..........................................................................
.......................................................................
......................................................................
skip to main |
skip to sidebar
12:30
ram
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் 24 மருந்துப் பொருள்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம் தடைவிதித்துள்ளது.இதில் பல்வேறு நிறுவனங்கள் தயாரித்த 15 மருந்துகளும் தரமற்ற ஊசிகள், சிரிஞ்சுகள், உள்ளிட்ட 9 மருத்துவப் பொருள்களும் அடங்கும். கடந்த எட்டு மாதங்களில் நடத்திய பரிசோதனையில் இந்த பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகம்தான் கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இதற்கென்று ஒவ்வொரு ஆண்டும் அரசு 210 கோடியை ஒதுக்குகிறது.
மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு டென்டர்கள் விடப்பட்டு, அதில் குறைந்த தொகையை நிர்ணயிக்கும் நிறுவனத்தின் மருந்துகள் வாங்கப்படும். கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் அந்தந்த கிடங்குகளில் வைத்து பரிசோதனை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு தேதியில் தயாரான மருந்துகள் அனைத்தும் சுமார் 5 அல்லது 6 முறை பரிசோதனை செய்யப்படும். மருத்துவ சேவைக்கழகம் நிர்ணயித்துள்ள கோட்பாடுகளின் கீழ் வராத மருந்துகள் தரமற்ற மருந்துகளாக கருதப்பட்டு, கழகத்தின் மறுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.இதுகுறித்து மருத்துவ கழகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர்,”இருமல் மருந்து, காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மாத்திரை, நெஞ்செரிச்சலுக்கான மருந்துகள் உள்ளிட்ட 15 மருந்துகளை தடை செய்துள்ளோம்.மருந்துகள் பயன்படுத்தப்படும் அரசு மருத்துவமனையோ, அந்த மருந்துகளை அரசு மருத்துவமனைகளில் பரிந்துரைக்கும் மருத்துவரோ மருந்துகள் குறித்து புகார் தெரிவித்தால் அதன் அடிப்படையிலும் பரிசோதனை நடத்தப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் தடைசெய்யப்படும். மேலும் கையிருப்பில் உள்ள அந்த நிறுவனத்தின் மருந்துகள் உடனடியாக திருப்பி அனுப்பப்படும்.சுகாதாரத் துறையை பொருத்தவரை தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதால், தமிழக மருத்துவ சேவைக்கழகம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகளை தடை செய்துவிட்டால் மற்ற மாநிலங்களும் அதன் கொள்முதலை நிறுத்திக் கொள்ளும்.தடை செய்யப்பட்ட மருந்துகள், அதனை தயாரிக்கும் நிறுவனத்தின் விவரங்கள, எந்த தேதியிலிருந்து எந்த தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் தமிழக மருத்துவ சேவைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்றார் அவர்.
12:03
ram
முதல்ல நெடு நாளைக்கு பிறகு மனது மிகவும் கனத்துடன் இந்த விமர்சனத்தை உள்ளது உள்ளபடி எழுதுகிறேன். என் இனத்தை பெருமைபடுத்தும் படமா அல்லது இந்தியர்களை சிறுமைபடுத்தும் படமா என்று எனக்கே தெரியாத ஒரு கேள்வி என்னுள் இந்த படத்தை பார்த்ததிலிருந்து எழுந்தது. இத்தனைக்கும் இந்த படத்தை பற்றி ஒரு மாதம் முன்பே கூறியிருந்தேன் இதை ஒரு தமிழ் படமாய் அல்லது தமிழர் எடுத்திருந்தால் அவர் பாதி ஆயுள் சென்சார் / ரிவைஸிங் கமிட்டியில் முடிந்து போயிருக்கும் என்று ஏன் என்றால் இயக்குனர் செல்வமணி இதே கதை களத்தை வேறு விதமாக எடுத்து அவர் பட்ட பல ஆண்டு துயரம் சொல்லி மாளாது.படத்தின் முதன் முதலில் ஒரு ஸ்லைடு – அதில் 1980 முதல் இலங்கையின் இனக்கலவரத்தில் தமிழர்கள் கொல்லபடுகின்றனர் என்று.
