'மனைவி கட்டிய தாஜ்மஹால்' |
'மனைவி கட்டிய தாஜ்மஹால்' காதலும்,கலைரசனையும் மொகலாயர்களின் உணர்வில் ஊறியது போலும். மனைவி மீது கொண்ட காதலால், அவரை அடக்கம் செய்த இடத்தில் பளிங்கு மாளிகை எழுப்பினார் ஷாஜகான். அது, தாஜ்மஹால். அன்புக்கணவர் ஹுமாயுன் நினைவாக, அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கலையநயமிக்க மாளிகை ஒன்றை எழுப்பினார் ஹுமாயுனின் மனைவி ஹமீதாபானு பேகம். அது, ஹுமாயுன் கல்லறை (Humayun's Tomb). டெல்லியில் கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் ஹுமாயுன் கல்லறைதான் இந்தியாவில் மொகலாயர் கட்டிய கலை ரசனைமிக்க முதல் கட்டடம். ஆம். இது மனைவி கட்டிய தாஜ்மஹால். ஹுமாயுன் என்கிற நஸ்ருதீன் ஹுமாயுன். பாபரின் புதல்வர். அக்பரின் தந்தை. இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வடஇந்தியப் பகுதிகளை ஆட்சி செய்தவர். கி.பி. 1530- 40வரையிலும் 1555- 56வரையிலும் ஹுமாயுன் ஆட்சி நடந்தது. 1556ல் தனது நூலகத்தின் படிகளில் இருந்து தவறி விழுந்து எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், மனைவி ஹமீதாபானு பேகம் விருப்பப்படி கட்டடம் எழுப்பப்பட்டது. இதற்காக பாரசீக கட்டடக்கலை நிபுணர்களான சையத் முகமது, அவரது தந்தை மிராக் கியாதுதீன் ஆகியோரை ஆப்கானிஸ்தான் ஹெரத் நகரில் பிரத்யேகமாக வரவழைத்துள்ளனர். சுமார் 8ஆண்டுகளாக கட்டடப்பணி நடந்துள்ளது. சதுரவடிவிலான அழகான நந்தவனங்கள், நீரோடைகள், நடுவே மாளிகை வடிவத்தில் நினைவிடம் என பாரசீக பாணியில் கட்டி முடிக்கப்பட்டது. செக்கச்சிவந்த சிவப்பு கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்கள் கலந்து உருவாக்கப்பட்ட இந்த கட்டடம் இன்றளவும் அதே அழகுடன் காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. இதை கணவர் ஹுமாயுன் நினைவாக கட்டுவதற்கு உத்தரவிட்ட ஹமீதாபானு பேகம் இறந்தபிறகு அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. தவிர, டெல்லியை ஆண்ட கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர்ஷா உள்ளிட்ட பல மன்னர்களின் கல்லறைகளும் இங்குள்ளன. 1857-ம் ஆண்டில் நடைபெற்ற கலகத்தின் போது இரண்டாம் பகதூர்ஷா இங்கே மறைந்திருந்ததாகவும், அவரை லெப்டினென்ட் ஹாட்சன் இங்கிருந்துதான் பிடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. வரலாற்று நினைவுகளையும் வனப்புகளையும் தாங்கி நிற்கும் ஹுமாயுன் கல்லறை, 1993ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. எப்படிச் செல்வது? டெல்லியிலேயே இது அமைந்துள்ளதால் எங்கிருந்தும் எளிதாக சென்றடையலாம். நல்ல சாலை வசதி உள்ளது. பிற பகுதிகளில் இருந்து நிஜாமுதீனுக்கு ரயில் வசதி இருக்கிறது. டெல்லியில் சர்வதேச விமானநிலையம் அமைந்துள்ளது. |
Thursday, 10 October 2013
'மனைவி கட்டிய தாஜ்மஹால்' -சுற்றுலாத்தலங்கள்!
17:49
ram
சந்தேகம் - குட்டிக்கதைகள்!
