.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 9 October 2013

ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் நடிக்கும் தீபிகா படுகோனேவுக்கு டப்பிங் குரல்!

 ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்து தயாராகி வரும் படம் 'கோச்சடையான்'.




ரஜினிகாந்தின் இளையமகளான சவுந்தர்யா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் சென்னை, ஹாங்காங், லண்டன் என மூன்று இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகேற்றப்பட்டு வருகிறது.  இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி காந்த் நடித்து வருகிறார்.



ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12 -ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிடபட்டு உள்ளது. இப்படத்தில் நடித்து உள்ள தீபிகா படுகோனேவுக்கு இந்தபடத்தில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகா படுகோனே பெங்களூரை சேர்ந்தவர் அவருக்கு கன்னடம் சரளமாக வரும் ஆனால் தமிழ் சரியாக வராது அதனால் இப்படத்தில் தீபிகாவுக்கு சவீதா ரெட்டி டப்பிங் குரல் கொடுக்கிறார்.


கடந்த காலங்களில் சவிதா  ஜெனிலியா தேஷ்முக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்து உள்ளார். சவீதா முதன் முதலில்  ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு குரல் கொடுத்தார். "


இது குறித்து இயக்குனரும் ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா  அஸ்வின் கூறியதாவது:- தீபிகாவிற்க்ய் தமிழ் டப்பிங் செய்ய சவிதா  சரியான தேர்வு.அவரது குரல் ஒரு மிக விரிவான தொனியில் உள்ளது. அவர் தனது திறமையை வெளிப்படுத்துவார்.தீபிகா கதாபாத்திரம் கருணை மற்றும் சீரிய பண்பு உடையவராக காட்டபடுகிறது.இதற்கு சவிதா ஒரு சரியான தேர்வு இவ்வாறு அவர் கூறினார்.

மல்டி கலரில் அறிமுகமாகிறது வாக்காளர் அடையாள அட்டை!




 புதுவையில் புதிதாக சேர்க்கப்படும் வாக்காளர்களுக்கு மல்டி கலரில் அச்சிடப்பட்ட அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. 


புதுவை கூடுதல் தேர்தல் தலைமை அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி புதுவையில் நாளை(10ம் தேதி) முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை வாக்காளரை சேர்த்தல், நீக்குதல் பணி நடக்கிறது. புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் உள்பட 30 தொகுதிகளில் நடக்கிறது. மாநிலம் முழுக்க உள்ள 875 வார்டுகளிலும் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு பணியை மேற்கொள்வார்.


புதிய வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் கார்டில் மல்டி கலரில் அச்சிடப்பட்ட வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அனைத்து மாநிலத்திலும் இந்த பணி நடந்து வரும் நிலையில் புதுவையில் இதற்காக பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது புதிய அட்டை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



எக்ஸ்ட்ரா தகவல்



தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளரின் போட்டோவுடன் கூடிய அடையாளம் அட்டை வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணையம் 1993ல் தொடங்கியது.

நோபல் நாயகர்கள்: அவிழ்ந்தது மூலக்கூறுகளின் மர்மம்!

ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
ராண்டி டபிள்யு. ஷெக்மேன்
தாமஸ் சி. சுதோப்
தாமஸ் சி. சுதோப்
ஜேம்ஸ் இ. ராத்மேன்
ஜேம்ஸ் இ. ராத்மேன்



உடலில் உள்ள செல்கள் எப்படி மூலக்கூறுகளை உரிய இடங்களுக்கு, உரிய நேரத்துக்கு அனுப்பிவைக்கின்றன என்பதைக் கண்டுபிடித்ததற்காக மூன்று அமெரிக்கர்களுக்கு உடல்இயக்கவியல் மருத்துவத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 



யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் இ. ராத்மேன் (62), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராண்டி டபிள்யு. ஷெக்மேன் (64), ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் சி. சுதோப் (57) ஆகியோர் விருது பெறுகின்றனர். 


ஒரு செல்லில் அதன் மூலக்கூறு கள் சிறு பொதிகளாகச் சுற்றிக்கொண்டே யிருக்கின்றன. அதை வெசிகிள்கள் என்று அழைப்பர். உரிய நேரத்தில், உரிய இடங்களுக்கு இந்த மூலக்கூறுகளை எது, எப்படிக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது என்பதை இந்த மூவரும் வெவ்வேறு நிலைகளில் ஆராய்ந்தனர். 