ஜான் ஆபிரகம் – கற்றது தமிழ் ஹீரோ மாதிரி தாடி மீசையுடன் ஒரு அதிகாலை கெட்ட கனவில் கண் முன்னே கொத்து கொத்தாய் தமிழர்கள் சாவதை கண்டு அதிர்ந்து எழுகிறார். பின்பு நேரே ஒரு மதுக்கடையில் போய் ஒரு குவார்ட்டரை வாங்கி சிப்பிகொண்டே சர்ச்சுக்குள் நுழைந்து கண்கலங்கும் போது அந்த் சர்ர்சின் ஃபாதர் உங்களை இரண்டு மூன்று வருடங்களாய் பார்க்கிறேன் ஆனால் ஏன் இந்த கோலத்தில் இருக்கிறீர்கள் என்று கேட்க ஒரு சதியில் நானும் ஒரு அங்கத்தினர் ஆகி இன்னும் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன் என்று கூறும்போது அப்படியே பச்சை பசேல் ஜாஃப்னா தமிழ் நகரம், ஒரு பேருந்தில் அனேக தமிழர்களுடன் பஸ் பயணிக்கிறது. திடீரென்று இரண்டு வேன்களில் ஆயுதம் தாங்கியவர்கள் இறங்கி தமிழர்களை சுட்டு கொல்கின்றனர். சிங்களம் ராணுவம் தான் இதை செய்தது என நீங்களும் நானும் என்னும் போது இது பதவி சுகத்துக்காக இன்னொரு தமிழ் கூட்ட தலைவர் செய்வதாய் படம் காட்ட உடனே இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என எண்ணி இந்திய பிரதமர் அமைதி படை என்று இந்திய படையை இலங்கையில் தமிழ் ஏரியாவுக்கு அனுப்புகின்றனர். அப்போது அவர்களுக்கும் எ. டி எஃப் என்னும் புலிகளின் படையோடு மோதல் வருகிறது. இதில் இரு தரப்புக்கும் நிறைய இழப்பு வர இந்தியாவின் பிரதமரின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று இந்தியாவின் எதிர்கட்சிகள் கூற அந்த புலிகளின் படையின் பலத்தை லன்டனில் இருந்து பத்திரிக்கையாளராய் வந்த பெண் முதல், ரா என்னும் இந்திய உளவு அமைப்பு வரை சொல்லி மிரட்ட, புலிகளை நேர் கொண்டு வெல்ல இந்திய படை கூட முடியாது அதனால் இதை ஒரு அன்டர் கவர் ஆப்பரேஷன் செய்து புலிகளையும் புலிகளின் தலைவன் அன்னா பிரபாகரனையும் மடக்க எண்ணி ஜான் ஆப்ரகாம் ஜாஃப்னாவுக்கு ஒரு பத்திரிக்கையாளரால வர, இந்திய உளவுப்படை கே பாலகிருஷ்னனை சென்னையில் இருந்து ஜாஃப்னாவுக்கு கமான்டர் இன் சீஃபாக இந்த ஆப்பரேஷன் நடக்கிறது. ஜான் ஆப்ரகாம் முதல் காட்சியில் தமிழர்களை கொன்ற இன்னொரு தமிழ்ப்படையான அந்த தலைவனிடம் எப்படியாவது புலிகளை அழிக்க நீங்கள் தான் உதவ வேன்டும் என கேட்க அவரும் வரும் தேர்தலில் ஜாஃப்னாவில் தான் ஒரு பெரிய தலைவராய் ஆக வேண்டும் என எண்ணி எனக்கு இந்தியா ஆயுத உதவி தந்தால் புலிகளையும் புலிகளின் தலைவனையும் அழிக்க உதவுகிறேன் என் கூற அதற்க்கு ஜான் ஆப்ரகாம் இந்தியாவின் உதவியோடு வெளி நாட்டில் இருந்து ஆயுதங்கள் வர, ஆனால் அந்த ஆயுதங்கள் நேரே புலிகளுக்கு கிடைக்குமாறு டபுள் கிராஸ் செய்து இந்திய ராணுவம் / இந்திய உளவுப்படையின் ஒவ்வொரு திட்டத்தையும் முடக்கும் புலிகளின் சாமர்த்தியம் என காட்ட, ஜான் ஆப்ரகாமுக்கு தன் கூடவே இருந்து புலிகளுக்கு தகவல் தருவது பாலகிருஷனன் தான் என கன்டறிய அதற்க்குள் பாலகிருஷ்ன்னன் ஜான் ஆப்ரகாமாய் கடத்தி ஒரு இடத்தில் வைக்க, ஜான் ஆப்ரகாமின் அன்டர் கவர் எக்ஸ்போஸ் ஆகிறது.