12:57
ram
ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலரும் வந்து வேண்டிக் கொண்டனர். அப்படி வேண்டிக் கொள்ளும் போது, ""இறைவா... நான் தினமும் உன்னை வணங்குகிறேன்'' என்பது போல் சொல்கின்றனர்... இதில் உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.
அப்போது இறைவன், ""தேவதைகளே! இந்த ஊரில் பலரையும் போய் சந்தித்து யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்'' என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.
ஒருவன், ""நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்,'' என்றான்.
அடுத்தவன், ""நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்,'' என்றான்.
மற்றவன், ""நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்,'' என்றான்.
இன்னொருவன், ""எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்,'' என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, ""அப்பனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், ""எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
""தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.
""கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.
""யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.
கடவுள் புன்னகைத்தபடியே, ""இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.
உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.
பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது!
12:48
ram
0
0
0
பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது
10/10/2013 12:22:50 PM
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11469&id1=3#sthash.NUojYLBB.dpuf10/10/2013 12:22:50 PM
பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது. முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்
0
0
0
பட்ஜெட், அதிகமாவதால் அனுஷ்கா படம் இரண்டு பாகமாகிறது
10/10/2013 12:22:50 PM
- See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=11469&id1=3#sthash.NUojYLBB.dpuf10/10/2013 12:22:50 PM
பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது. முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்
பட்ஜெட் எகிறுவதுடன் படத்தின் நீளமும் அதிகமாவதால் அனுஷ்கா நடிக்கும் படம் திடீரென்று 2 பாகமாக உருவாகிறது. நான் ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி அடுத்து பாஹுபாலி தெலுங்கு படத்தை இயக்குகிறார்.
சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகள் பெற்றார். இப்படத்தின் பட்ஜெட் பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்காக ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட அரண்மனை மற்றும் அந்தப்புர அரங்கு அமைக்கப்பட்டது. ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்ப அரங்குகள் நிர்மாணிக்கும்போது அது ஏற்கனவே போட்டிருந்த பட்ஜெட்டை தாண்டி சென்றது.
முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், நாசர், சுதீப், ரம்யா கிருஷ்ணன் என பிரபல நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். அதற்கு ஏற்ப காட்சிகளும் நீண்டுகொண்டே சென்றது. முழு ஸ்கிரிப்ட்டையும் எடுத்தால் சுமார் 5 மணி நேரமாவது இப்படத்தின் நீளம் சென்றுவிடும் என்ற நிலை உருவானது. இதையடுத்து இப்படத்தை 2 பாகமாக பிரித்து படமாக்க இயக்குனர் முடிவு செய்தார். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் ரிலீஸ்.
ஆக உள்ளது.
ஆக உள்ளது.
ஆக உள்ளது.
பெயர் மாற்றம் நடிகைகளுக்கு கை கொடுக்கிறதா?
12:39
ram
ராசி, சென்டிமென்ட், நியூமரலாஜி, வாஸ்து போன்ற இன்னும் என்னென்ன இருக்கிறதோ, அவ்வளவும் சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இன்றியமையாத விஷயமாகி விட்டது. பெயரை மாற்றியும், தோற்றத்தை மாற்றியும், மூக்கு ஆபரேஷன் செய்தும், எப்படியாவது முன்னணி இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று துடிக்கின்றனர். அந்தவகையில் பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை இப்போது அதிரடியாக மாற்றி வருகின்றனர்.
பல படங்களில் நடித்துள்ள சுனேனா, இப்போது அனுஷா என்று மாறியுள்ளார்.
வசுந்தரா, அதிசயா என்ற பெயரில் நடித்தார். ஒர்க்கவுட் ஆகவில்லை. வசுந்தரா கஷ்யப் என்ற பெயரில் நடிக்கிறார்.
அமலா பால், அனகா என்ற பெயரில் சில படங்களில் நடித்தார். ‘மைனா’ அவருக்கு மைலேஜ் கொடுக்க, மீண்டும் அமலா பால் ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் பிசியாக இருக்கிறார்.