உதாரணத்துக்கு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் இன்சுலினைக் கணையம் சுரக்கிறது. அந்த இன்சுலின் உரிய அளவில், உரிய நேரத்தில் ரத்தத்தில் சேர்க்கப்படுகிறது. ஆனால், இந்தப் போக்குவரத்து எளிதானதல்ல. மிகப் பெரிய நகரங்களின் நெரிசல் நேரத்தில் சாலைகளில் காணப்படும் வாகன நெரிசலுக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்த நெரிசல். அப்படியும் விபத்து ஏதும் இல்லாமல் போக்குவரத்து நடக்கிறது என்பதுதான் வியப்பு. 



மனிதர்கள் நடக்கவும் பேசவும் பாடவும் சூடான அடுப்பின்மீது தெரியாமல் வைத்து விட்ட கையைச் சட்டென்று எடுக்கவும் தான் சொல்ல விரும்பியதை எடுத்துச் சொல்லவும் ரசாயன அல்லது வேதியியல் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ‘நியூரோ-டிரான்ஸ்மிட்டர்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த சமிக்ஞைகள் ஒரு நரம்பு செல்லிலிருந்து இன்னொரு நரம்பு செல்லுக்கு இந்த சமிக்ஞைகளை அனுப்பி இந்தச் செயல்களைச் செய்யவைக்கின்றன. 



வெசிகிள்கள் போக்குவரத்துக்குக் குறிப்பிட்ட சில மரபணுக்கள்தான் காரணம் என்பதை டாக்டர் ஷெக்மேன் கண்டு பிடித்தார். தங்களுடைய இலக்குகளுடன் வெசிகிள்கள் சேர்வதற்கு உதவும் புரதச் செயல்பாட்டை டாக்டர் ராத்மேன் கண்டுபிடித்தார். வெசிகிள்கள் தங்க ளுடைய சரக்குகளை உரிய இடங்களில் கொண்டுபோய்ச் சேர்க்க சமிக்ஞைகள் எப்படித் தரப்படுகின்றன என்பதை டாக்டர் சுதோப் வெளிப்படுத்தினார். 



இந்த வெசிகிள்கள் என்பவை மிகச் சிறியவை. அவற்றின் மீது சவ்வுபோன்ற படலம் மூடியிருக்கிறது. வெவ்வேறு அறை களுக்குப் புரதச் சரக்குகளை இவைதான் கொண்டுசேர்க்கின்றன. அல்லது பிற சவ்வுகளுடன் இணைந்துவிடுகின்றன. இதில் தவறு அல்லது குழப்பம் நேரிட்டால்தான் நரம்புக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, நீரிழிவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு நோய்களைத் தடுக்கவும் நோய் வந்தால் சிகிச்சை தரவும் மிகவும் உதவியாக இருக்கும். 


டாக்டர் ஷெக்மேன் 

 
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில், செயின்ட்பால் என்ற ஊரில் பிறந்த டாக்டர் ஷெக்மேன் 1970-களில் தன்னுடைய சோதனைகளைத் தொடங்கிய போது, ஒருசெல் ஈஸ்ட்டுகளைத்தான் ஆய்வுக்குப் பயன்படுத்தினார். ஒவ்வொரு செல்லின் ஒரு பகுதியிலும் வெசிகிள்கள் அப்படியே குவிந்துவிடுகின்றன. அப்படி அவை சேர்ந்து நெரிசல் ஏற்படக் காரணம், மரபுதான் என்று கண்டுபிடித்தார். 


பிறகு, செல்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத் தும் மூன்று வகை மரபணுக்களை அடையாளம் காணும் ஆய்வுகளைத் தொடர்ந்தார். கலிபோர்னியா, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் படித்த அவர் 1974-ல் டாக்டர் பட்டம் பெற்றார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 1976-ல் ஆய்வுப் பணியில் சேர்ந்தார். 


அவருடைய ஆய்வுகள் உயிரித் தொழில்நுட்பத் தொழில்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இன்சுலின், ஹெபடைடிஸ்-பி தடுப்பு மருந்து ஆகியவற்றைத் தயாரிக்க அவர் ஈஸ்ட்டில் செய்த ஆராய்ச்சிகள் பெரிதும் கைகொடுத்தன. 



டாக்டர் ராத்மேன் 

 
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தின் ஹேவர்ஹில் நகரில் பிறந்தார் டாக்டர் ராத்மேன். 1980-கள், 1990-களிலேயே பாலூட்டிகளின் செல்களில் நடந்த வெசிகிள்கள் போக்குவரத்து குறித்து ஆராயத் தொடங்கினார். ஒருவிதப் புரதக் கூட்டுப்பொருள்தான், வெசிகிள்கள் தங்களுடைய இலக்கான சவ்வுகளை அடையாளம் கண்டு சரக்குகளை இறக்கிவிடவும் சேர்ந்துகொள்ளவும் காரணமாக இருக்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். ஒரு ஜிப்பில் இரண்டு உலோகப் பகுதியும் ஒன்றோடொன்று பொருந்துவதைப் போல இவை பொருந்துகின்றன என்பதையும் கண்டுபிடித்துக் கூறினார்.



