
அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது. இது தொடர்பாக கர்நாடக அரசின் நிதித்துறை முதன்மை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் ஒரு அரசாணை பிறப்பித்துள்ளார்.அதில் “புதிய பணி நியமனம் பெற்றுள்ள ஊழியர்கள் அணியும் உடை அலுவலக கவுரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அரசு அலுவலகங்களின் கவுரவத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலக நேரத்தில் ஆடை கட்டுப்பாட்டு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதாவது ஆண் ஊழியர்கள் சட்டை, முழு பேண்ட், பைஜாமா மற்றும் குர்தா மட்டுமே அணிய வேண்டும். டி-சார்ட் அணியக்கூடாது. அதேபோல் பெண் ஊழியர்கள் சேலை, சுடிதார்...