.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 10 September 2013

'எல்லோரும் நல்லவரே'.........குட்டிக்கதை





ஒரு நாள் ஒரு புழு ஒன்று புல்வெளியில் தன் குட்டிப் புழுவுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதை மரக்கிளையில் அமர்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது.அதைக் கொத்தித் தின்ன விரும்பியது.அதை பார்த்த புழு அசையாமல் இருந்தது...புழுவின் இந்த செய்கை புறாவிற்கு வியப்பைத் தந்தது...'நான் உன்னை தின்ன வருவது தெரிந்ததும்..அசையாமல்..என்னிடம் பயம் இல்லாமல் இருக்கிறாயே..எப்படி' என்றது புறா.

'என் மனதிற்குள் ...நீ என்னை துன்புறுத்தமாட்டாய் என்றே தோன்றுகிறது'என்றது புழு.

'என் மனதில் உள்ளது உனக்கு எப்படித் தெரியும்'என புறாக் கேட்டது.

'உன்னைப் பார்த்ததும்..உன்னை என் தோழனாக நினைத்து விட்டேன்..நண்பனுக்கு ஆபத்து வந்தால் காப்பவன் நண்பன் அல்லவா..உயிர் காப்பான் தோழன் ஆயிற்றே..சரி..உனக்கு ஒன்று சொல்கிறேன்..வேடன் ஒருவன் வலைவீசி உன்னைப் பிடித்தால் உனக்கு வருத்தம் ஏற்படாதா ...? அதே போன்று தானே..நீ என்னைத் தின்றால் நானும் வருத்த மடைவேன்.

அது போலவே..அந்த வேடன் உன்னை விடுவித்தால்..நீ எவ்வளவு சந்தோஷம் அடைவாய்...நீயும் என்னை விட்டு விட்டால் நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அதுதானே நட்பின் இலக்கணம் என்றது.

புறா...புழுவின் பேச்சுத் திறமையை பாராட்டி விட்டு புழுவை விட்டுச் சென்றது.

நல்ல குணம் கொண்ட புறா போன்றவர்கள் ஒருவருக்குக் கெடுதல் செய்யும்போது ..எடுத்துச் சொன்னால் தன்னைத் திருத்திக்கொள்வார்கள்.

உலகில் எல்லோரும் நல்லவர்களே!.

புத்திசாலித்தனம்...........குட்டிக்கதை





படிக்காத ஒருவன்...மெத்தப் படித்த ஒருவனும் அடுத்த ஊருக்குச் செல்ல புறப்பட்டனர்.படிக்காதவன் ஒரு பை நிறைய பணம் எடுத்துக்கொண்டான்.படித்தவனோ கையில் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.

சிறிது தூரம் அவர்கள் நடந்ததும் இருண்ட காடு வந்தது,காட்டினுள் நடந்தனர்..பசிக்கு.. அங்கு மரங்களில் பழுத்திருந்த பழங்களை உண்டனர்.

திடீரென ..திருடர்கள் கூட்டம் ஒன்று அவர்களை வழிமறித்தது.

படிக்காதவனிடம் இருந்த பணமூட்டையைக் கேட்க படிக்காதவன் கொடுக்க மறுக்க..அவனை நைய்யப் புடைத்து பணப்பையினை பிடுங்கிக் கொண்டார்கள்.

படித்தவனைப் பார்த்து..'உன்னிடம் இருப்பதையும் கொடு' என்றனர்....

படித்தவன் தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறியதோடு திருடர் தலவனைப் புகழ்ந்து புத்திசாலித்தனமாக ஒரு இனிய பாடலைப் பாடினான்...பாடலைக் கேட்ட திருடர் தலைவன் மகிழ்ந்தான். படிக்காதவனிடமிருந்து பிடுங்கிய பணமூட்டையிலிருந்து சிறிது பணத்தை படித்தவனிடம் எடுத்துக் கொடுத்தான்.

ஒருவனது புத்திசாலித்தனம் அவனை ஆபத்துக் காலத்தில் காப்பாற்றும்.அதற்கு கல்வியறிவு அவசியம்.

'கிணற்றுத் தவளையும்...கடல் தவளையும்'.........குட்டிக்கதை





ஒரு கிணற்றில் ஒரு தவளை வாழ்ந்து வந்தது..அது அங்கேதான் பிறந்து வளர்ந்ததால் கிணற்றைத் தவிர அதற்கு எதுவும் தெரியாது.

ஒரு நாள் வேறு தவளையொன்று அக்கிணற்றுக்கு வந்தது...இரு தவளைகளும் பின் நட்புடன் பழக ஆரம்பித்தன...

ஒரு நாள் புது தவளை 'இந்தக் கிணறு சிறியதாக இருக்கிறது..நான் வாழும் இடம் பெரிது' என்றது.

