.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 19 September 2013

ஆப்பிள் – ஐ ஓ எஸ் -7 முதல் தமிழ் ரெவ்யூ!


2007க்கு பிறகு ஆப்பிளின் ஒரு திருப்தியான சேவை இந்த ஐ ஓ எஸ் தான். அப்படி ஒரு நேர்த்தி. என்னை போல பல டெவலப்பருக்கு தெரியும் 1 வருடம் முன்பே இது ரெடியானாலும் இதை நன்கு சோதனையோட்டம் செய்தே இன்று லான்ச் செய்திருக்கின்றனர். ஒரு புது ஐ ஃபோனை வைத்திருப்பதை போல் மகிழ்ச்சியான அனுபவம் ஐ ஓ எஸ் 7.


இதன் பயன்கள் பல இருப்பதால் – முக்கியமானதை மட்டும் பார்ப்போம்.
1. முதலில் இதன் கலர்கள் மிகவும் கண்ணை பறிக்கும் வகையில் அமைக்கபட்டிருக்கிற்து.


2. ஒவ்வொரு ஐகானும் புது மாதிரி செய்திருக்கிறார்கள், அதனால் அந்த பழைய ஐகான் இல்லவே இல்லை.


3. ஆப் ஸ்வாப் எனப்படும் ஒவ்வொரு ஆப்பின் நடுவே இன்னொரு ஆப்பை இயக்கும் ஸ்மூத் டிரான்ஸிஷன்.


sep 19 ravi phone
 


4. ரொட்டேஷன் லாக் ஐ போட் போன்று இதற்க்கு உள்ளதால் இனிமேல் ஆப் சங்கு சக்கரம் மாதிரி சுத்தாது.


5. டூ நாட் டிஸ்டர்ப் – ஒரு செம்மை ஆப்ஸ் – பல பேர் அருகில் இருந்தும் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள்.


6. ஏர் டிராப் எனப்படும் ஒரு வசதி நெட்வொர்க்கில் இருக்கும் யாருக்கும் மெயில் இல்லாமலே ஃபைல்களை அனுப்ப முடியும்.


7. சிரி எனப்படும் ஐஃபோனின் சக்காளத்தி இனிமேல் மனித குரலில் பேசும் மற்றும் உங்கள் குரலை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும்.


8. சஃபாரி பிரவுசர் இனிமேல் ஒரே பிரவுசரில் மற்ற பக்கங்கள் தெரியும் வண்ணம் அது போக ஆட் நியூ பேஜ் தொல்லை இல்லை.


9. கேமரா இன்டர்ஃபேஸ் கலக்கலாய் உள்ளதால் புதுசா படம் பிடிக்கிறவங்க கூட பி சி ஸ்ரீ ராம் கண்க்கா பிடிக்கலாம் ரெடி ஆப்ஸ் அதில் டிங்கரிங் பட்டி பார்க்கலாம் வேறு ஆப்ஸ் இல்லாமல்.


10.ஃபோட்டோக்கள் இனிமேல் எந்த எடத்தில் எடுத்தோம் என கவலைஇல்லாமல் மேப்பில் இந்த படங்கள் இங்கே எடுக்கபட்டது என கூறூம். இன்ஸ்டாகிராமும் டோட்டல் சேஞ்ச ஓவர்


11. ஐ டியூன்ஸ் ரேடியோ – சூப்பர் இலவச ரேடியோ ஆப் மிகவும் குறைந்த பேன்ட்வித்தில் இயங்குகிறது – அதே போல் இதன் உபயோகம் அமெரிக்கா மக்களுக்கு மட்டுமே – கூடிய சீக்கிரம் அனைத்து நாட்டுக்கு தனி தனியே வருகிறது.


12. நோட்டிஃபிக்கேஷன் சென்ட்டர் எனப்படும் தகவல் பலகை – நீங்கள் ரெகுலராய் பார்க்கும் இன்றைய வானிலை / ஷேர் மார்க்கெட் நிலவரம் / மிஸ் கால்ஸ் / அப்பாயின்ட்மென்ட் என அத்தனையும் ஒரே ஆப்ஸில் காட்டும் நல்ல டைம் மேனேஜ்மென்ட் சாஃப்ட்வேர்.


13. ஆப்ஸ் ஸ்டோர் – ஃபைன்ட் மை ஐஃபோன் எனப்படும் ஆப்ஸ் மூலம் தொலைந்த ஃபோன் மற்றூம் அனைத்து ஆப்ஸும் ஒரே இடத்தில் சங்கமம்.


14. கலர்ஃபுல் வால்பேப்பர்ஸ் – மிக அழகாக கண்ணை பறிக்கும் டிரான்ஸ்பரன்ட் மற்றூம் முழு கலர் வால்பேப்பர்ஸ் மிக அற்புதமான சேவை.