இந்த சதியை உணராத இந்திய உளவுப்படை அதே பாலகிருஷனனுக்கு எப்படியாவது ஜான் ஆப்ரகாமை விடுவிக்க வேண்டும் என கேட்க அவரை விடுவித்து கொலம்போவின் சேஃப் ஹவுஸில் வைக்கின்றனர். இதன் நடுவே புலிகளை ஒழிக்க முடியாமல் / இந்தியாவின் அமைதி படை இலங்கையை விட்டு வெளியேறுகிறது கூடவே இந்திய பிரதமரும் பதவி விலகுகிறார். புலிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் வெளி நாட்டினர் பதிலுக்கு தக்க சமயத்தில் நீங்களும் எங்களுக்கு உதவ வேண்டும் என முன்பே கேட்டு வைக்க அதற்க்கு புலிகள் சம்மதித்து பதவியை துறந்த பிரதமர் திரும்பவும் ஆட்சியில் உட்கார போவதாய் சர்வே தெரிவிக்க எங்கே இந்தியா முன்னேறிவிடுமோ என்று வெளி நாட்டு இந்திய எதிர்ப்பாளர்கள் ஆயுதம் சப்ளை செய்தவர்கள் லண்டனில் உள்ள மதராஸ் கஃபேயில் கூடி இந்தியாவின் முன்னாள் பிரதமரை எப்படி புலிகளின் மூலம் ஸ்ரீ பெரும்பதூரில் குண்டு வைத்து கொல்கின்ற்ன்ர் என்பது தான் பிற்பாதி கதை. படம் இரு இனத்தின் போராட்டத்தை கூடவே கொஞ்சம் மசாலா தடவி இலங்கை தாய்லாந்து சிங்கப்பூர் என ஒரு சுற்று சினிமாத்தாக சுற்றீ கடைசியில் உளவுப்படைக்கும் இந்தியாவின் அத்தனை ஏஜன்ஸிக்கும் இன்று இரவு பத்து மணிக்கு முன்னாள் பிரதமரை குண்டு வைத்து தகர்க்க போகும் தற்கொலைப்படை யார் என்று தெரிந்திருந்து அதை தடுக்க முடியாமல் போன மாதிரி காட்டியிருப்பது நிறைய சினிமாத்தனம். தமிழன் ஒரு ஆள்காட்டி பரம்பரை / இந்தியா இதில் பலிகடா என்பது போல் காட்டி புலிகளின் தலைவன் மற்றும் புலிகளின் வீரத்தை சூப்பராய் சித்த்ரித்திருந்தாலும் கடைசியில் சொன்ன விதம் ஒரு இனத்தை கேவலமாய் காட்டியிருப்பது போல் உள்ளது. ஒன்று உண்மைச்சம்பவம் என கூறியிருக்கலாம் அல்லது இது கற்பனை கதை யாரையும் குறிப்பிடும் விதத்தில் இல்லை என கூறியிருக்கலாம் இப்படி இரண்டும் இல்லாமல் கொஞ்சம் கதைக்கரு கொஞ்சம் மசாலா கொஞ்சம் சொந்த திரைக்கதை என படம் பப்படமாய் நொறுங்கியது ஆச்சர்யபடுத்தவில்லை.ஏற்கனவே கூறியிருந்தேன் இந்த படம் வெளியானால் பலரின் துரோகங்களை உரித்து காட்டும் என அது தமிழர்களின் உணர்ச்சியை கொச்சைபடுத்தும் இந்த படத்தை எடுத்த ஒரிஜினல் தயாரிப்பாளர்கள் (ரைஸிங் சன் பிக்ச்சர்ஸ் – Rising Sun Pictures) யார் எனக்கேட்க வேண்டாம் உங்களின் அனுமாத்திற்க்கே விட்டு விடுகிறேன். படத்தை பார்த்தால் மனது வலிக்கிறது ஆனால் யாருக்காக என்பதில் உண்மையை கூற மனம் மறுக்கிறது என்ற உண்மையோடு…..ஒரு வரி விமர்சனம் – மதராஸ் கஃபே – சேக்ஷ்பியர் எழுதிய திருக்குறள்.
