
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைத்திருந்த போலீசார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர். விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம்...