15. பேட்டரி லைஃப் – இதில் 11% வரை பேட்டரியை சேமிக்கலாம் என கூறுகின்றனர் ஆனால் டெக்னிக்கள் பர்ஸனாய் இது 3ஜி எஸ் / 4 / 4 எஸ் இதில் முடியாது ஒன்லி ஃபர்ம் ஆப்பிள் 5 அன்ட் 5 எஸ் மட்டுமே முடியும்.

யாசகன்: திரை முன்னோட்டம்!





இது ஒரு  தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கைச் சூழல் வெவ்வேறானது என்றாலும் எல்லோரும் தன் சொந்த பந்தங்களாலும் நண்பர்களாலும் அறிந்தவர்கள் அறியாதவர்கள் என அனைவரின் பாசப் பிணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


நம்முடைய  அன்றாட வாழ்வில் நாம் எத்தனையோ பிரச்னைகளை சந்தித்தாலும் நமக்கு நம் பிரச்னைகள்தான் கண் முன் தெரியும். இது  ஒரு சராசரி மனிதனின் இயல்பு. இதிலிருந்து மாறுபட்டு  வாழ்பவன்தான் எல்லோராலும்  கொஞ்சம் கவனிக்கப்படுகிறான் அப்படி வாழும்  இளைஞன்தான் கதையின் நாயகன் சூர்யா.


மதுரை மாநகரில் நடுத்தரவாசிகள் வசிக்கும்  ஓர் பகுதியில் தன் வாழ்க்கையை தொடங்கும் சூர்யா தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும், தன்னைச்சுற்றி இருப்பவர்களுக்காகவும் வாழும் போது உலகம் அவனை கீழ்நிலையில் வைத்து பார்க்கிறது. அவன் யாரைப் பற்றியும் கவலை படுபவனாக தெரியவில்லை.


தேடி வந்த காதலை கூட நீண்ட யோசனைக்குப்பிறகு ஏற்றுக்கொண்டவன் பிறிதொரு சமயத்தில் அந்த காதலியே பிரிந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படும்போது கூட புன்னகைத்து விடை கொடுக்கிறான். அவள் அவனை முழுமையாக புரிந்து கொண்டதால்தான் வலிகளோடு ஒரு வாழ்க்கை இருப்பதை நினைத்து விடைபெறுகிறான்.


பழிகளைச் சுமந்து இழி வாழ்க்கைக்கு தள்ளப்பட்ட சூர்யா தன் குடும்பத்தார் உற்றார் உறவினர் எல்லோராலும் ஒதுக்கி வைக்கப் படுகிறான்.
அன்பு, பாசம், காதல், பிரிவு, வேதனை, இழிவு, பழி, இயலாமை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவன் இவ்வுலகில் வாழவே ஆசைப்படுகிறான். வாழ வைத்ததா இந்த  உலகம்?


யாசகன்

இயக்குநர்   : துரைவாணன் (அமீர், எம்.சசிக்குமார் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்)
ஒளிப்பதிவாளர்  : வே.பாபு
(கே.வி.ஆனந்திடம்  பணியாற்றியவர்)
இசை    : சதீஷ் சக்ரவர்த்தி
(கனிமொழி,  லீலை)
படத்தொகுப்பு   : ராஜா முகமது
(தேசிய  விருது பெற்றவர்)
பாடல்கள்   : கங்கை அமரன், அறிவுமதி, யுகபாரதி
கலை இயக்குநர்  : ஆனந்த்
நடன இயக்குநர்  : சிவசங்கர்
சண்டை இயக்குநர்  : ராஜசேகர்
உடைகள்   : நடராஜ்
ஒப்பனையாளர்  : சண்முகம்
பி.ஆர்.ஓ   : நிகில் முருகன்
விளம்பர வடிவமைப்பு : ஜெ.ஏ.அப்துல்
தயாரிப்பு  :  அகரம் புரொடக்ஷன்ஸ் கே.கே. சந்தோஷபாண்டியன் மற்றும் ஸ்ரீ தாரினி புரொடக்ஷன்ஸ் சி.இளங்கோ

----------------------

யாசகன்
கதாநாயகன்   : மகேஷ்
கதாநாயகி   : நிரஞ்சனா (அறிமுகம்)
கதாநாயகன் அப்பா  : ஜெயச்சந்திரன்
கதாநாயகன் அம்மா : பவானி
கதாநாயகி அப்பா  : பரமசிவம்
கதாநாயகி அம்மா  :
கதாநாயகன் சகோதரி : ஜனனி

வேலூர் கோட்டை - சுற்றுலாத்தலம்!


