.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 20 August 2013

இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி?



இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி?

நம்மில் பலர் இணையதளங்களில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே  பயன்படுத்துக்கின்றோம். ஆனால் சிலர் இந்த நேரத்திலும் பயன்(பணம்) ஈட்டும் தருணங்களாகவும் மாற்றிவருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் சுலபமான GKக்கு பதிலளித்து இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  இவற்றில் உங்கள் மொபைல் என்னுடன் சில சுயக்குறிப்புகளை பூர்த்தி செய்து Register செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் நெட்வொர்க்கிற்கு மட்டும். மேலும்,

KUIZR :

இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.




அதற்கான லிங்க்:
http://www.kuizr.com/

YPOX :
இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.



அதற்கான லிங்க்:
http://i.ypox.com/

LAAPTU :
இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.




அதற்கான லிங்க்:
http://g.laaptu.com/

மேற்கண்ட இணையதளங்கள் இலவச SMS அனுப்பும் வசதியையும் அளிக்கின்றன. அதற்கும் பைசாக்களில் பணம் அளிக்கின்றன. இவற்றில் பதிந்து குவிஸ் விளையாடுவதன் மூலம் பொது அறிவு (GK) வளர்வதுடன் குறைந்தது 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த மதிப்பு ரூ. 10 முதல் (Minimum denomination as per your mobile network)  ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை (ரூ. 40 வரை அதற்க்கு மேலும் எண்ணிலடங்கா)
ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். மூன்று வெப்சைட் -ம் சேர்த்து குறைந்தது ரூ. 100 முதல்  இலவச மாத மொபைல் ரீசார்ஜ் செய்து செலவினை மிச்சப்படுத்தலாம். பொது அறிவினையும் வளர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: மேற்கண்ட அனைத்தும் இணையத்தில் நேரத்தை பயனுள்ளவழியில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. அதிக நேரம் இணையத்தில் நேரத்தை செலவழிப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்கவும். அல்லது எதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும்.
 
 

எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?



எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ வேண்டும் உங்களுக்கு?

 

எல்லா  நாட்டிற்கும் தகுந்தாற்போல் பாஸ்போர்ட் அளவு போட்டோக்களை நாம் கொடுக்கும் போட்டோவிலிருந்து தரும் இணையதள முகவரி: http://www.makepassportphoto.com/




 
மேற்காணும் படத்தில் உள்ளவாறு உங்கள் போட்டோவினையும் அதற்கேற்ற தெரிவுகளையும் தேர்வு செய்து சில நிமிடங்களில் எந்த நாட்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவினையும் நீங்கள் பெறலாம். 


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்!





மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 

 
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!


ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!
 

ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்!



ரக்க்ஷா பந்தன் எனும் சகோதர திருநாள்:

  

 
 
ரக்ஷாபந்தன் எனும் சகோதர திருநாள் நம் இந்திய திருநாட்டில் கொண்டாடி வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. அதன் அடிப்படையான வரலாற்று செய்தியை நாம் இங்கு காண்போம். நம்  வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.

தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.

கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.
 

உத்தரகாண்டில் 11 கிராமங்களை தத்தெடுத்த எல்லைப் பாதுகாப்பு படை!



உத்தரகாண்டில் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 11 கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுத்தது.


உத்தரகாண்ட் மாநிலம் காளி நதிக் கரையில் அமைந்துள்ள காளிமத், கவில்தா, கோட்மா, சியான்சு, சிலோண்ட், குல்ஜெத்தி, கென்னி, ஜல்டலா, செüமசி, புயுன்கி உள்பட 11 கிராமங்கள் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டன. இக்கிராமங்களை எல்லைப் பாதுகாப்பு படை தத்தெடுக்க முடிவு செய்துள்ளது.அங்கு சாலைகள்,பாலங்கள் அமைப்பது மட்டுமின்றி கிராம மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படை முன்வந்துள்ளது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவார்கள்.சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்த பிறகே அவர்கள் அக்கிராமங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சிறப்பு பொறியியல் நிபுணர்கள் குழு ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் உடைந்த அணைகள்,சாலைகளை சீரமைத்து போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர்.மழையால் சேதமடைந்துள்ள காளிமத் கோவிலை புதுப்பிக்கும் பணியிலும் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுவர்.ஏற்கனவே துணை ராணுவ படையானது தங்களது ஒரு நாள் சம்பளமான ரூ.16 கோடியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண நிதியாக வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

. BSF adopts 11 villages in Uttarakhand 

**************************************************

 Delhi: BSF has adopted 11 villages in Uttarakhand and has deployed a contingent of its personnel to provide succour for the locals of the rain ravaged state. The border guarding force has not only created a number of communication infrastructure like bridges and roads, it has also improvised and started a number of civic facilities in flood hit villages of the Kalimath valley.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top