ஏழு வருடங்களுக்கு பிறகு, அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய், அஜீத் நடித்த படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. விஜய் நடிக்கும் ‘ஜில்லா‘ படத்தை நேசன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வந்தது. இப்படத்தை பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய எண்ணி இருந்தனர்.
திடீரென்று விஜய் தந்தையாக நடிக்கும் மோகன்லாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்கனவே அவர் கால்ஷீட் கொடுத்த படங்களில் நடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. தற்போது அவர் நடிக்கும் படங்களில் எந்த படம் முதலில் ரீலீஸ் ஆகுமோ, அந்த படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்து வருகிறார். அந்த வரிசையில்தான் ‘ஜில்லா‘ படத்துக்கும் கால்ஷீட்டை ஒதுக்கி தருகிறார் மோகன்லால். இதில் ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதனால் ‘ஜில்லா’ அடுத்த பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் அஜீத் நடித்துள்ள ‘ஆரம்பம்’ படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆனபிறகு அவர் நடித்து வரும் ‘வீரம்‘ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு விஜய்அஜீத் படம் பொங்க லுக்கு நேருக்கு நேர் மோத உள்ளன. இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த 2007ம் ஆண்டு விஜய் நடித்த போக்கிரி, அஜீத் நடித்த ஆழ்வார் படங்கள் நேருக்கு நேர் மோதின.



17:04
ram

முன்கால்களைத் தூக்கியவாறு ஆக்ரோஷமாக அதை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகள்..." எனச் சொல்லிப்பாருங்கள். மிரட்டலாக இருக்கும். அதுவே நிஜமாக இருந்தால்...? இருக்கிறது. கொனார்க் சூரியகோவிலாக!. ஆம். கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட தேர்வடிவம்தான் சூரியபகவான் கோவில்.
இந்து சமய மரபுகளில் ஒன்றான சௌரவ மதத்தில் சூரிய பகவான்தான் முக்கியக் கடவுள். அதன்பேரிலேயே சூரியபகவானுக்காக இந்த கோவில் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிலைகள் மிகவும் பிரசித்தம். அத்தனையும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை. கடவுள்கள், நடனமாடும் மங்கையர், குதிரைகள், யானைகள், சிங்கங்கள் சிற்பங்களாய் சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
நரசிம்ம தேவரால் கட்டப்பட்ட முழுக்கோவிலும் இப்போது இல்லை. கோவிலின் சில பகுதிகள் இடிந்து விட்டாலும் மிடுக்குக் குறையவில்லை. சூரியக்கோவிலில் உடைந்து விழுந்த சிற்பங்கள் உள்ளிட்ட முக்கியப்பொருட்களை கொனார்க் அருங்காட்சியத்தில் காணலாம்.
இந்தியாவின் முக்கிய அடையாளச் சின்னங்களில் ஒன்று.
ஒன்றாக நான்கு உயரமான மினார்களும், கட்டடத்தின் உச்சியில் வெங்காய வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் குவிமாடமும் தாஜ்மஹாலின் தனி அடையாளங்கள். குவிமாடம் மட்டும் 35மீட்டர் உயரம் கொண்டது. சுவர்கள் அனைத்திலும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. 'துலுத்' என்ற வகையிலான அரபி வனப்பெழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. பாரசீக வனப்பெழுத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் இவை உருவானவை. மேலும் செடி, கொடி வடிவங்களும் அழகுற வரையப்பட்டுள்ளன. தாஜ்மஹாலின் உட்புறக்கூடம் இன்னும் அழகானது. எண்கோண வடிவில் அமைந்துள்ள உட்புறக்கூடத்தில் விலை உயர்ந்த பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.தாஜ்மஹாலைப் போலவே அதன் முன்புறம் அமைந்துள்ள பூங்காவும் ரசனைக்குரியது. பாரசீக பூங்காக்களின் வடிவமைப்பை பின்பற்றி இது அமைக்கப்பட்டுள்ளது. 