 
வேலூர் கோட்டை
 
 
 
வேலூர் கோட்டை
 

மிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் வழித்தடத்தில் 145 கிலோமீட்டர்  தொலைவிலும்
காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மூன்று  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வேலூர் கோட்டை.
வானளாவிய கற்களாலான மதிற்சுவர்கள். பிரமிக்கவைக்கும்  பரந்த சுற்றளவு....ஒரு கோட்டைக்குள் மற்றொரு கோட்டை போல் மூன்று கொத்தளங்கள்.... பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக வானுயர்ந்து நிற்கும் உறுதி.... வரலாற்றுப் பக்கங்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு சாந்த சொரூபி போல் வீற்றிருக்கும்  அழகு.... இந்த அடையாளங்களின் பெயர் தான் வேலூர் கோட்டை
 
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் தலைவர்கள் , திம்மி ரெட்டி, பொம்மி ரெட்டி சகோதரர்களால்  வேலூர் மண்டலப் பகுதிகளுக்கான பாதுகாப்பு அரணாக கட்டப்பட்டது இந்த வேலூர் கோட்டை. காலச் சூழலின் காரணமாக நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும், பின்னர் மராட்டியருக்கும், தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரித்தானியருக்கும் இக் கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரித்தானியர்களிடமே இருந்தது. பிரித்தானியர் காலத்தில் இக் கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினரைச் சிறை வைத்திருந்தனர். இலங்கையின் கண்டியரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இங்கேயே சிறை வைக்கப்பட்டிருந்தான்.
 
தென்னிந்தியாவிலேயே மிகச் சிறந்த போர் அரண்களுடன் கட்டப்பட்ட கோட்டை இது. சுற்றிலும் சுமார் 64 அடி ஆழம் கொண்ட அகழியும், மரப்பாலமும் உயிரைக் கொல்லும் முதலைகளும் கொண்டு பாதுகாப்பு அரணாக விளங்கியதாம் இக்கோட்டை. ஆனால் பற்பல போர்களைக் கண்ட கோட்டையின் அகழி தற்போது ஒரு புறத்தில் தூர்ந்து விட்டது. ஒரு பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி உள்ளது.பொதுவாகவே கோட்டைகளுக்குப் பெயர் வைப்பது தமிழகத்தில் வழக்கமில்லை. ஆனால்இக்கோட்டைக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கோட்டையின் மேற்குப் பகுதியில் நீருக்கடியில் தமிழிலும், கன்னடத்திலும் மீசுரகண்டக் கொத்தளம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது
 
அந்த காலத்தில் வெளியிலிருந்து கோட்டைக்கு செல்ல வேண்டுமானால் மரப் பாலத்தை கடந்து தான் செல்லவேண்டும் ..எதிரிகள் வந்தால் மரப் பாலத்தை உள்  பக்கமாக இழுத்துவிடுவார்களாம் அவர்கள் அகழியை கடந்து தான் உள்ளே செல்லமுடியும் அகழியில் ஏராளமான  முதலைகள் இருந்ததால் அப்படி யாரும் எளிதில் அகழியை கடந்து உள்ளே செல்ல முடியாது
ஆனால் தற்போது தற்போது மரப்பாலம் இல்லை. அகழியின் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் முதற் சுவர்; அழகிய கருங்கல் வேலைப்பாடுகள் மற்றும் சிற்பங்களுடன் அம்பெய்யும் மாடம் கூர்மையான தாமரைப்பூ வடிவம் கொண்ட கொத்தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உட்சுவர் தஞ்சைப் பெரிய கோவிலின் மதில் பாணியில் அமைந்துள்ளது.
அதற்கும் உட்பகுதியில் யானை அல்லது தேர் செல்லக்கூடிய அளவில் சுமார் 12 அடி அகலம் கொண்ட உயர்ந்த மண் பாதை போன்ற சுவர் அமைந்துள்ளது.
 
ஜலகண்டேஸ்வரர்  கோவில்
 
க்கோட்டைக்குள் சுமார் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள அகிலாண்டேஸ்வரி,சமேத ஜலகண்டேஸ்வரர்  கோவில் உள்ளது. ஏழுநிலை ராஜகோபுரமும். இடப்புறத்தில் கலையழகு மிக்க கல்யாண மண்டபமும். வலப்புறத்தில் தீர்த்தமும். 
உள்ளே  நான்குநிலை உள்கோபுரமும், அமையப்பெற்ற தொன்மையான கோவில் இது
உள் பிரகாரத்தில்  செல்வவிநாயகர், வெங்கடேசப் பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதிக்கு எதிரே நந்தா விளக்கு இருக்கிறது.
தங்க வெள்ளிப் பல்லிகள், பாம்புகள், சூரிய சந்திரர்கள் பிரகார மண்டபத்தின் மேற்கூரையில் உள்ளன.
அடுத்து  கங்கை பாலாறு ஈஸ்வரன் சந்நிதி . அருகே காலபைரவர் சந்நிதி. அடுத்து நந்திதேவரும் கொடிமரமும் அமைந்திருக்கின்றன
இங்கிருக்கும் நடராஜர் சந்நிதியில் இருந்து விரிஞ்சிபுரத்தில் இருக்கும் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு ஒரு சுரங்கப் பாதை உள்ளதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது
அடுத்து கோட்டையினுள்ளே 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதியும் உள்ளது.
1806-ல் கட்டப்பட்ட கிறித்தவ தேவாலயமும் உள்ளது. இதனால் இக்கோட்டையை மும்மதச் சந்திப்பு என்றே கூறலாம்.மேலும் திப்பு மகால், ஐதர் மகால் என்றழைக்கப்படும் அரண்மனைகளும், பாத்தி மகால், பேகம் மகால் என்று கூறப்படும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையைப் போன்ற தூண்களைக் கொண்ட இரு அரசவை மண்டபங்களும் உளளன.
 
