.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 23 September 2013

மருதநாயகத்தை தூசு தட்டுகிறார் கமல்?

 1997ல் கமல் தொடங்கிய படம் மருதநாயகம். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரன் முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகத்தை பற்றிய அந்த வரலாற்றுப்படத்தை தனது கனவு படமாகவும் சொன்னார் கமல். அதனால் இங்கிலாந்து நாட்டு ராணியை சென்னைக்கு அழைத்து வந்து பிரமாண்டமாக படத்தை தொடங்கினார். ஆனால் பின்னர் ஏற்பட்ட பைனான்ஸ் ப்ராப்ளம் காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டார் கமல்.
                          
ஆனால் விஸ்வரூபம் படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் தற்போது இயக்கி வருகிறார் கமல். இந்த பாகத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது. அதனால் இந்த சூட்டோடு மருதநாயகம் படத்தையும் தூசு தட்டுமாறு கமலின் அபிமானிகள் அவரை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். சிலர் பைனான்ஸ் உதவி செய்யவும் முன்வந்துள்ளார்களாம். அதனால் விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு மருதநாயகம் வேலைகளில் கமல் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன். - ரஜினி!

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னடம் என திரையுலகங்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சியினை அமர்களப்படுத்தினர்.

மேலும் தமிழ் திரையுலக பிரபலங்களான ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜா, சிவக்குமார், விஜய், அஜித், விக்ரம் மற்றும் பல திரையுலக பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார், இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல் அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி.

அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள், மற்றும் திரையரங்கு அதிபர்களுக்கு நன்றி. சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை.

38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை.

ஆனால் கமல் அப்படி அல்ல. நிறைய விடயங்கள் தெரிந்தவர்.

சினிமாவில் வில்லனாக இருந்த என்னை கொமடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர்.

ஆறில் இருந்து அறுபது வரை படத்தில் என்னை சோகமாக நடிக்க வைத்தவர் எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன்.

பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.

இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன்.

டாப்பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும் சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள்.

அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.

அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது. சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள்.

இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம். நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல்.

இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

- See more at: http://www.yarlminnal.com/?p=55253#sthash.nyfu0bd8.dpuf

Sunday, 22 September 2013

சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள் !

சினிமா நூற்றாண்டு 2–ம் நாள் நிகழ்ச்சி: சென்னையில் திரண்ட கன்னட– தெலுங்கு நடிகர், நடிகைகள்
 
இந்திய சினிமா நூற்றாண்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல்– அமைச்சர் ஜெயலலிதா நேற்று இவ்விழாவை தொடங்கி வைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியாக தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இன்று காலை 2–ம் நாள் நிகழ்ச்சியாக கன்னட திரைப்பட விழா நடந்தது. கர்நாடக மந்திரிகள் கே.ஜே. ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, உமாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். பின்னர் கன்னட நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கன்னட மொழி பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆடினார்கள். விழாவில் ஏராளமான கன்னட ரசிகர்கள் கலந்து கொண்டார்கள்.

இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு திரைப்பட விழா நடக்கிறது. இதில் ஆந்திர துணை முதல்வர் தாமோதர்ராஜா நரசிம்மா, மத்திய மந்திரி கே.சிரஞ்சீவி, அமைச்சர் டி.கே. அருணா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதில் தெலுங்கு நடிகர்கள், வெங்கடேஷ், நாகார்ஜூனா, டாக்டர் ராஜசேகர், சுமன், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுனா, நாகசைதன்யா, ராம்சரன் தேஜா உள்ளிடட்ட பலர் பங்கேற்கின்றனர்.

நாளை (23–ந்தேதி) காலை மலையாள நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதில் மம்முட்டி, மோகன்லால், திலீப் பங்கேற்கின்றனர்.
 
இந்து மத கலைக்களஞ்சியம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது!

11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது.

இந்து மத கலைக்களஞ்சியம் (Encylopedia of Hinduism) என்ற புத்தகத் தொகுப்பு ஒன்று திங்களன்று அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது.

25 ஆண்டு காலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இந்து மதத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் எழுதிய சுமார் ஏழாயிரம் கட்டுரைகளின் 11 நூல்கள் கொண்ட தொகுப்பாக இந்த கலைக்களஞ்சியம் அமைந்துள்ளது.

இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவை குறித்து இந்தக் கலைக்களஞ்சியம் பேசுகிறது.
தவிர இந்து மதம் சார்ந்த இந்திய சரித்திரம், கலாச்சாரம், கலை, இலக்கியம் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்திய பாரம்பரிய ஆய்வு அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்துகின்ற சித்தானந்த் சுவாமிகளின் முயற்சியில் இந்த கலைக்களஞ்சிய பணிகள் நடந்துள்ளன.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழகம் இந்த திட்டத்துக்கு ஆதரவும் வசதிகளும் செய்துதந்திருந்தது.

இந்த கலைக்களஞ்சியத்தின் சர்வதேச வெளியீட்டு விழாவில் தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹேலி, அட்லாண்டா நகரிலுள்ள இந்திய தூதர் அஜித் குமார், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் அன்னா ஹசாரே உட்பட நூற்றுக்கணக்கான மத அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்குகொண்டிருந்தனர்.

இந்தியாவில் இந்த கலைக்களஞ்சியம் ஏற்கனவே தலாய் லாமா அவர்களால் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 28 ஆம் தேதி மங்கள்யான் ஏவப்படும்!

செவ்வாய் கிரகம்

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விடும் முதல் ஆய்வுக் கோள் வரும் அக்டோபர் 28 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு செல்லுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள மங்கள்யான் செயற்கைக்கோள், தற்போது இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு, வரும் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தேவிப் பிரசாத் கார்னிக் தமிழோசையிடம் தெரிவித்தார்.
வானிலை சீராக இருந்தால் அக்டோபர் 28 ஆம் தேதி இந்தக் கோள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து பி எஸ் எல் வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு 450 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 

நீண்ட தூரம்

செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி
செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி

இதற்கு முன்பு இந்தியா 2008 ஆம் ஆண்டு சந்திர மண்டலத்தை ஆராய சந்திரயானை வெற்றிகரமாக ஏவியது. பூமியில் இருந்து சந்திரன் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்து இருக்கும் கோளான செவ்வாயோ இதை விட ஆயிரம் மடங்கு தூரத்தில் அதாவது 400 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. ஆனால் ஒவ்வொறு 26 மாத கால இடைவெளியிலும் செவ்வாய் பூமிக்கு சற்றே அருகில் அதாவது 56 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் வருகிறது. அப்படி செவ்வாய் கிரகம் அடுத்து நெருங்கி வரும் நேரத்தைக் கணக்கில் கொண்டே இந்த கோளை இந்தியா ஏவுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட பிறகு, 1350 கிலோ எடையுள்ள மங்கள்யான் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகதையடைய 10 மாதங்களை எடுத்துக் கொள்ளும். செவ்வாயை சென்றடையும் அளவுக்கு தொழில் நுட்பத் திறன் உள்ளதாக என்பதை உறுதிப்படுத்தவும், செவ்வாய் கிரகத்தில் மீதேன் இருக்கிறதா என்பது உள்ளிட்ட ஆய்வுகளை நடத்துவதுமே மங்கள்யானின் முக்கிய நோக்கங்கள்.

செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்த பல சோதனைகளைச் செய்ய 5 உபகரணங்களை மங்கள்யான் ஏந்திச் செல்கிறது. சுமார் ஆறுமாத காலமே இது செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதிக பட்சமாக அந்த கிரகத்தை மங்கள்யான் 60 முறை சுற்றிவரும். 

சந்திரயானில் மொத்தமாக 11 கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் சில வெளிநாட்டு நிறுவனங்களுடையவை. ஆனால் இப்போது எடுத்துச் செல்லப்படும் அனைத்து கருவிகளும் இந்தியாவுடையாதாகவே இருக்கும். அமெரிக்காவும், ரஷ்யாவும் 1960களிலேயே செவ்வாய் கிரகத்துக்கு கோளை அனுப்பியுள்ளன. சமீப ஆண்டுகளில் விண்வெளியில் வேகமாக முன்னேறிவரும சீனா 2011 இல் செவ்வாய் கிரகத்தை ஆராய கோள் அனுப்ப மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top