
தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ‘நான் மலாலா’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார். இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ‘நான் மலாலா’ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.தற்போது பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் ரூ.595க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை...