.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 September 2013

சாக்லெட் சுவைப்போர் கவனத்துக்கு..!








அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக நிறைய கற்பிதங்கள் உள்ளன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கற்பிதங்கள் எந்த அளவுக்கு உண்மை?

பால் கலக்காத சாக்லெட்டைவிட பால் கலந்த சாக்லெட்டில் கலோரி அதிகம் என்பது ஒரு கற்பிதம். இது உண்மையல்ல. பால் கலந்தது என்றாலும் சரி, பால் கலக்காதது என்றாலும் சரி, அவற்றில் கிட்டத்தட்ட ஒரே அளவான கலோரிகள்தான் உள்ளன. நூறு கிராம் சாக்லெட்டில் சுமார் 550 கலோரிகள் இருக்கின்றன.

சாக்லெட் சாப்பிட்டால் மைகிரேன் தலைவலி வரும் என்பது மற்றொரு கற்பிதம். சாக்லெட்டில் டைரமைன், ஃபீனைல்எதிலமைன் போன்ற அமினோ அமிலங்கள் இருக்கின்றன. இவற்றால் மைகிரேன் தலைவலி தூண்டப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், சாக்லெட் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மைகிரேன் வரும் என்று சொல்வதற்கில்லை.

சாக்லெட் சாப்பிடுவதால் சதைபோடும் என்றும் பலரும் நம்புகின்றனர். சாப்பாட்டை வெளுத்துக் கட்டிவிட்டு அதற்கும் மேல் சாக்லெட்டும் உட்கொண்டால் நிச்சயம் உடல் பெருக்கத்தான் செய்யும்.

சாக்லெட்டை அளவாக எடுத்துக்கொள்ளும்போது, அதனால் உடல்நலனுக்கு சில நன்மைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் என்று சொல்லப்படும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேதிப்பொருள் சாக்லெட்டில் உள்ளது.


ஹெட்போன் மூலம் இலவச மின்சாரம்!



செல்பேசிகள் மற்றும் எம்பி3 பிளேயர்களில் கேட்பதற்குப் பயன்படும் ஹெட்போன் மூலம் சூரியசக்தி மின்சாரம் தயாரித்து, அவற்றின் மின் தேவையை நிறைவு செய்யலாம் என்று புதிய ஆராய்ச்சி சொல்கிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு 2014-ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம்.


ஹெட்போனின் இரண்டு பக்கங்களின் மேற்பரப்பில் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றும் மின்கலங்கள் பொறுத்தப்பட்டிருக்கும். இந்த ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு நீங்கள் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி ஆகிக் கொண்டிருக்கும் என்கிறார் இதைக் கண்டுபிடித்த பிரிட்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆண்டர்சன்.


ஏற்கெனவே அமெரிக்காவில் மனிதர்கள் நடப்பதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் கருவி விற்பனையில் உள்ளது. மனிதர்களின் காலணிக்குள் இருக்கும் இந்த சின்னஞ்சிறு கருவி, நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறது.


இந்தச் சிறப்புக் காலணிகளை அணிந்துகொண்டு ஒருவர் இரண்டரை கிலோமீட்டர் முதல் ஐந்து கிலோ மீட்டர் நடந்தால் ஐபோனை சார்ஜ் செய்யமுடியும்.


உலக அளவில் மாற்று மின்சாரத்தின் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவரும் நிலையில், இது போன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகளுக்கான மதிப்பும் கூடி வருகிறது.


பாஸ்வேர்டை பாதுகாக்க ஒர் எளிய வழி!



வங்கி கணக்குத் தொடங்கி சமூக வலைதளம் வரை பெரும்பாலான இணையதளங்கள் இன்று பயனீட்டாளர் பெயரையும் பாஸ்வேர்டையும் கேட்டகாமல் உங்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அதனால், எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய எண்களையோ நபர்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக உருவாக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.


இப்படியிருக்கையில், உங்கள் பாஸ்வேர்டை தாக்காளர்கள் (ஹேக்கர்) அறிந்துகொள்வதும் மிகவும் எளிது. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தெரிந்துக்கொண்டாலே போதும், அவற்றைக்கொண்டு சாஃப்ட்வேர் மூலம் யூகித்தறியும் படலத்தை அரங்கேற்றினால் உங்கள் பாஸ்வேர்டு தாக்காளர் கையில்.


நம்முடைய பாஸ்வேர்டும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாகவும் இருக்கவேண்டும். அதேசமயம், அது திருட்டும்போகக் கூடாது. என்னதான் செய்வது? இலக்கணப் பிழை செய்யுங்கள் என்கின்றனர், ஆய்வாளர்கள்.


ஆம்! நீங்கள் இலக்கண பிழையோடு உங்கள் பாஸ்வேர்ட் உருவாக்கினால் அவ்வளவு எளிதில் அதனை ஹேக் செய்ய முடியாது என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதை அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அஸ்வினி ராவ் தலைமையிலான ஆய்வுக்குழு நிரூபித்துள்ளது.


இந்தக் குழு நடத்திய ஆய்வில், பாஸ்வேர்டை யூகிக்க பயன்படுத்தப்படும் கிராகிங் என்ற முறையில் இலக்கண சுத்தமாக உருவாக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படக்கூடியவை என தெரியவந்துள்ளது. இடையே எண்கள், பெரிய எழுத்து போன்றவற்றை கொண்டு பாஸ்வேர்டை கடினமாகியிருந்தாலும்கூட, அவற்றில் உள்ள இலக்கண தன்மையைக் கொண்டு கிராகிங் சாப்ட்வேர்கள் வெற்றி பெற்று விடுகின்றன. ஆனால், அதே பாஸ்வேர்டு இலக்கண‌ப் பிழை கொண்டதாக இருந்தால் தாக்காளர்களின் சாப்ட்வேரால், அதிலுள்ள எந்த பொதுத்தன்மையையும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. எனவே, உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பாக இருக்கும்.


நீங்கள் உருவாக்கும் இலக்கண பிழையைப்போன்று மற்றொருவரால் உருவாக்க முடியாது என்பதுதான் இந்த உத்தியின் தனிச்சிறப்பு. எனவே, இலக்கணப் பிழை செய்யுங்கள் பாஸ்வேர்டில் மட்டும்.

நடிகர் பரத் – ஜெஸ்லி திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆலபம்!


நடிகர் பரத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (14.09.2013) அன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.விழாவில் திமுக தலைவர் டாக்டர் மூ.கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். திரைப்பட நடிகர்,நடிகைகள்,இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.




Bharath Rathna M S Subbulakshmi Queen of Music1916 2004) - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013








இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம் இன்று 16.09.2013


எம். எஸ். சுப்புலட்சுமி என்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - டிசம்பர் 11, 2004) புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.



தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய பல மொழிகளில் பாடியுள்ள இவர், உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று நிகழ்ச்சிகள் பல நடத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top