'நீ எங்கே வாழ்கிறாய்?' என் கிணற்றுத்தவளை கேட்டது.

புதிய தவளை சிரித்தவாறே ....'நான் கடலிலிருந்து வந்தேன் ..கடல் மிகப்பெரியதாக இருக்கும்' என்றது.

'உன் கடல்..என் கிணறு போல இருக்குமா?' என்றது கிணற்றுத்தவளை...

அதற்கு புதிய தவளை ..'உன் கிணற்றை அளந்து விடலாம்...சமுத்திரத்தை யாராலும் அளக்கமுடியாது'என்றது.

'நீ சொல்வதை என்னால் நம்ப முடியாது..நீ பொய்யன்.உன்னுடன் சேர்ந்தால் எனக்கு ஆபத்து'என்றது கிணற்றுத்தவளை. மேலும்..'பொய்யர்களுக்கு இங்கு இடமில்ல.நீ போகலாம்'என கடல் தவளையை விரட்டியடித்தது.

உண்மையில் இழப்பு கிணற்றுத்தவளைக்குத் தான்.

நாமும் நமக்கு எல்லாம் தெரியும்..நாம் இருக்கும் இடமே உலகம்,,,நம் கருத்து எதுவாயினும் அதுவே சிறந்தது என எண்ணி...நம் அறிவை வளர்த்துக் கொள்ளாமல் கிணற்றுத் தவளையாய் இருந்து விடக்கூடாது.

பள்ளி மாணவர்களுக்கு கூகுள் நடத்தும் போட்டி!


கூகுள் நிறுவனம் நடத்தும் படைப்பாக்கத் திறன் போட்டியில் ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும், இப்போட்டியில் பங்கேற்பது எளிது. ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெறும்.

மாணவர்கள் ஏதேனும் ஒரு கதை, விளையாட்டு, இசைப் போட்டி, கார்ட்டூன் அல்லது ஏதேனும் ஒரு வித்தியாசமான படைப்பை பற்றி சிந்தித்து, MIT Media Lab உருவாக்கியுள்ள ஸ்கிராட்ச் (Scratch) புரோகிராமிங் லேங்க்வேஜை உபயோகித்து புதிதாக ஏதேனும் ஒன்றை உருவாக்கவேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் Scratch அல்லது  C+ + அல்லது Java  மொழியைப் பயன்படுத்தி படைப்புகளை உருவாக்கலாம்.

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் ஒன்பது மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள டேப்லெட் அல்லது அதற்கு இணையான எலெக்ட்ரானிக் பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2013

விவரங்களுக்கு


அட!

இந்திய ரயில்வே சமீபத்தில் ரயில் ராடார் (railradar.trainenquiry.com) என்கிற புது இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தளத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்தியா முழுவதும் செயல்பாட்டில் உள்ள ரயில்களின் நிலையை அதாவது இந்த நிமிடத்தில் எந்தெந்த ரயில்கள் எங்கெங்கு சென்றுகொண்டிருக்கின்றன என்கிற தகவலை கூகுள் வரைபடத்தின் மூலம் மிகவும் எளிமையான முறையில் அறிந்துகொள்ளலாம்.

இத்தளத்திற்குச் சென்றால் நீலம் மற்றும் சிவப்பு அம்புக்குறிகள் நிறைந்த இந்திய வரைபடம் தோன்றும். நீல நிற அம்புக்குறிகள் சரியான நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும், சிவப்பு நிற அம்புக்குறிகள் தாமதமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களையும் குறிக்கும். நீல நிற அம்புக்குறிகளில் கர்சரை வைத்து கிளிக் செய்தால், ரயிலின் பெயர் மற்றும் எண், ரயில் கிளம்பிய நாள், கடைசியாக கடந்த ரயில் நிலையம். அடுத்துள்ள ரயில் நிலையம், அவற்றிற்கிடையே உள்ள தொலைவு, அடுத்த நிலையத்தைச் சென்றடைய எவ்வளவு நேரமாகும் போன்ற பல தகவல்கள் நம் முன்னே தோன்றும். ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் இத்தளம் அப்டெட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்தியன் ரயில்வேஸ்  சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன்  சிஸ்டம் (CRIS) என்ற அமைப்பின் உருவாக்கமே இத்தளம். ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களின் மூலமாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மட்டுமின்றி,  செல்போன்களிலும் இந்த  வசதியைப் பெறலாம்.

இதன் மூலம் மக்கள் வீட்டில் இருந்த வண்ணம் ரயில்களின் நிலையை அறிந்துகொண்டு,  அனாவசிய டென்ஷன் இல்லாமல், நிம்மதியாக உரிய நேரத்திற்குக் கிளம்பலாம்.  மேலும் தகவல்களுக்கு: railradar.trainenquiry.com  என்கிற இணையதளத்தில் காணலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top