11:55
ram
மலைகளில் இருந்து உருவாகி பாய்ந்தோடி வரும் நீரைச் சேமிக்க, வாய்க்கால்கள் மூலம் ஆற்றுப் பாசனப் பகுதியில்லாத இடங்களில் குளங்களாகவும், ஏரிகளாகவும் இயற்கையான நீர் சேமிப்புத் தொட்டிகளை உருவாக்கிவைத்தனர் நம்முடைய முன்னோர்கள்.இவற்றின் நீர்ப்போக்கைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. வாய்க்கால்கள் மூலம் ஒரு குளம் நிரம்பி, அடுத்த குளத்துக்கும் நீர் செல்ல பாதை வைத்திருக்கிறார்கள்.இதேபோலத்தான் கோவில்களுக்குள் இருக்கும் குளங்களும். எல்லாக் குளங்களுக்கும் நீர்வழிப்பாதை உண்டு. இப்போது அவையெல்லாம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்த தகவல்.குளங்கள், ஏரிகள் இல்லாவிட்டால்தான் என்ன என்ற மனப்பான்மை மக்கள் மத்தியில் வளர்த்துவிடப்பட்டிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏராளமான கோடிகளைக் கொட்டி ஆற்றுப் படுகைகளில் இருந்து தொடங்கப்பட்ட குடிநீர்த் திட்டங்கள், இந்த மனப்பான்மையை நீரூற்றி(!) வளர்த்து விட்டிருக்கலாம்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு குழாய்களில் தண்ணீர் வரும்போது, அருகே ஏன் குளம், ஏரி என்று கேள்வி எழுப்புகிறார்கள் பலர். இதனால், நீர்வழிப் பாதைகளை அடைத்துவிட்டு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளை எழுப்பி, வாய்ப்புள்ள குளங்களில் கூடாரம் எழுப்பி, கிணறு வெட்டி, டிராக்டர் விட்டு உழுது விவசாயம் பார்க்கும் “பெரிய’ மனிதர்களும் இருக்கிறார்கள்.இன்னும் பல இடங்களில், அரசு சொத்தான குளம், ஏரிகளை பட்டா போட்டு விற்று கைமாற்றிவிட்ட சோகங்களும் இருக்கின்றன. சில இடங்களில் அரசே குளங்களை மூடிவிட்டு கட்டடங்களை எழுப்பிவிட்டது, ஏழைகளுக்கென இலவச மனைகளாகவும் வழங்கியிருக்கிறது.தண்ணீர் எங்கே வருகிறது என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். படிப்படியாக நீர்வரத்தை மூடிவிட்டு வீடு கட்டினால் தண்ணீர் வரத்து இருக்காதுதான்.பெருமழை பொழியும்போது பெருவெள்ளமாகப் பிரவாகம் எடுத்த தண்ணீர் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு செல்லும்போது, “வெள்ளம் வந்துவிட்டது’ என்கிறார்கள். காரணம் என்னவென்று பார்க்கத் தவறுகிறார்கள்.வெறுமனே பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும், வீட்டு உபயோகங்களுக்கும், குடிக்கவும் மட்டுமே தண்ணீர் தேவை என்பதல்ல, இந்தப் பூமிக்கும் தண்ணீர் தேவை இருக்கிறது. பூமியும்கூட இயங்கும் உயிரினம்தான். எந்தச் சந்தேகமும் தேவையில்லை.நிலத்தடியில் தண்ணீர் இருக்க வேண்டும். நிலத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சதவீதம் நல்ல தண்ணீர் கடலுக்குள் சென்று கடலின் உப்புநிலையைச் சமப்படுத்தவும் வேண்டும்.எனவே, “கடலுக்குள் வீணாகக் கலந்தது’ என்ற வாதமும்கூட சரியானதல்ல.அதேநேரத்தில், தேவைக்கு பயன்படுத்தாமல் தவறிவிட்டோம் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியாது.