
நாய் நன்றியுள்ள பிராணி, செல்ல பிராணி, மோப்பம் பிடிக்கும், குற்றவாளிகளை அடையாளம் காட்டும், வேலை செய்யும், வீட்டை காக்கும் இப்படிதான் சொல்கின்றனர். ஆனால், மனிதர்களின் மூச்சுக்காற்றை வைத்து நுரையீரல் புற்றுநோயை கூட கண்டுபிடித்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும?நாய்களை வைத்து ஜெர்மனியில் உள்ள சில்லர்ஹோகி மருத்துவமனை விஞ்ஞானிகள் பல ஆண்டாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மனிதர்களை பாதிக்கும் நோய்களை மருத்துவக் கருவிகள் மூலம் கண்டறிவது போல், நாய்கள் மூலம் நோய் பாதிப்பை கண்டறிய முடியுமா என்பது குறித்து ஆராய்ந்த போது மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத வாசனையை கூட மோப்ப ஆற்றலால் நாய்கள் கண்டுபிடிக்கின்றன. சரியான பயிற்சி அளித்தால் மனிதர்களின்...