.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 12 September 2013

கேரட்- பீட்ரூட் சூப்!

 கேரட்-  பீட்ரூட் சூப்


தேவையானவை:

பீட்ரூட்  –2
கேரட்  – 2
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கவும்),
வெங்காயம் – ஒன்று
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு,
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு.
வெண்ணெய் - தாளிக்க

செய்முறை:

• கேரட், பீட்ரூட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

• வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• சீரகத்தை வெறும் கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.

• காடாயில் வெண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, வெங்காயம், சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்.

• இதனுடன் துருவிய பீட்ரூட், கேரட் சேர்த்து, பாதி வேகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடவும். பிறகு, இதை ஆற வைத்து வடிகட்டவும்.

• அதில் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.


ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்!


ஃப்ரன்ட் அண்ட் சைடு லெக் ரைஸ்



சுவருக்கு அருகே நேராக நின்று கொள்ளவும். வலது கையை சுவரில் வைத்துக்கொண்ட இடது கையை இடுப்பில் வைக்கவும். இந்த நிலையில் இடது காலை முடிந்த வரை முன்னால் உயர்த்தவும்.

பின்பு பழைய நிலைக்கு வந்த பின் இடது பக்கம் உயர்த்தவும். இது போல் 15 முறை செய்தவுடன் இடது கையை சுவரிலும் வலது கையை இடுப்பிலும் மாற்றி வைத்து 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். சில விநாடிகள் ரிலாக்ஸ் செய்த பின் மேலும் 2 செட்கள் செய்ய வேண்டும்.

பலன்கள் :

இடுப்புத் தசைகள் வலுவடையும். கோர் மசில்ஸ் எனப்படும் வயிற்றைச் சுற்றியுள்ள அனைத்துத் தசைகளும் வலுப்பெறும். பெண்களுக்கு, அடி வயிற்றுப் பகுதிகள் வலுவடையும். கால்கள் வலுப்பெறும். 

அபானாசனம்! செய்முறை!



 அபானாசனம்



செய்முறை :

முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும்.



பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.



பலன்கள்: 

வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும். 

காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு!

 காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்: சுயஉதவி குழுக்கள் மூலம் விற்க அரசு ஏற்பாடு


சென்னை மாநகராட்சி மூலம் அம்மா உணவகம் 200 இடங்களில் தொடங்கப்பட்டு குறைந்த விலை யில் உணவு வழங்கி வரு கிறது. இதில் அந்தந்த பகுதி மகளிர் சுயஉதவி குழுக்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இதேபோல காய்கறிகள், பழங்கள் பூ விற்பனையிலும் மகளிர் குழுக்களை ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி மொத்த மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், பழங்களை நேரிடையாக கொள்முதல் செய்து பொது மக்கள் வசிக்கும் பகுதிக்கு கொண்டு சென்று விற்கலாம்.

தள்ளுவண்டியில் எப்படி தெருத்தெருவாக பழங்கள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறதோ அது போல சிறிய வேன், ஆட்டோ போன்றவற்றில் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து முக்கிய வீதிகளில் சந்திப்புகளில் விற்க திட்டமிடப்படுகிறது.

இந்த பணியில் மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்களை ஈடுபடுத்தினால் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.

கோயம்பேட்டில் பொது மக்கள் நேரிடையாக சென்று காய்கறிகள் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. மார்க்கெட்டிற்கு சென்று வாங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பகுதியிலும் சுயஉதவி குழு பெண்கள் மூலமாக குறைந்த விலையில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்கிறது.

இதனால் பொது மக்கள் அலைந்து திரியாமல் வீட்டிற்கு அருகிலேயே மலிவான விலையில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பெற முடியும்.
கோயம்பேடு மார்க்கெட் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம், பராமரிப்பு மையம் போன்றவை கட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. பொது மக்கள் காய்கறிகள் வாங்க வாகனங்களில் வர முடியாத நிலை உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் பொது மக்களுக்கும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பகுதி ஏழை பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதாக அமையும்.

நடப்பது யாவும் நல்லதற்கே..........குட்டிக்கதை



ஒரு கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறால்...கடலில் மூழ்கியது.அதிலிருந்த அனைவரும் மடிந்தனர்.கப்பல் கேப்டன் மட்டும் உயிர்பிழைத்து..நீந்தியபடியே ஆள் இல்லாதீவு ஒன்றிற்கு வந்தான்

தனியாக என்ன செய்வது எனத்தெரியாத அவன்..அந்தத்தீவில் கிடைத்த ஓலை..குச்சி எல்லாவற்றையும் சேகரித்து இருக்க ஒரு குடிசையை அமைத்துக்கொண்டான்.

பின் வயிற்றைக் கிள்ளியதால் ..உண்பதற்கு ஏதேனும் கிடைக்குமா..என்று தீவைச் சுிற்றிவரக் கிளம்பினான்.திரும்பி வந்து பார்த்தபோது...அவன் அமைத்திருந்த குடிசை தீப்பற்றி எறிஞ்சிருந்தது...

அதைப் பார்த்த அவன் கண்களில் நீருடன் 'கடவுளே நான் என்ன தீங்கு செய்தேன்..என்னை யாருமில்லா தீவில் சேர்த்தாய்.உண்ண உணவில்லை.இருக்க கட்டிய குடிசையும் தீப்பற்றி எறிய வைத்துவிட்டாயே' எனக் கதறினான்.

அப்போது ..அந்தத் தீவை நோக்கி ஒரு கப்பல் வந்தது..அதில் இருந்தவர்கள் இவனைக் காப்பாற்றி தங்கள் கப்பலில் ஏற்றினர்.

'நான் இங்கு மாட்டிக்கொண்டது உங்களுக்கு எப்படித் தெரிந்தது'என அவர்களிடம் இவன் கேட்டான்.

அவர்கள் சொன்னார்கள்..'யாருமில்லா தீவில் நெருப்பு பற்றி எறிந்ததைக் கண்டோம்...உடன் யாருக்கோ உதவி தேவை என்பதை உணர்ந்து வந்தோம்'. .என்றனர்.

கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்கே என்பதை உணர்ந்தான் அவன்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top