அண்மையில் கர்நாடகத்தில் பெய்த மழையால் காவிரியில் “தானாக’ வந்த தண்ணீர், காவிரி- கொள்ளிடத்தில் கரை ததும்பிச் சென்றும்கூட, அருகேயுள்ள சிறு வாய்க்கால்களும், குளங்களும் வழக்கம்போல மண்மேடாகக் காட்சி தந்ததையும் காண முடிந்தது.ரத்த நாளங்களை வெட்டிவிட்டு உடல் உறுப்பு செயல்படவில்லையென குறை சொல்ல முன்வந்திருக்கிறோமே. என்ன மருந்து சாப்பிட்டாலும், நவீன சிகிச்சை எடுத்தாலும், ரத்தம் செல்லாவிட்டால் உயிர் இருக்குமே தவிர, உடல் சடலம்தானே?எனவே, ரத்த நாளங்களைப் போன்ற வாய்க்கால்கள், குளங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இப்போது அந்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இதை முழுமையாக – முறையாக வழிநடத்திச் செல்ல வேண்டியிருக்கிறது.அதோடு, அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த நீர்வழிப் போக்குகள் குறித்து பட்டியல் எடுத்து, குறைந்தபட்சம் தற்போது எந்தச் சிக்கலும் (ஆக்கிரமிப்பு) இல்லாமல் இருக்கும் பாதைகளையாவது முதல் கட்டமாக கைவைத்து சீரமைத்து ஒழுங்கு செய்ய வேண்டும்.எதிர்காலத்தில் எந்த வகையிலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருக்கவும், அரசேகூட ஆக்கிரமிக்க வழியில்லாமல் செய்யவும் தீர்க்கமான தொலைநோக்குப் பார்வை கொண்ட சட்டத் திருத்தங்கள் அவசியம்.அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினால், எந்த மாநிலத்தாரிடமும்- எந்தக் காலத்திலும் தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் நிலை வராது.”யாரோ செய்கிறார்கள், நல்லவர்கள்’ என்ற ஒற்றை வரி வியாக்யானத்தோடு நிறுத்திக் கொண்டு, கடந்து செல்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் தன்னார்வ குழுவினரின் முயற்சிகளுக்கு கைகொடுத்து அவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.இயற்கை ஆர்வலர்கள் நீர்வழிப் பாதைகளைச் சீரமைக்க வேண்டிய அவசியம் குறித்து இன்னும் கூடுதலாக ஆய்வு செய்து, எளிமையாக தகவல் கையேடுகளை – பாடத் திட்டங்களை – வகுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். “சிரம்’ கொடுத்துத்தான் தியாகம் செய்ய வேண்டுமென்பதில்லை, “கரம்’ கொடுத்தும் செய்யலாம்.
11:34
ram
நீபேசாத வார்த்தைக்கு நீ எஜமான் நீ பேசிய வார்த்தை உனக்கு எஜமான் என்ற சொலவடை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நம்மை ஆட்டிவைக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், அரசு நிர்வாகத்தில் அவர்களுக்குத் துணைபோகின்ற அதிகாரவர்க்கத்தினருக்கும் நிச்சயம் பொருந்தும்.அதுவும் தொலைக்காட்சி ஒளிபரப்பு என்பது நமது நாட்டின் நாடி நரம்புகளில் எல்லாம் புகுந்து புறப்பட ஆரம்பித்துவிட்ட இந்த மின்னணு யுகத்தில், பேட்டி என்ற பெயரில் முகத்துக்கு நேராக ஏதாவது ஒரு மைக் நீட்டப்பட்டுவிட்டால் போதும், ஆர்வக்கோளாறு காரணமாக எதையாவது பேசிவிட்டுப் பின்பு தவிப்பது இவர்களுக்கு ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.