புரதங்கள் பலவாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான கூட்டுப்பொருள் அதே அளவிலான தேவையுள்ள இடத்துக்குச் சென்றுசேர்கிறது என்று அறிந்தார். இதனால்தான் குழப்பம் ஏற்படுவதில்லை. இதே அடிப்படையில் தான் செல்லுக்கு உள்ளேயும் இயக்கங்கள் நடைபெறுகின்றன. ஒரு செல்லின் வெளியில் உள்ள சவ்வுடன் வெசிகிள் இணையும்போதும் இது நடக்கிறது. 



டாக்டர் ராத்மேன், ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியிலிருந்து 1976-ல் டாக்டர் பட்டம் பெற்றார். மசாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டத்துக்குப் பிந்தைய பட்டத்துக் கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1978-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அங்குதான் வெசிகிள் செல்கள் மீதான ஆராய்ச்சியை மேற்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகம், ஸ்லோவன்-கெட்டரிங் புற்றுநோய் மையம் ஆகியவற்றிலும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் அவர் பணியாற்றியிருக்கிறார். 2008-ல் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு செல் உயிரியல் துறையின் தலைவராக இப்போது பதவி வகிக்கிறார். 


டாக்டர் சுதோப் 

 
அமெரிக்கக் குடிமகனான டாக்டர் சுதோப், மேற்கு ஜெர்மனியில் உள்ள கோடிங்கென் நகரில் பிறந்தார். நரம்பில் உள்ள செல்கள் மூளையில் உள்ள செல்களுடன் எப்படித் தகவல்தொடர்பு வைத்துள்ளன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மூலக்கூறுகளின் செயல்பாடுகள் என்னவென்று அவர் கண்டுபிடித்தது பல புதிர்களை விடுவித்தன. நரம்பியல் நடவடிக்கைகளில் சாதாரணமானது முதல் மிகவும் சிக்கலானது வரை பலவற்றை அடையாளம் காண அவருடைய ஆய்வுகள் உதவின. 


ஜெர்மனியின் கோடிங்கென் நகர ஜார்ஜ் ஆகஸ்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் பிறகு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். டல்லஸில் உள்ள மருத்துவ மையத்தில் 1983-ல் பணியில் சேர்ந்தார். ஹோவார்ட் ஹியூஸ் மருத்துவக் கழகத்தில் ஆராய்ச்சி நிபுணராக 1991-ல் வேலையில் சேர்ந்தார். பிறகு, ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு செல்லுலர் உடல்இயக்கவியல் துறைப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 


ரஜினி கலந்து கொள்வது சந்தேகமே : IFFI

 
 
 


மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள இருப்பதால் சர்வதேச திரைப்படவிழாவில் ரஜினி கலந்து கொள்வது சந்தேகம் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. 


கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவினைத் துவக்கிவைக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
2004 முதல் கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்க விழாவில் முன்னணி நடிகர் ஒருவர் கலந்துகொண்டு துவக்கிவைப்பார். 


இந்தாண்டு இவ்விழாவினைத் துவக்கி வைக்க ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் விழா தொடங்கும் காலத்தில் ரஜினி மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவிருப்பதால் விழாவைத் துவக்கி வைப்பது சந்தேகமே என்று அவ்விழாக் குழுவைச் சேர்ந்த விஷ்ணு வாக் கூறியுள்ளார். 


மேலும் இம்முறை நடைபெறும் திரைப்பட விழாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இருந்து மசாலா படங்களை திரையிடப் போவதில்லை. பலதரப்பட்ட மக்களும் இதையே விரும்புவதால் இம்முடிவினை எடுத்திருக்கோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 


வில்லன் அவதாரத்தில் உலகநாயன்!


உத்தம வில்லன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் உலகநாயகன்.
விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கவிருக்கும் அடுத்த படத்துக்கு உத்தம வில்லன் என்று பெயரிடப்பட்டுள்ளது.


லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம்.


ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார்.


இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார்.


இதுகுறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது.
ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் சதிலீலாவதி படத்தை ரீமேக் செய்து இயக்கினேன். தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன்.


மேலும் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் கொமடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் என கலந்து உருவாகவிருக்கும் இப்படத்தில் கமலின் கதாபாத்திரம் ரசிகர்களை ரொம்ப கவரும் விதமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top