சரண்யா, சரண்யா நாக் என்று மாறினார். ஹன்சிகா மோத்வானி, இனி மோத்வானியைப் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லி விட்டார்.
மனோசித்ரா, நந்தகி ஆனார். ஒர்க்கவுட் ஆகாத நிலையில், மனுமிகா என்ற பெயரில் நடித்தார். இப்போது மனோசித்ரா ஆகியிருக்கிறார்.
சுஜா, சுஜா வாருனீ என்று பெயரை மாற்றியுள்ளார்.
ஹாசினி, இப்போது சாரிகா ஆகிவிட்டார்.
‘பேராண்மை’ வர்ஷா, அஸ்வதி என்ற பெயரில் நடிக்கிறார்.
மோனிகா, மலையாளத்தில் பார்கவி என்ற பெயரில் நடிக்கிறார்.
ஷாம்னா காசிம் முதலில் ஷாம்னா, பிறகு தாமரை என்ற பெயர்களில் நடித்தார். எதுவும் ஒர்க்கவுட் ஆகாததால், பூர்ணா என்று மாறிவிட்டார்.
மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம். ‘அழகன் அழகி’ ஆருஷி, தற்போது ஆருஸ்ரீ என மாறியுள்ளார்.
‘அழகர்சாமியின் குதிரை’ அத்வைதா, கீர்த்தி ஆகிவிட்டார். கீர்த்திகா, ஹன்சிபா என பெயர் மாறியுள்ளார்.
‘ஊ ல ல லா’ திவ்யா பண்டாரி, கீர்த்தி பண்டாரி என்ற பெயருக்கு மாறி, மீண்டும் திவ்யா பண்டாரி ஆகிவிட்டார்.
மலையாளத்தில் ‘அபூர்வா’ என்ற பெயரில் நடித்தவர், தமிழில் ஓவியா என்ற பெயரில் நடித்து வருகிறார்.
பிரியங்கா கோத்தாரி, ‘ஜே ஜே’ மூலம் அமோகா என மாறி, பிறகு நிஷா கோத்தாரி என்ற பெயரில் நடித்து, இப்போது பிரியங்கா கோத்தாரியாக இருக்கிறார்.
தெலுங்கில் மீரா சோப்ரா பெயரில் இருப்பவர், தமிழில் நிலா என்ற பெயரில் நடிக்கிறார். மேக்னா சுந்தர் என்ற பெயரில் நடித்தவர், இன்று மேக்னா ராஜ் ஆகிவிட்டார்.
இவ்வாறு பல ஹீரோயின்கள் தங்கள் பெயரை மாற்றி நடித்தாலும், பெயர் மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்ததாகத் தெரியவில்லை. இந்த லிஸ்ட்டில் ஹன்சிகா, அமலா பால் மட்டுமே முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். மற்றவர்கள் தட்டுத்தடுமாறியபடிதான் இருக்கி றார்கள்.
விஞ்ஞானி பென்சிகர் ராஜன் தகவல் மங்கல்யான் விண்கலம் வரும் 29ல் விண்ணில் ஏவப்படும்!
11:40
ram
குமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் எல்எம்எஸ் மேல்நிலைப்பள்ளியில் உலக விண்வெளி வாரவிழா நடைபெற்றது. விழாவில் மகேந்திரகிரி விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி பென்சிகர் ராஜன் பேசியதாவது,
மங்கல்யான் விண்கலம் வரும் 29ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இது அதன் சுற்றுவட்டப்பாதையை சென்றடைய சுமார் 300 நாட்கள் ஆகும். இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருக்கிறதா? நீர்ப்பரப்பு இருக்கிறதா என ஆய்வு செய்யும். மீத்தேன் வாயு இருந்தால் அங்கு உயிர்கள் வாழ வாய்ப்புண்டு.
இந்தியா அனுப்பியுள்ள ஐஆர்எஸ் என்ற தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் காடு, மீன், கனிமவளங்கள் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். 70 நாடுகள் இணைந்து ஐநா சபை ஒப்புதலுடன் உலகம் முழுவதும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் மூலம் மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.