
மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் திருட்டு நகைகளை அதிகாரபூர்வமாக கடைகளில் விற்கும் போக்கு குறையும் என்பதுடன் தங்கம் வாங்குதல் மற்றும் நகை விற்பனை தொடர்பான தில்லுமுல்லு கணக்குகள் முடிவிற்கு வரும் என அரசு கருதுகிறது. தற்போது தங்க நகைகளின் தரத்திற்கு இந்திய தர நிர்ணய கழகம் (பீ.ஐ.எஸ்.,) ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறது. நகைகளில் பதிக்கப்பட்டுள்ள இந்த முத்திரையில் தங்கத்தின் தூய்மையை குறிக்கும் எண் (22 காரட்டிற்கு – 916), விற்பனையாளர் குறியீடு வருடத்தை குறிக்கும் சங்கேத எழுத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளன.இவற்றுடன் மேலும் பல விவரங்களை...