கத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள்.
பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும்.
அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும். சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள்.
பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள். தீப்புண் தழும்புகள் நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா? உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள்.
தேனுக்குக் காயத்தினை ஆற்றும் தன்மையும், கிருமி நாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.