
ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில் அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐய்யன் திருவள்ளுவரின் பிரமாண்டத் திருச்சிலையும் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் நினைவு மண்டபமும் ஒருசேர ஒரே இடத்தில் அமைந்திருப்பது ஆச்சரியமல்லவா? அந்த ஆச்சர்ய கன்னியாகுமரியை இப்போது அறிவோம் கன்னியாகுமரியில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும்...