ்ஞானிகள் லேசர் கருவிகள் மற்றும் மைக்ராஸ்கோப் உதவியுடன் ஹைட்ரஜன் துகள்களை பார்த்தனர். இதற்கு முன்பு இதுபோன்ற துகள்களை பார்த்ததில்லை.











                       எனவே, அவற்றின் உள் அமைப்பை உடனடியாக போட்டோ எடுத்தனர். இதற்காக அவர்கள் 20 ஆயிரம் மடங்கு பெரிதாக காட்டும் விசேஷ லென்சையும், மிகப் பெரிதாக காட்டும் மைக்ராஸ்கோப்பையும் பயன்படுத்தினார்கள்.




                      தற்போது அணு மூலக்கூறின் உள் அமைப்பை போட்டோ எடுத்ததன் மூலம் எலெக்ட்ரானிக்சின் புதிய அமைப்பை கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.




Amazing! First ever photograph inside a hydrogen atom:-
 


               Scientists have captured the first ever photo of an electron’s whizzing orbit within a hydrogen atom, thanks to a unique new microscopy technique.


இந்திய மாணவி வெண்கலப் பதக்கம்-உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி!!!









                             உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஹால்கிடிகி நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மும்பை மாணவி அனன்யா குப்தாவும் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.









                        அண்மையில் நடந்த 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அவர் 7–ல் வெற்றி பெற்று 3–வது இடத்தை பிடித்ததுடன், வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். 





                       இதில் கடைசி ரவுண்டில் தன்னை விட தரவரிசையில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பிரான்சின் யுயான் பெலினுடன் மோதிய அனன்யா, அந்த ஆட்டத்தில் ‘டிரா’ செய்வதற்கான சந்தர்ப்பம் வந்த போதிலும் அதை ஏற்க மறுத்து, தைரியமாக தொடர்ந்து விளையாடி எதிராளியை சாய்த்தார். அவர் மொத்தம் 7 புள்ளிகள் பெற்றார்.








                       இந்த பிரிவில் கஜகஸ்தானின் அஸ்சா பயேவா (8.5 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் டையாஜெங் தெரேசா சிங்கி (8 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.





                 9 வயதான அனன்யா, மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். இந்த போட்டிக்காக தினமும் 7 மணி நேரம் தனது பயிற்சியாளர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட அவர், அடுத்து தேசிய போட்டிகளுக்காக தயாராகி வருகிறார்.  முன்னதாக அவர் சிங்கப்பூர் செஸ் தொடரில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

BE., படிப்பு ஆன்லைனில் வழங்குகிறது - அண்ணா பல்கலைகழகம்!









                         இப்போதெல்லாம் பட்டபடிப்புகள் ஆன்லைனில் வந்தாகிவிட்டது. எந்த டிகிரி வேண்டுமானாலும் ஆன்லைனில் கற்கலாம். 




                        என்றாலும் மருத்துவ மற்றும் பொறியாளர் படிப்பு மட்டும் இந்த ஆன்லைனில் குதிரை கொம்பாக இருந்த கல்வியாகவே இருந்தது. 




                      இந்நிலையில் இப்போது இன்ஜியரிங் கல்வியையும் ஆன்லைனில் படிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.! 








                   அதுவும் பிளஸ் 2 முடித்த எவரும் இப்போது கூட ஆன் லைனில் இந்த பட்ட படிப்பை தொடரலாம். இது ஒரு ஹேப்பி நியூஸ் தானே





BE Engineering Degrees NOW available ONLINE through Anna University:-



                     There’s good news for working professionals and those who missed out on an opportunity to do engineering. Anna University plans to offer open learning, allowing working professionals or those who have passed their higher secondary (class 12) to do an engineering course online and get a degree.


 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top