சிப்பாய் கலகம்
ந்த கோட்டையினுள்ளே தான் வரலாற்று சிறப்பு கொண்ட சிப்பாய் கலகம் நடந்தது சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சியான வேலூர் சிப்பாய் புரட்சி 10-7-1806 அன்று நடைபெற்றது.
1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர்.அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.சிப்பாய்கள் அனைவரும் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால் இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். இதனால் அவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.
 இந்த நடவடிக்கை அவர்களுக்கு இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியது வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான்
இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி
அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர்.
350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.இந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது.
கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை  காண முடியும்


பிரமாண்டத்தையும் வரலாற்று பக்கங்களின் வடுக்களையும் தாங்கி  நிற்கும் வேலூர் கோட்டை நிச்சயம் நாம்  பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்  ....
அன்று  மன்னர்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கோட்டை அகழி இன்று படகு சவாரி செய்யும் சுற்றுலா தளமாக மாறியுள்ளது...தினமும்  அகழியில் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ள படகு சவாரி நடக்கின்றது.
மாலை நேரத்தில் அலங்கார ஒளிவிளக்குகள் வீச காட்சி தரும் கோட்டையை காணும் போது அன்று விளக்கொளி இல்லாத காலங்களில் இந்த கோட்டையில் வாழ்ந்த மனிதர்களின் காலத்தை அசைபோட மனம் நினைக்கிறது  

சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின!

சூர்யாவின் புதுப்படம் வேலைகள் தொடங்கின


ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்த்தில் வெளிவந்த படம் 'சிங்கம் II'. இந்தப் படம் 50 நாட்களையும் தாண்டி ஓடி வருகிறது. அதன்பின் சூர்யா சினிமா சூட்டிங்கில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இரணடு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதுப்பட வேலைகள் துவங்கியுள்ளன. இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஆக்சன் கதையம்சத்தில் தயாராகிறது. இப்படத்துக்கு 'ரவுடி' என பெயர் வைத்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.

இன்னொரு புறம் சூர்யாவை வைத்து கவுதம்மேனன் இயக்கும் படவேலைகளும் ஆரம்பித்துள்ளன. இதில் ஜோடியாக நடிக்க திரிஷாவை பரிசீலிக்கின்றனர். இரண்டிலும் மாறிமாறி நடிக்க உள்ளார்.

சூர்யா ஏற்கனவே கவும்மேனன் இயக்கிய 'காக்க காக்க' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத. 


சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது? ஹன்சிகாவின் தாய் பதில்




ஹன்சிகாவுக்கு இப்போதைக்கு திருமணம் கிடையாது என்று அவருடைய தாய் மோனா மோத்வானி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். 


சிம்பு-ஹன்சிகா காதல் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில், இருவரும் தங்களது காதலை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அடுத்தது இப்போதைக்கு கேள்வி இவர்களது திருமணத்தை பற்றியதுதான். ஆனால் இந்த கேள்விக்கும் அவ்வளவு சீக்கிரம் விடை கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 


சமீபத்தில் நடைபெற்ற சிமா திரைப்பட விழாவிற்கு ஹன்சிகா அவருடைய தாய் மோன மோத்வானியுடன் வந்திருந்தார். அப்போது சிம்பு-ஹன்சிகா திருமணம் எப்போது என ஹன்சிகாவின் தாயிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். 


அதற்கு ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி பின்வருமாறு பதிலளித்திருக்கிறார்... கல்யாணம் என்ற யோசித்து பார்க்ககூட நேரமில்லாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதால் இப்போதைக்கு திருமணம் எனும் பேச்சுக்கே இடம் இல்லை, ஆனால் கல்யாண வேலைகள் திட்டமிட்டபடி எப்பொழுது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும் இப்போதைக்கு சாரி என அவர் தெரிவித்தார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top