அந்தக் காலத்தில் நேருஜி, கிருபளானி, பிலுமோடி, ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் பாராளுமன்ற சட்டமன்ற விவாதங்களானாலும் சரி, மேடைப்பேச்சு-பேட்டிகளானாலும் சரி, சொல்ல வந்ததைத் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் எடுத்துரைப்பார்கள். அக்கறையற்ற முன்தயாரிப்பு மற்றும் அநாகரிக விமரிசனங்கள் ஆகியவற்றுக்கு மேற்கண்ட அரசியல் தலைவர்களின் பேச்சுக்களிலோ பேட்டிகளிலோ இடமே இருக்காது என்பதை அவர்களது எதிரணியினர்கள் கூட ஏற்றுக்கொள்வார்கள்.ஆனால், சமீப வருடங்களாகச் சில அரசியல்வாதிகள் தங்களது பேட்டிகள் மற்றும் மேடைப்பேச்சுக்களில் இடம் பொருள் ஏவல் அறியாமல் எதையாவது பேசிவிட்டுத் தங்களுக்கும் தங்களது கட்சித்தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுவதும், கடைசியில் வேறு வழியில்லாமல் தாங்கள் சொன்னதை வாபஸ் பெறுவதும் வழக்கமாகிவிட்டது.“கட்சித்தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் ஜனாதிபதி பதவியையும் பெறலாம்’ என்று கூற விரும்பிய ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் ஒருவர் , அதற்கு உதாரணமாக அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரதிபா பாட்டில் குறித்து ஏதோ சொல்லிவிட, கடைசியில் தமது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்ததை ஊடகங்கள் மூலம் அறிந்தோம்.“ஐந்து ரூபாய்க்கு வயிறாரச் சாப்பிடலாம்’ என்று பேட்டியளித்து எல்லாத்தரப்பினரது வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டார் மத்திய அமைச்சர் ஒருவர். புதிதாகப் போடவிருக்கும் தார்ச்சலைகள் நடிகை ஒருவரின் கன்னத்தைப் போல வழுவழுப்பாக அமைக்கப்படும் என்று கூறி வாங்கிக் கட்டிக்கொண்டார் இன்னொரு வடமாநிலத்து மந்திரி.அணையிலிருந்து நீர்ப்பாசனம் சரியாகச் செய்யப்படாதது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மகாராஷ்டிர மாநிலத்து மந்திரி ஒருவர் சட்டென்று கோபப்பட்டு, “நான் என்ன சிறுநீர் கழித்தா அணைகளை நிரப்ப முடியும்’ என்று பதில் கேள்வி கேட்டு கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துப் பிறகு மன்னிப்புக் கேட்டுவைத்தார்.கர்நாடகத்தின் மாண்டியா பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக நிற்கும் நடிகையைப் பற்றிக் கொச்சையாக விமரிசித்துக் கண்டனம் தேடிக்கொண்டிருக்கிறார்கள் தேவ கவுடா கட்சியின் உள்ளூர்த்தலைவர்கள் இருவர்.இதையெல்லாம் தோற்கடிக்கும் விதமாக இந்திய பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் தரப்பு நடத்திய திடீர்த்தாக்குதலில் நமது இந்திய இராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதையும் கொச்சைப்படுத்தும் விதமாக, “உயிரை விடுவதற்காகத்தான் இராணுவத்தில் சேருகிறார்கள்’ என்று புத்திசாலித்தனமாக பதிலளித்து, சகலரது கண்டனத்தையும் பெற்றபின்பு மன்னிப்புக் கேட்டிருக்கிறார் பீகார் மாநில மந்திரி ஒருவர்.மேற்கண்டவாறு எக்குத்தப்பாகப் பேசி விடுகின்ற அரசியல்வாதிகள் அனைவருமே தங்களுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்த உடனே வருத்தம் தெரிவிப்பதும் இல்லை.“எனது பேச்சைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்கள்’. அல்லது “எனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது’ என்ற தயாரான பதிலையே கொடுக்கிறார்கள். கண்டனங்கள் பெரிய அளவில் கிளம்பி, அது கட்சித்தலைமையின் கோபத்தைக் கிளறி, அதன் காரணமாகத் தங்களது பதவிக்கு ஆபத்து என்ற நிலைமை உருவானால் மட்டுமே வருத்தம் தெரிவிப்பது என்ற நிலைமைக்கு இறங்கி வருகின்றனர்.இன்னொரு பக்கம், இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் சற்றும் குறையாதவர்கள் இல்லை என்று அதிகாரவர்க்கத்தினரும் அடிக்கடி நிரூபித்தபடியேதான் இருக்கிறார்கள்.நாளொன்றுக்கு இருபத்தேழு ரூபாய் சம்பாதித்தால் கிராமப்புறங்களிலும், முப்பத்துநான்கு ரூபாய் சம்பாதித்துவிட்டால் நகர்ப்புறங்களிலும் ஒரு குடும்பம் வசதியாக வாழ்ந்து விடலாம் என்று கூறி வறுமைக்கோட்டுக்கு ஒரு புதிய வியாக்கியானத்தையே எழுதிவிட்ட திட்டக் கமிஷன் அதிகாரிகளை என்னென்று சொல்வது? இது மட்டுமா? பிரதமர் மன்மோகன் சிங்கின் முந்தைய ஐந்தாண்டுகால ஆட்சியின் போது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினரை, தலையில்லாக் கோழிகள் என்று கோபமாக விமரிசித்த அமெரிக்காவுக்கான அப்போதைய இந்தியத் தூதர் பிறகு மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று.இதையெல்லாம் அவதானிக்கும் நமக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. 1970-80 களில் தமிழகத்திலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் பற்றி ஒரு வேடிக்கையான விமரிசனம் பத்திரிகைகளில் வந்தது.அவர் பாராளுமன்றத்தில் ஒரு தடவை கூடத் தமது வாயைத் திறந்ததில்லை என்று அபாண்டமான புகார் கூறப்படுகிறது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்; அவர் சில முறை பாராளுமன்றத்தில் தமது வாயைத் திறந்திருக்கிறார். கொட்டாவி விடுவதற்காக…..நமக்கென்னவோ, கண்டபடி பேசிவிட்டுப் பிறகு வாபஸ் வாங்குகிறவர்களைவிட, கொட்டாவி விடுவதற்காக மட்டுமே பொது இடங்களில் வாயைத்திறக்கிற மேற்படி நபர்களே பரவாயில்லை என்று தோன்றுகிறது. என்ன… சரிதானே?
11:29
ram
தற்போதைய காலகட்டத்தில் கம்யூட்டர் மற்றும் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. அதே சமயம், பல்வேறு சிறார்கள் கம்யூட்டருக்கு அடிமை ஆகிப் போவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகின்றது.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசின் தகவல் அதிகாரி பத்திரிகை செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும், 98,000 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 8.1 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இது ஒரு நோயாகவே காணப்படுகின்றது என்றும், அவர்கள் ஊட்டச்சத்து குறைவாலும், தூக்கமின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை சீர்படுத்தும்விதமாக, ஜப்பான் அரசு சிறுவர்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது..இந்த முகாம்களில் சிறுவர்கள், இணையதளம், ஸ்மார்ட்போன், மற்றும் வீடியோ விளையாட்டுகள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு, விளையாட்டுகளிலும், வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் அவர்களின் டிஜிட்டல் பழக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் வண்ணம், அந்த மாணவர்களுக்கு சிறப்பு கல்வி ஆலோசகர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Japan Internet ‘Fasting Camps’ Aim To Treat Screen-Addicted Kids
********************************************* The ministry of education in Japan has a plan to pull kids away from screens and into the great outdoors, the Daily Telegraph reports. They’re aiming to introduce Internet “fasting camps” where children who are deemed Internet-addicts will participate in outdoor activities and get appropriate counseling in an unplugged environment.